சென்னை: நகைச்சுவை நடிகர் மகாதேவன் மரணம் அடைந்தார். தேவர் மகன், விசில், ரோஜா கூட்டம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை இரட்டையர்களாக நடித்தவர்கள் சகாதேவன்-மகாதேவன்.
இவர்களில் சகாதேவன்(44) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந் தார். மகாதேவன்(42) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதில் அவரது கால் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
உடல் நிலை மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அன்பரசி(16) என்ற மகளும் உள்ளனர். மகாதேவன் உடல் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இறுதி சடங்கு இன்று நடக்கிறது.
சீக்கு வந்தால் …………….என்ன செய்வது ..