தமிழ்த் திரையுலகை ஸ்தம்பிக்க வைக்கப் போகும் படங்களாக ‘லிங்கா மற்றும் ஐ’ படங்கள் அடுத்த மாதங்களில் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களின் வியாபாரம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் ‘ஐ’ படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆகியிருக்கும் என இயக்குனர் ஷங்கர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.
‘லிங்கா’ படத்தின் பட்ஜெட் ரஜினிகாந்தின் சம்பளத்தை மட்டும் தனியாகக் கணக்கிட்டால் அதுவும் 100 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். விரைவில் தமிழில் இந்தப் படங்களின் வியாபாரப் பேச்சுகள் முடிவடைந்து விட வாய்ப்புள்ளது.
அதே சமயம், தெலுங்கில் ‘ஐ’ படத்தின் டப்பிங் உரிமை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு விட்டது. இப்போது படத்தின் ஏரியா வாரியான வியாபாரம் ஆகியுள்ளதாம். குறிப்பிட்ட வினியோக ஏரியாவான கிருஷ்ணா மாவட்டத்தில் ‘ஐ’ படம் சுமார் 2.50 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம்.
அந்த ஏரியாவைப் பொறுத்தவரையில் இதுவரை 6 படங்கள் மட்டுமே 2.50 கோடிக்கு மேல் வசூல் செய்து கொடுத்துள்ளதாம். அப்படியிருக்க ஒரு தமிழ் டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளது தெலுங்கு வினியோகஸ்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளதாம்.
அடுத்து ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படமும் தெலுங்கில் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து தெலுங்குத் திரையுலகில் தமிழ் டப்பிங் படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை தெலுங்குத் திரையுலகம் வியப்பாகப் பார்த்து வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியான படங்களில், என்னை கவர்ந்த படங்களான சதுரங்க வேட்டை, வெண்நிலா வீடு பட வரிசையில், கடைசியாக வந்த படம் ரெட்ட வாலு. வளரும் இழைய சமுதாயமும், குடும்ப உறுப்பினர்களும் பார்க்க வேண்டிய படம். வணக்கம்.