மீண்டும் விஜய்யுடன் இணைவேன்: முருகதாஸ்

vmuவிஜய்-முருகதாஸ் கூட்டணியில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். விஜய் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளில் ரூ.23.50 கோடி வசூலாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி’ படமும் சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து இப்படம் ஹிட்டாகியுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் முருகதாஸ்.

இந்த இரண்டு படங்கள் வெற்றி பெறவே மீண்டும் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக முருகதாஸ் கூறியுள்ளார். கத்தி படத்தை தொடர்ந்து சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து இந்தியில் படம் எடுக்கவுள்ளார் முருகதாஸ். இப்படத்தின் வேலைகள் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் படத்திலும், அதனை தொடர்ந்து அட்லி இயக்குவிருக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்கள் முடிந்த பிறகு முருகதாஸ்-விஜய் கூட்டணியில் மீண்டும் சூப்பர் ஹிட் படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்…?

Pawan-Kalyan-BDay11-350x212கத்தி படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தின் ரீமேக் விஷயங்களுக்கான பேச்சு வார்த்தை இப்போதே ஆரம்பமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கான முதல் நாள் வசூல், இதுவரை காணாத ஒன்று என்று உலகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய திரையுலகத்தின் வசூல் சாதனையில் இந்தப் படம் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்றுடன் முடியும் இந்த வார கலெக்ஷனிலேயே இந்தப் படம் படத்திற்கான அசல் செலவைத் தொட்டு விடும், இனி வரும் நாட்களில் வரும் கலெக்ஷன் படத்தின் லாபத்தில் சேரும் என்றும் சொல்கிறார்கள்.

இதனிடையே, கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாம். இந்தப் படத்தை டப்பிங் செய்து வெளியிடுவதை விட முன்னணி ஹீரோவை நடிக்க வைத்து ரீமேக் செய்து வெளியிட்டால் மிகப் பெரிய வசூலைக் குவிக்கலாம் என்றும் தெலுங்குத் தயாரிப்பாளர்கள் கருதுகிறார்களாம்.

கத்தி படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கும் தயாரிப்பாளரே படத்தை தெலுங்கிலும் நேரடியாக தயாரிக்க முடிவு செய்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தில் பவன் கல்யாண் நடித்தால் அவருக்கிருக்கும் இமேஜில் படம் மிகப் பெரும் வெற்றி பெறும் என்றும் கருதும் தயாரிப்பாளர்கள் இது சம்பந்தமாக அவரை அணுகியிருக்கிறார்கள் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.