தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதுதான் ஸ்டுடியோ க்ரீன் பேனரில் அவர் நடிக்கும் கடைசிப்படம். 25 கோடி சம்பளம் பெற்றுக் கொண்டு மாஸ் படத்தில் நடிக்கும் சூர்யா, இப்படத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் கடன்களை அடைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார்.
மாஸ் படம் வெளியான அதன்பிறகு கே.இ.ஞானவேல்ராஜா இந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தில் தற்போது இணை தயாரிப்பாளராக இருக்கும் எஸ்.ஆர்.பிரபுவை நிர்வாகியாக வைத்துக் கொண்டு ஸ்டுடியோ க்ரீன் பேனரை ஸோலோவாக அண்டர்டேக் பண்ண இருக்கிறார் நடிகர் கார்த்தி.
சூர்யாவோ தனக்காக 2டி என்ற நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார்.
மாஸ் படத்தில் நடிப்பதோடு இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தின் வேலைகளையும் கவனித்து வருகிறார் சூர்யா.
ஹவ் ஓல்ட் ஆர்யூ மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்கை 2டி தயாரிக்கிறது. இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஜோதிகா நடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்த கேரக்டரை தமிழில் ரஹ்மான் ஏற்று நடிக்கிறார்.
இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஹ்மானே குறிப்பிட்டுள்ளார்.
மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார்.
இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை சந்தோஷ் நாராயணனிடம் வழங்கியுள்ளார் சூர்யா.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இது ஒரு முக்கியமான செய்தி நாடுக்கு ரொம்ப அவசியம்,அங்கு 5உயிர் பலியாக போகுது இலங்கையில்…..தென் இந்திய நடிகர்களே ஒன்று சேருங்கள் தமிழன் பலம் என்னவென்று காடுங்கள் இந்திய அரசாங்கத்திற்கும்,இலங்கை அரசாங்கத்திற்கும்.சொம்மா ஐ ,கத்தி,பூஜை 25 கோடி ,150 கோடி,200 கோடி சொல்லிகிட்டு இருக்காதிங்க கடுப்பா ஆயிருவோம்,