நாட்டின் தலைச் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி கடந்த 18.11.2014 அன்று தமிழகத்தில் தனது சொந்த ஊரான செஞ்சியில் காலமானார். அவருக்கு வயது 69 ஆகும்.
யாப்பிலக்கணத்தில் தலைச் சிறந்த கவிஞர் என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கவிஞர் தீப்பொறி சிலாங்கூர், கோலாசிலாங்கூர் அருகில் உள்ள புக்கிட் ரோத்தான், ரோஸ்வெல் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவராவார்.
தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைக் கற்ற இவர் பின் அதே தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினார். பின்னர் பத்தாங் பெர்ஜுந்தை, மேரி தோட்டத்திற்கு இடம் மாற்றலாகி, அத்தோட்டத்தில் வேலை செய்தார். அதன் பின்னர் பத்தாங் பெர்ஜுந்தை, பெர்ஜுந்தை ஈயச் சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். தோட்டத்தில் கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த ஆட்டக்காரராகவும் அவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1976-ஆம் ஆண்டு கோலாலம்பூருக்கு வந்த அவர், ஜாலான் அம்பாங்கில் உள்ள தமிழ் நேசன் நாளிதழில் பிழைத்திருத்தும் பகுதியில் வேலை செய்து வந்தார்.
தோட்டத்தில் இருக்கும் போதே தந்தை பெரியாரின் எழுத்துகள் மற்றும் பேச்சுகளில் மூலம் தீப்பொறி பெரிதும் ஈர்க்கப்பட்டார். மலேசியத் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு சாதி ஒழிப்புப் போராட்டம், சீர்திருத்த திருமணங்கள் போன்றவற்றில் பங்கு கொண்டவர்.
நல்ல தரமான கவிஞர்கள் உருவாக வேண்டும் என்பதில் தீவிர போக்கு கொண்டிருந்த அவர், தமிழ் நேசனில் வேலை செய்து கொண்டே, அவரது பெயரிலேயே பொன் பாவலர் மன்றம் என்ற கவிஞர் பட்டறை இயக்கத்தை நடத்தி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யாப்பிலக்கணத்தையும் கவிஞர் பட்டறையையும் நடத்தி வந்தார். அவரிடம் யாப்பிலக்கணத்தைக் கற்று உருவான பத்து கவிஞர்கள் இன்னமும், அவர்களின் பெயருக்கு முன் தங்கள் குருவான பொன்னுசாமியை நினைவுக்கூரும் வகையில் பொன் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் அண்மையில் மறைந்த கவிஞர் பொன் நாவலன் குறிப்பிடத்தக்கவர்.
அவரது கவிதைகள் அனல் பறக்கக்கூடியவை என்பது எழுத்தாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். தமிழ் நேசனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை ஞாயிறு பதிப்பில் எழுதியுள்ளார். இவரது முதல் நூல் தீப்பொறி என்பதால் அவரது பெயருக்கு முன் தீப்பொறி என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார். இதுவரை 5 கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
வானொலியில் இடம்பெற்று வந்த கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் தீப்பொறி முக்கிய பங்காற்றியுள்ளார். ஆகக்கடைசியாக இவர், மலேசிய நண்பன் நாளிதழில் பிழைத்திருத்தும் பகுதியில் பணியாற்றி வந்தார். இவருக்கு பொன் கோமகன், பொன் கோமளம், பொன் கோகிலம் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தன்மானத்தின் சின்னமாகவும் சுயமரியாதையைப் பின்பற்றுபவராகவும் திகழ்ந்த இவர், முன்கோபம் கொண்டவர். தீப்பொறிகளைச் சிந்தனையில் வைத்துச் சிறகடித்தவர். மூச்சால் உணர்வுகளைச் சுவாசித்து உணர்வுகளைப் பேனா முனையால் பதிவு செய்தவர். முரண்பாடுகளுடன் முட்டி மோதிய இவரை வேண்டாதவரும் விரும்ப வேட்கை கொள்ள வைத்தவை அவரது பதிவுகள்தான். சுயநலத்திற்கு அப்பாற்பட்ட வகையில் தமிழர்களின் தாகத்தைத் தனது மூச்சாக கொண்டிருந்த அவர் நமக்கான பாரதியாவார்.
அன்னாரின் பிரிவால் துயருரும் அவர்தம் குடும்பத்தினருக்குச் செம்பருத்தி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அவரை ‘பாரதி’ என்று எழுதிவிட்டீர்களே….வழக்கம்போல யாராவது அவர் ஒரு விஞ்ஞானியா? என்று கேட்டுவிடப் போகிறார்கள். காலதாமதமாக வந்திருந்தாலும் நல்ல நினைவுக் கட்டுரை. கூடுதல் கொசுறு: மின்னல் எப்.எம்.மில் (சுறுசுறுப்பான) தயாரிப்பாளராக, அழுத்தம் திருத்தமாக பிழையறத் தமிழ் பேசும்) அறிவிப்பாளராக பணிபுரியும் பொன்.கோகிலம் அன்னாரின் மகள் தான்.
அவர் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். இவர் போன்றோர் தம் பிரிவுக்கு முன்னர் தமது தமிழ் ஞானத்தை மற்றவற்குக் கொடுத்து சென்றது பாராட்டப்படவேண்டியது.
அவரை ‘பாரதி’ என்று எழுதிவிட்டீர்களே….வழக்கம்போல யாராவது அவர் ஒரு விஞ்ஞானியா? என்று கேட்டுவிடப் போகிறார்கள். காலதாமதமாக வந்திருந்தாலும் நல்ல நினைவுக் கட்டுரை. கூடுதல் கொசுறு: மின்னல் எப்.எம்.மில் (சுறுசுறுப்பான) தயாரிப்பாளராக, அழுத்தம் திருத்தமாக பிழையறத் தமிழ் பேசும்) அறிவிப்பாளராக பணிபுரியும் பொன்.கோகிலம் அன்னாரின் மகள் தான். தீப்பொறியாரின் உடலுக்குத்தான் மறைவு. தமிழ் உள்ளவரை அவரின் புகழும் வாழும். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை.
நம் நாட்டு தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றியவர். தம் பிள்ளைகளுக்கும் முத்தான தமிழில் பெயர் வைத்துள்ளார். பொன் கோகிலத்தின் தகப்பனார் என்று RTM வானொலியில் செய்தியைக் கேட்ட பொழுது. மனம் வருந்தியது. அன்னாரின் உயிர் சாந்தி அடைய பிராத்திக்கும் அதே வேளையில், அவர்தம் குடும்பத்தினருக்கும் எமது அழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஐயா தீப்பொறியாரின் மறையினால் துயரத்தில் ஆழ்ந்த்திருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழ் நாழிதழ்கள் மீது கொண்ட கோபத்தினால் சில ஆண்டுகளாக தமிழ் நாழிதழ்களை வாங்குவதும் இல்லை; வாசிப்பதுமில்லை. அதன் காரணமாக என் கவிதை ஆசிரியனின் மரணச் செய்தியை அறியாமல் போய்விட்ட பாவியானேன். கவிதையை அணுவணுவாக ரசிக்கக்கூடிய நல்ல பகுத்தறிவுப் பாசறை கவிஞர். பெரியார் மீது அளவில்லாத மரியாதை கொண்டவர். அவரைக் குறித்து கவிதை ஒன்று எழுதும் வாய்ப்பினை அவர் எனக்கு வழங்கிய போது நான் அவரைக் குறித்து பாடிய கவிதையை காணிக்கையாக்குகிறேன்.
சூரியனாய்ச் சுட்டவன்
—————————–
சூரியனாய்க் கவிஞரிடை உதித்த வன்யார்?
சுடுதணலாய்ப் பழைமைகளைச் சுட்ட வன்யார்?
ஆரியரின் கொடுமைகளை எதிர்த் தவன்யார்?
ஆணவத்தின் கொடுமுடியை அசைத்த வன்யார்?
வீரியத்தை இளையரிடை விதைத் தவன்யார்?
வெடிமருந்து கவிதைகளால் துளைத்த வன்யார்?
காரிருளை விரட்டவந்தக் கதிர வன்யார்?
கவிக்கனலாம்… தீப்பொறியாம்… பொன்னு சாமி!
*************
பெரியாரே இவனுக்குத் தலைவன் ; எந்தப்
பேடிக்கும் இவன்தொண்டன் அல்லன் ; சாதி
சரியாமல் காப்போர்க்குப் பகைவன் ; என்றும்
சமுதாய நலன்பேணும் மறவன் ; பொய்மை
அரியாச னம்ஏற சகியான் ; ஈனர்
அடிவருடி உயிர்வாழ நினையான் ; மக்கள்
அறியாமையே கடவுள் ஆயின் ; அஃதை
அறிவாலே இவன்சாடி வெல்வான்; மண்ணில்
*************
எவனுக்கும் இவன்வளைந்த தில்லை ; எந்த
எதிர்ப்புக்கும் இவன்பணிந்த தில்லை ; சின்ன
தவறுக்கும் இடமளித்த தில்லை ; யார்க்கும்
தப்பான வழிசொன்ன தில்லை ; நாட்டின்
அவலத்தை இவன்சகித்த தில்லை ; வாழ்வில்
அசிங்கத்தை இவன்சுவைத்த தில்லை ; என்றும்
சவம்போல இவன்வாழ்ந்த தில்லை ; தீமை
சதிராட இவன்பொறுத்த தில்லை ; இல்லை!
***************
இன உணர்வும் மொழியுணர்வும் இல்லா கோழை
எதற்கடா உயிர்வாழ்க்கை என்பான் ; கூட்டு
மன உணர்வு இல்லாத பேர்க்கு மண்ணில்
மரியாதை மதிப்பென்ன என்பான் ; பெட்டைத்
தனமிகுந்த தொடைநடுங்கி களுக்கும் இங்கே
தன்மானம் எங்கிருக்கக் கூடும் என்றே
மனங்கொதிப்பான் சினம்வளர்ப்பான் ; அந்தத் தீயில்
மன்பதையைச் சுண்டிடுவான் பொன்னு சாமி!
**************
இந்தக் கவிதையைப் பெற்றுக்கொண்டு. ” சிறுத்தையே… சீறி எழு! ” என்று என்னை வாழ்திய இந்த மலேசிய பாரதிதாசனை இன்று திரும்பிப் பார்க்கிறேன். என் இதய இமயம் சாய்ந்ததே…. என்ன செய்வேன்!
Tamilan
தமிழன். தமிழ் பேப்பரை வாங்காமல் தமிழன் என்று சொல்லீ கொள்ள தகுதியெல்லை.
மிஸ்டர் கும்கி… இப்போதெல்லாம் தமிழ் நாளிதழில் முதலில் தமிழிருக்கிறதா? தமிழர்தம் பண்பு அதில் பிரதிபளிக்கிறதா? என்பதை தெரிந்துகொண்டு கருத்தெழுதுங்கள். இன்றைய தமிழ் நாளிதழ்களைப் படித்தால்தான் தமிழன் என்றால் … அப்படிப்பட்ட அறிவாளி தமிழனாக நானிருக்கமாட்டேன். முதலில் உங்களைப் போன்ற எழுத்துப் பிழைகள் எங்கிருந்து தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றீர்கள் என்று சொல்லும். முதலில் உங்களின் பெயரை நல்ல தமிழ்ப் பெயராக மாற்றுங்கள். குருத்திலைகள் பழுத்த இலைகளுக்கு பாடம் நடத்தும் முன் நன்கு யோசித்த பின் கருத்திடுங்கள். தகுதியைப் பற்றி பேசாதீர்கள்.
பகுத்தறிவு பகலவன், வென்ந்தாடி வேந்தன் பெரியாரின் கொள்கைவாதியான, தீப்பொறி பொன்னுசாமி அவர்களின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகிற்கும், கவிஞர் உலகிற்கும் விளைத்த பேரிழப்பாகும் ! தமிழ், தமிழர், சுயமரியாதை, சமுதாயச் சிந்தனை, பகுத்தறிவு சிந்தனை போன்றவையே தீப்பொறியார் கவிதைகளில் பாடுபொருளாக அமைந்து, மேலோங்கி நிற்கும். அன்னாரின் கவிதைகளில் அனல் பறப்பதுபோலவே, அவர் பேச்சும் அப்படியே அமைத்திருக்கும். தீப்பொரியர் தாம் கொண்ட கொள்கையை, எதற்காகவும், எக்காரனுத்துக்காகவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் மாற்றிகொளாத, துடிப்புமிக்க இலட்சியவாதி! தாம் வாழ்ந்த காலத்தில், பொன் பாவலர் என்ற அமைப்பின் மூலம் மலேசியத்தில் கவிஞர்கள் பலரை உருவாக்கிய பெருமைக்குரிய தீப்பொறியாரை, 1966 ஆம் ஆண்டு ஈப்போவில் முதன் முறையாக சந்தித்தேன். ஆண்டுகள் பல ஓடினாலும, அந்த சந்திப்பு எதோ நேற்று நடந்தது போலவே என் நினைவில் நிழலாடுகிறது. இந்த ஆண்டு படைப்பு உலகுக்கு துன்ப ஆண்டு என்ரே சொல்லவேண்டும். ப. சந்த்ரகாந்தம், மு. அன்புச் செல்வம், பொன் நிலவன், கோவி மணிதாசன், சீனி நைனா முஹம்மது… இப்படி ஒருவர் பின் ஒருவராக இயற்கை எய்தியது எண்ணி மனம் கனக்கிறது. பாவலரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்த்த அனுதாபம்.
பாவலர் தீப்பொரியாரின் ஆத்மா சாந்திபெற இயற்க்கையை வேண்டுகிறேன்.
தமிழரே தங்களின் கவிதை தீப்பொறியாக தெரிக்கிறது. மனம் கனக்கின்றது,
உலகை பற்றி அறிந்து கொள்ள ஆங்கில பத்திரிகை வாங்கி படிக்கிறேன்.தமிழன் என்ற உணர்வோடு மறைய, தமிழினத்தின் வாழ்க்கையை அறிந்துகொள்ள அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி மறைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ் பத்திரிக்கைகளை வாங்கி படிக்கிறேன்.
ஒவ்வொரு ம.இ.க. தலைவனுக்கும் தனித்தனியாக துதி பாடும் தமிழ் பத்திரிக்கைகளை எங்கள் பணம் போட்டு வாங்க நாங்கள் என்ன கூலிப்படையை போன்று மதி கெட்டவர்களா?.
நன்றி தேனீ… தமிழர்கள் தன்மானம் உள்ளவர்களாகவும் ,இன உணர்விலும், மொழி உணர்விலும் மேம்பட வேண்டும் என்று விரும்பிய மாமனிதர். தமிழ்க் கவிதையின் வெளிப்பாட்டு உத்திகளப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார். கவிதை என்றால் இவருக்கு அவ்வளவு பிரியம். காரைக்கிழாரின் கவிபுனையும் உத்தியை வெகுவாக பாராட்டுவார். “காரைக்கிழார் கவிதையை உன்னிப்பா பாருங்க சார். அவர் கவிதையிலே பளீரென ஒரு வரி தெரிக்கும். அந்த ஒரு வரி அவரது கவிதையையே தூக்கி நிறுத்தும். நான் சொக்கிப் போய்விடுவேன். இதை எல்லாம் கவனிக்க முடியலனா கவிஞனாக முடியாது சார் என்பார். தாம் இலக்கியத்துறையில் வெல்ல பட்ட சிரமத்தையும், இலக்கிய உலகில் ஆதிக்க சக்திகளின் தடையை உடைத்துக்கொண்டு வெற்றி பெறுவது எப்படி? ” என்றெல்லாம் எனக்கு தீப்பொறி அன்று சொன்னது இன்றும் மனக்காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது . வாழ்க்கையில் வந்த சிரமத்தை தன் அறிவுபூர்வமான முன்னெடுப்புகளால் வெற்றி பெற்றவர் தீப்பொறி. தன் மணைவியையும் பிள்ளைகளையும் வெகுவாக நேசித்தவர் தீப்பொறி. அவர்களுக்காக கடுமையாக உழைத்தவர். பெரியார் எப்படிப்பட்ட தலைவன் தெரியுமா சார்! அவர் போல ஒரு தலைவரை நாம் பார்ப்பது அபூர்வம் சார் என்பார். தமிழரின் பொங்கள் நாள்தான் அவர் குடும்பத்திற்கு திருநாள். விருந்து கொடுப்பதும் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வதும் பொங்கள் நாளில் அவருக்கு பிடித்தமான ஒன்று. தமிழன் தமிழனாக தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று உண்மையாகவே விரும்பிய நல்ல பகுத்தறிவுவாதி. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்பது உண்மையானால் …. தீப்பொறிக்கு மரணமே இல்லை!
தமிழனின் கூற்றை நானும் ஆதரிக்கிறேன். மலேசியத் தமிழ் நாளிதழ்களை நானும் வாங்குவதில்லை, காரணம் அரசியல் செய்திகளே.
தமிழனின் கூற்றை நானும் ஆதரிக்கிறேன். மலேசியத் தமிழ் நாளிதழ்களை நானும் வாங்குவதில்லை, காரணம் அரசியல் செய்திகளே. தீப்பொறியாரின் மறைவையொட்டி அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறேன்.
தமிழனின் கவிதை மிகச் சிறப்பு..! வாழ்த்துக்கள் ஐயா..! நாட்டில் ஜாதியை வளர்ப்பதற்கு தமிழ் ஏடுகளும் துணைப் போகின்றன விளம்பரம் என்ற பெயரால்..?
தீபொறியார் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கல் !
நானும் தமிழ் பத்திரிகை வாங்குவதை தவிர்த்து வருகிறேன்
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கட்டும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தேறுதலும் உரித்தாகுக.
பொன் கோகிலம், மனச்சாந்தி பெற இறைவனை இறைஞ்சுகிறேன்.
பீட்டர் ஜான்சன்
எங்கள் மலேசிய பாரதி திபொறி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறன் .
ஐயாவை பிரிந்து துன்பத்தில் வாடும் குடும்பத்தார்க்கும் சகோதரி போன்கொகிலத்துக்கும் எம் ஆழ்ந்த இரங்கலை செம்பருத்தி ஊடாக தெரிவித்துகொள்கிறேன்
கவிதை நான் நேரடியாக கேட்ட மரபு கவிதை என்றால் தீப்பொறியின் கவிதைதான் ,ஒவ்வொரு வரியும் தீயை அறிவு
தீயை கக்கியது ,பாரிதியாரை நான் நேரில் பார்த்ததில்லை அனால் மலேசிய பாரதி தீப்பொறியை பார்த்ததால் நானும்
உங்களைபோல் பெருமைபடுகிறேன் ,செம்பருத்திக்கு நன்றி .
தேனீ உண்மைதான் இப்போது தமிழ் பத்திரிகை பாதை மாறி
சென்றுகொண்டு இருக்கிறது ,ஒன்று இரண்டு பத்திரிக்கை இருந்த போது சமூதாயம் உருப்படியாக இருந்தது ஆனால்
இப்போது 7 பத்திரிக்கைகளாக வந்தவுடன் என்ன செய்தியை
எழுதுவது என்று தெரியாமல் டத்தோ பழனிவேலை பதவியில் இருந்து ஒழித்துகட்ட தினக்குரலும் ,பழனிவேலை ஆதரித்து விஸ்கி யின் வாரிசை கொண்டு வர மக்கள் ஓசையும் ,முஸ்லிம்களை மட்டும் பெருமை படுத்த நண்பனும் , பி.என் அரசாங்கத்தை சிலாங்கூரில் மீண்டும்
ஆட்சிக்கு கொண்டு வர தாய்மொழியும் ,நம்நாடும் , குருஜிக்களை ஒழித்து க்கட்ட தமிழ் மலரும் செய்திகளை
போடுகின்றன இந்த குப்பை செய்திகளை 1.30 காசு கொடுத்து வாங்கினால் தமிழ் வளராது ,நைனா
அனாருக்கு என்னுடைய எமது ஆழ்ந்த இரங்கல்!
காவிய கவிக்கு இரங்கல் பா
மலேசியாவின் மரபுக் கவியாம்
தீப்பொறியாக மாறிய கவியாம்
பாரதியின் பதியக் கவியாம்
திராவிடம் சுமந்த கவியாம்
சுயமரியாதை கண்ட கவியாம்
தமிழ் திருத்தக் கவியாம்
கவியரங்கம் கண்ட கவியாம்
தமிழர் தாகத்தை மூச்சாக சுமந்த கவியாம்
மண்ணுலகம் மறந்த கவியாம்
மண்ணை விட்டுச்சென்ற கவியாம்
மண்ணுலகம் மறவாக் கவியாம்
நின் பிரிவு அனைவருக்கும் சொந்தமே
என்றும் அழியா புகழின் சங்கமத்தில் .
உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தீப்பொறி இல்லை என்றால் தான் வெகுவாக நேசித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு மலேசியாவிலே பாரதிதாசன் நூற்றாண்டு விழாவே நடந்திருக்காது. அவர் சொன்னார்… ” தமிழகத்திலே பாரதிதாசனுக்கு விழா எடுக்க திமுக ஆட்சியில் இல்லை. மற்றவர்கள் புரட்சிக் கவிஞருக்கு பெரிய அளவில் விழா எடுக்க அந்த நாட்டிலே யாருமில்லை. பொன் பாவலர் மன்றத்திலும் நிதி இல்லை.நாமாகவும் தனியாக விழா எடுக்க முடியாது. ஆதனால்தான் டத்தீனின் ( சாமிவேலுவின் துணைவியார்) உதவியை நாடினேன். அவரும் சம்மதித்தார். அதனால்தான் அந்த நூற்றாண்டு விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு வித்திட்டவர் என்ற முறையில் கவிஞர் உலகம் நன்றியுடன் தீப்பொறிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும். இந்த விசயத்தில் சாமிவேலுவின் துணைவியாரையும் பாரட்டத்தான் வேண்டும்.
அண்ணன் தமிழன் அவர்களின் கவிப்பா பெற்றுக்கொண்டு ,சிறுத்தையே சீறி எழு என்று வாழ்த்திய, இந்த மலேசிய பாரதிதாசனை இன்று திரும்பிப் பார்க்கிறேன், என் இதய இமையம் சாய்ந்ததே என்ன செய்வேன் ,தங்கள் இதயம் படும் துன்பத்தில் நாங்களும் .
தம்பி உதயகுமார், தீப்பொறியோடு நானிருந்த அந்த பழைய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். அவர் பிரிந்த செய்தியை அறிந்த நாளிலிருந்து மிகுந்த மனசஞ்சலத்தில் உள்ளேன். அவருடைய நினைவுகள் என்னை வாட்டுகிறது.துன்பம் என்னை துளைத்தெடுக்கிறது. அவரோடு சேர்ந்து அவர் மணைவியும் கடினமாக உழைத்து பிள்ளைகளை வளர்த்து ஓர் உயர் நிலையை அடைந்தார். மற்றவர்கள் அவருக்கு உண்மையாக இருக்கவேண்டுமென விரும்புவார். மிகுந்த வறுமையிலும் மாதா மாதம் பொன் பாவலர் மன்ற நிகழ்வுகளை தன் செலவிலேயே நடத்துவார். ஜாலான் அம்பாங்கில் உள்ள பிலால் உணவகத்தின் மேல் தளத்தில்தான் எல்லா நிகழ்வுகளும் நடக்கும். அங்கே எத்தனை எத்தனையோ மலேசிய , சிங்கை, தமிழக கவிஞர்களுக்கு சிறப்பு செய்துள்ளார். மலேசியாவிலிருந்து ஒரு எழுத்தாளர்கள் படையையே அழைத்துக்கொண்டு போய் சிங்கை கவிஞர் அய்யா அமலதாசன் அவர்களின் அதரவோடு சிங்கப்பூரையே ஒரு கலக்கு கலக்கிய மிகப் பெரிய மனிதர் தீப்பொறி அவர்கள். நாங்கள் சிங்கையிலிருந்து விடைபெறும் போது உண்மையிலேயே அய்யா அமலதாசன் கண்கள் கலங்கினார். தீப்பொறி அவருக்கு ஆறுதல் சொன்ன காட்சி இன்று நினைத்தாலும் மனம் கனக்கிறது. சிங்கை கவிஞர்களில் கவிஞர் இளமாறனும், கவிஞர் பரணனும் கவிஞரின் நெருங்கிய நண்பர்கள். நீங்கள் சிங்கையில் இருந்துகொண்டு தீப்பொறியின் பெயரைச் சொன்னாலே போதும் இந்தக் கவிஞர்கள் உதவ ஓடோடி வருவார்கள். தீப்பொறி மீது அத்துனை அன்பு, பாசம், பரிவு. இன்னும் தீப்பொறி நடத்திய அதிரடியான இங்கே சொல்ல முடியாத சாகசங்களெல்லாம் உண்டு. எப்போதுமே சாதுர்யமாக நடந்துகொள்வார். ” சார்… இது அறிவாளிகளுக்கான உலகம் சார். இங்கே அறிவாளிகளால் மாத்திரமே வெல்ல முடியும் சார் !” என்பார். பேசிக்கொண்டே நம்மை உட்சாகப் படுத்தும் வார்த்தைகளை அவரது உதடுகள் உதிர்த்துக்கொண்டே இருக்கும். எதிர்ப்பது என்றால் அவர் அமைச்சரே என்றாலும் தீவிரமாக எதிர்ப்பார். டத்தோ ஶ்ரீ சாமிவேலு அவர்களின் தைரியத்தை வெகுவாக புகழ்வார். அதே வேளையில் வேறு எந்த கவிஞரும் காட்டாத எதிர்ப்பை தீப்பொறி சாமிவேலுவிடம் காட்டியுள்ளார். டத்தோ ஶ்ரீ சாமிவேலு தீப்பொறியை எல்லா எதிர்ப்புகள் மத்தியிலும் மிகவும் நேசிப்பார். இவை எல்லாம் தீப்பொறியை ஒரு சங்ககால புலவனின் நிலைக்கு உயர்த்துகிறதைப் பார்க்கிறேன். ஒருவரை யாராவது சாதி சொல்லி இழிவுபடுத்தினால் கவிஞரின் தீப்பொறி எரிமலையாக வெடிப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.” சாதியும் சாதிய உணர்வும் இந்த தமிழினத்தைச் சின்னாப் பின்னமாக்கிவிட்டது சார்..! ” என்று சொல்லி மனம் வருந்துவார். அந்தப் பொன் பாவலர் மன்றம் கண்ட பொன்மகனாரின் நினைவுகளிலிருந்து தப்பி ஓடுவது இயலாத காரியமாகும். அந்த அளவிற்கு இந்த உலகத்தில் தன்னை பதிவுப்படுத்திய அழகான கவிஞர் தீப்பொறி!
தேன்கவியில் ஆசானாய் கவிச்சொல்லித் தந்தாய்
தென்னகத்தில் மாண்டீரோ தீப்பொறியார் ஐயா!
தெவிட்டாத கவிச்சுவையை தேன்தமிழில் தந்து
தென்றலாய்ப் பாவெழுதி வென்றீரே ஐயா!
தேன்கவியில் ஆசானாய் கவிச்சொல்லித் தந்தாய்
பொன்னென்ற சொல்லையே மாணவர்க்கு ஈந்து
பொற்கவிதை தந்துவிட்டு வி ண்ணுலகம் சென்றீர்
தென்மொழியில் தீப்பொறியாய்ச் சுட்டவரும் நீரே
தேன்சுவையில் நகைச்சுவையைத் தந்தவரும் நீரே
அன்னாரின் மறைவின்போது தினக்குரலில் நான் எழுதிய கவிதை இது
மலேசிய நன்பனில் நானும் நீண்டகாலம் பணி புரிந்தேன்.
தீப்பொறியார் பற்றி அதிகம் அறிவேன் . அவரும் நானும் 1997 முதல் உயர்வோம் எனும் மாத இதழிலும் அவர் ஆசிரியராகவும் நான் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்தோம் . அதன் பின் அவர் விலகிவிட்ட பின் நான் ஆசிரியரானேன் . அதன் பின் 2005 முதல் அவரும் நானும் நன்பனில் பணிபுரிந்தோம். நாகரிகமான விவாதங்களில் அவருக்கு இணையாக வாதிடுவேன் . அந்நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. ஒருவர் இருக்கும் பொது அவரைப்பற்றிய மறக்க முடியவில்லை.
புலவர் கோமகள்
தமிழன் மற்றும் புலவர் கோமகள் … உங்கள் கவிதைகள் அருமை. கும்கி… தமிழ் பற்று இருப்பதால்தான் நாங்கள் தமிழ் நாளிதழ் வாங்குவதில்லை. தமிழ் நாளிதழ்கள் சில மானம் கெட்ட குருஜிக்கலின் அடிமை ஆகி விட்டன.
யாரு இவரு மைக்கல் ஜகசனா ?
அநோன்ம்யோஸ், தமிழ் பத்திரிகை எல்லாம் எவனொடயாயி இருந்து விட்டு போகட்டுமே, அந்த பத்திரிகையில் வேலை செயிபவர்கள் 90 சகவிதம் நமவர்தனே, அவர்கள் விட்டில் அடுப்பு எரிவது எப்படி, தமிழ் பத்திரிக்கை வாங்கமாட்டேன் என்று ஒரு தமிழனே சொன்னால் கேட்க்க அசிங்கமில்லை, அனாலும் நீங்கள் சொல்வதிலும் ஒரு உண்மையுண்டு தான், ஒரு தனிமனிதன் புகழ் படும் எழவுதான் எல்லா பத்திரிக்கையுளும் உண்டு.
கும்கி, சொன்னாலும் சொன்னீர்கள் நல்ல சொன்னீர்கள், நன்றி. {அந்த பத்திரிகையில் வேலை செய்பவர்கள் 90 சதவீதம் நமவர்தனே, அவர்கள் வீட்டில் அடுப்பு எரிவது எப்படி, தமிழ் பத்திரிக்கை வாங்கமாட்டேன் என்று ஒரு தமிழனே சொன்னால் கேட்க்க அசிங்கமில்லை} அமரர் தீப்பொறி பொன்னுசாமி – அவர்களும் மலேசிய நண்பன் நாளிதழில் பிழைத்திருத்தும் பகுதியில் பணியாற்றி வந்தார். எவரும் மலேசிய நண்பன் நாளிதழ் வாங்கவில்லை என்றால் எவ்வாறு அவருக்கு ஊதியம் கொடுத்திருப்பார்கள். தற்சமயம் நாட்டில் எழு (7) தமிழ் நாளிதழ்கள், இந்த நாளிதழ் ஓரு சிலரை சார்ந்தே உள்ளது. தமிழர்கள் அந்த ஒரு சிலரை பார்க்காமல் உங்களுக்கு பிடித்த நாளிதழை வாங்கி ஆதரவு தரலாமே. உங்களின் ஆதரவு ( RM1.00 – RM1.30/RM1.50) அந்த நாளிதழ் வழி ஜீவிக்கும் குடும்பத்துக்கு உதவியாக இருக்குமே. தமிழ் நாளிதழே இன்று நாட்டில் படைப்பாளர்கள் உருவாக ஒரு மேடையாக உள்ளது. உதாரணம் (அவரது கவிதைகள் அனல் பறக்கக்கூடியவை என்பது எழுத்தாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். தமிழ் நேசனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை ஞாயிறு பதிப்பில் எழுதியுள்ளார்.) மலேசிய நண்பன், தமிழ் நேசன் வழி அமரர் தீப்பொறி பொன்னுசாமி வாழ்ந்தார், தமிழ்க்கு பெருமை சேர்த்தார். இவரைப்போல் எத்தனை பேர் இருக்கிறார்களோ.
தமிழா என்றால் கண்டிப்பாக தமிழ் நாளிதழ்கள் வாங்கியாக வேண்டுமா ?.இன்றைக்கு 1.தமிழ் நேசன், 2, மலேசியா நண்பன், 3 மக்கள் ஓசை, 4,தினக்குரல் 5, நம் நாடு , 6. தமிழ் மலர், 7. தாய் மொழி என்ச்று 7 நாளிதழ்கள் உள்ளன.இதில் ஒரு நாளிதழ் கூட தமிழ் இனம் மொழி என்ற போராட்டத்தை முன் வைத்து செயல் பட வில்லை. அனைத்து நாளிதழ்களும் தத் தம் முதலிகளின் வயிட்ற்று பிழைப்புக்காக நடத்தப்படுகின்றன. யார் அந்த முதலாளிகள் 1. வேல் பாரி, 2. சிக்கந்தர் பட்ச மகன்கள் , 3. தன் ஸ்ரீ சுப்ரமணியத்தின் மகன் சுந்தர், 4. ஆதி குமானின் மகன் அருண், 5.டத்தோ கென்னத் ஈஸ்வரன், 6. ஓம்ஸ் தியாகராஜன், 7. கேவிஸ் மணியம்.
வேல் பாரிக்கும் இந்த சமுதயத்திக்கும் என்ன தொடர்பு, சிக்கந்தர் பட்ச மகன்களுக்கும் சமுதயதிக்கும் என்ன தொடர்பு, என்ன பயன், சுந்தர் சுப்ரமணியம் தமிழ் பள்ளியில் படிக்காத ஒரு தமிழ் மொழி துரோகி, அருண் ஆதி குமானின் மகன் தமிழ் பள்ளியில் படிக்காத தமிழ் மொழி துரோகி, டத்தோ கென்னத் ஈஸ்வரன் யாழ்பாணத் தமிழன், இந்தியனே அல்ல, ஓம்ஸ் தியாகராஜன் சதி வெ…. பிடித்த ஒரு தமிழன். இப்படி பட்டவர்கள் நடத்தும் நாளிதழை என் வாங்க வேண்டும்? என்று கும்கி நியாயமாக விளக்க வேண்டுகிறேன்.
அறவன் அவர்களே… தமிழர்கள் தமிழ் நாளிதழ்களை வாங்கி ஆதரிக்க வேண்டும் எனும் தங்களின் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன். தமிழர்களுக்கு வாழ்வளிக்கிறது என்பதற்காக தமிழுக்கும் தமிழனுக்கும் பயன்தராத செய்திகளைப் புறக்கணித்து, அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்களைப் பிரபளப்படுத்திக்கொள்வதற்காகவும், பிடிக்காதவர்களைத் தூற்றுவதற்காகவும், எதிர்ப்பவர்களை இன எதிரிகளாக சித்தரித்து மக்களிடம் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காகவும், எப்போதுமே மக்களைப் பைத்தியங்களாக்கும் எதிர்மறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அச்சேற்றுவதும், எதிர்கட்சியின் செய்தியை சின்னதாகவோ அல்லது போடாமல் தவிர்த்துவிடுவதும், அரசாங்கத்தின் காவடிகளாக செயல்படும் இதழ்களை ஏன் ஆதரிக்கவேண்டும்? சில தமிழர்களுக்கு சோறு போடுகிறது என்பதற்காக எவ்வளவு காலங்களுக்கு இந்த குப்பைகளைச் சகித்துக்கொண்டிருப்பது? ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி இந்தியர்களையே சீரழித்த சீனர்களிடம் நூற்றுக்கணக்கான தமிழர்கள் வேலை செய்து சோறு சாப்பிட்டார்கள். தமிழனுக்குக் கேடு செய்கிற தொழிலாக இருந்தாலும் தமிழர்களுக்குச் சோறு போடுகிறது என்பதற்காக அந்தக் கள்ளச்சாராயத் தொழிலை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமா? இன்றைக்கு சமுதாயத்தைச் சீரழிக்கிற மதுபாணம், புகையிலை, கஞ்சா, போதைமாத்திரை போன்ற தொழில்கள் மக்களுக்கு இரகசியமாகவும் தெரியும்படியாகவும் தீங்கு செய்யும் அதே வேளையில் சோறும் போடுகிறது. அதற்காக அந்தத் தொழில்களை ஆதரிக்க முடியுமா? அப்படித்தான் தமிழினத்தை அறிவுபூர்வமாக முன்னேற்ற முடியாத செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து , அரசியலில், பொருளாதாரத்தில், பொதுஅறிவில், விஞ்ஞானத்தில், சமூகவியலில் , இன உணர்வில் , மொழியுணர்வில், பகுத்தறிவில் பின்தங்கிப் போகும்படிச் செய்யும் அடாவடித் தன்னலமே நோக்கமாகச் செயல்படும் செய்தித்தாள்களுக்கு, சில ,தமிழர்களுக்குச் சோறு போடுகிறது என்பதற்காக ஆதரிக்க முடியாது. ஆதரிக்கவும் கூடாது. பணம் கொடுத்து வாங்குபவனின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் ஆதிக்க சக்திகளுக்கு வால் பிடித்துக்கொண்டு பணங்கொடுக்கும் வாசகனுக்கும், நம்பி இருக்கும் தன் இனத்திற்கும் பயனளிக்காதவற்றினை ஏன் ஆதரிக்க வேண்டும்? எனது குற்றச்சாட்டு கடுமையானதுதான்; ஒப்புக்கொள்கிறேன். எங்கள் தாத்தா அப்பா காலத்திலிருந்து , நாங்கள் இப்படித்தான் இருப்போம் ; யாருக்காகவும் எங்களை மாற்றிக்கொள்ளமாட்டோம் என்று பத்திரிகைகள் அடம்பிடித்தால் …. மானமுள்ள நல்லத் தமிழ் வாசகர்கள் இதைக் காலா காலத்திற்கும் சகித்துக்கொண்டு சில தமிழர்களுக்குச் சோறுபோடுகிறதே என்பதற்காக பணங்கோடுத்து ஆதரிக்கவேண்டுமா என்பதே என்போன்றோரின் வினா?
kumki அது காட்டில் வாழும் மிருகம் அதற்கு நாட்டில் வாழும்
மனிதர்களை பற்றி தெரியாது ,அது போல தமிழ் பத்திரிக்கைகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் kumki
90 சதவிகிதம் வேலை செய்யும் நம்மவர்களுக்குஆதாவது நிருபர்களுக்கு முறையாக சம்பளம் போடுவதில்லை தொழிலாளர் சேமநிதி வெட்டுவதில்லை ,பின்ன எப்படி
நிருபர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் ,செய்தி எடுத்து
விட்டு நம்மிடம் போக்குவரத்து காசுக்கு காத்துகொண்டு
இருப்பதை பார்க்க பரிதாமாக இருக்கும் ,என் நிகழ்ச்சி
முடிந்து இரவு 12.00 மணிவரை காசுக்காக காத்துகொண்டு இருப்பார்கள் , ஒருமுறை எனது நிகழ்ச்சியை நடத்தி ய ப்பிறகு , தமிழ் மலர் ,மலேசியநண்பன் , தமிழ் நேசன் ,மக்கள் ஓசை ,தினக்குரல் ,நம்நாடு ஆகிய 6 பத்திரிக்கை நிருபர்களுக்கு தலா 50 வெள்ளியை கொடுத்து விட்டு ,வீடு செல்ல முயன்ற போது மலேசிய நண்பன் நிருபர் தினக்குரல் நிருபரை கையேடு அழைத்து வந்து ,சார் எங்களுக்கு எல்லாம் 50 வெள்ளி கொடுத்தீர்கள் ,ஆனால் பாவம் தினக்குரல் நிருபர் அவருக்கு 5 மாதமாக சம்பளம் போடவில்லை அதனால் ஒரு 100.00 வெள்ளி கூட கொடுங்கள் என்றார் ,இவர்கள் நிலையை தெரியாமல் kumki நம்பவன் 90% வாழ்கிறார்கள் என்று சொல்கிறார் ,உங்களுக்கு தெரியுமா KUMKI இந்த 7 பத்திரிகைகளும் நிருபர்களுக்கு
வேலை செய்வதற்கான மாத சம்பள சீட் ,ஒப்பந்த கடிதம்
கொடுபதில்லை , இவர்களில் எந்த ஒரு நிருபராவது தொழில் அமைச்சுக்கு , தொழிலாளர் சேமநிதி வாரியத்திற்கு சென்றால் எல்லா பத்திரிகைகளும் இழுத்து சாத்த வேண்டிய
சூழ் நிலை வரும் ஆனால் தினக்குரலை டத்தோ சரவணன்
காப்பற்றி விடுவார் ,இல்லை என்றால் போட்ட பணம் கோவிந்தா தான் நைனா .ஆதலால் KUMKI நீங்கள் தமிழ் பத்திரிகையை வாங்குவது அந்த 7 பத்திரிகையின் பங்குதாரர் ,ஆசிரியர்களுக்கும் அவர்களுது பெண்டாட்டி பிள்ளைகள் சாபிடதான் ,நிருபர்களுக்கு அல்ல ,KUMKI நீங்கள் காட்டில் இருந்து இப்போது வந்த மாதிரி தெரியுது ,உங்கள் இடத்தில் உள்ள ஏதாவது ஒரு நிருபரை கேட்டு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் .நைனா .
தெனாலி அடிச்சா அது நெத்தி அடிதான். இதுவரை இரண்டு தமிழ் முஸ்லிம்கள் கடையில் தமிழ் ஓசை வாங்கப் போன இடத்தில் நண்பன் பத்திரிகை மட்டுந்தான் இருக்கு என்று சொன்னார்கள். தமிழ் ஓசையை அவர்கள் ஒதுக்குகின்றார்களா?. தமிழன்தான் இழிச்சவாயனோ?. என்னே அவர்களின் தமிழர் பற்று?.
கோபிகடையில் உக்காந்து ஓசியில் பேப்பர் படிக்கும் கம்மனடிக்களுக்கு காசு கொடுத்து தமிழ் பேப்பர் வாங்க வக்கு இல்லையானாலும் பேச்சில் கவுரவத்துக்கு ஒன்னும் குரச்சல்லிலை. தமிழை பழிக்கும் இவர்கெல்லாம் தமிழன் என்று சொல்ல வெக்கபடனும்.
தேன்கவியில் ஆசானாய் கவிச்சொல்லித் தந்தாய்
தென்னகத்தில் மாண்டீரோ தீப்பொறியார் ஐயா!
தெவிட்டாத கவிச்சுவையை தேன்தமிழில் தந்து
தென்றலாய்ப் பாவெழுதி வென்றீரே ஐயா!
தேன்கவியில் ஆசானாய் கவிச்சொல்லித் தந்தாய்
பொன்னென்ற சொல்லையே மாணவர்க்கு ஈந்து
பொற்கவிதை தந்துவிட்டு வி ண்ணுலகம் சென்றீர்
தென்மொழியில் தீப்பொறியாய்ச் சுட்டவரும் நீரே
தேன்சுவையில் நகைச்சுவையைத் தந்தவரும் நீரே
புலவர் கோமகள்
தேன்கவியில் ஆசானாய் கவிச்சொல்லித் தந்தாய்
தென்னகத்தில் மாண்டீரோ தீப்பொறியார் ஐயா!
தெவிட்டாத கவிச்சுவையை தேன்தமிழில் தந்து
தென்றலாய்ப் பாவெழுதி வென்றீரே ஐயா!
தேன்கவியில் ஆசானாய் கவிச்சொல்லித் தந்தாய்
பொன்னென்ற சொல்லையே மாணவர்க்கு ஈந்து
பொற்கவிதை தந்துவிட்டு வி ண்ணுலகம் சென்றீர்
தென்மொழியில் தீப்பொறியாய்ச் சுட்டவரும் நீரே
தேன்சுவையில் நகைச்சுவையைத் தந்தவரும் நீரே
அன்னாரின் மறைவின்போது தினக்குரலில் நான் எழுதிய கவிதை இது
மலேசிய நன்பனில் நானும் நீண்டகாலம் பணி புரிந்தேன்.
தீப்பொறியார் பற்றி அதிகம் அறிவேன் . அவரும் நானும் 1997 முதல் உயர்வோம் எனும் மாத இதழிலும் அவர் ஆசிரியராகவும் நான் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்தோம் . அதன் பின் அவர் விலகிவிட்ட பின் நான் ஆசிரியரானேன் . அதன் பின் 2005 முதல் அவரும் நானும் நன்பனில் பணிபுரிந்தோம். நாகரிகமான விவாதங்களில் அவருக்கு இணையாக வாதிடுவேன் . அந்நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. ஒருவர் இருக்கும் பொது அவரைப்பற்றிய மறக்க முடியவில்லை.
புலவர் கோமகள்
தேன்கவியில் ஆசானாய் கவிச்சொல்லித் தந்தாய்
தென்னகத்தில் மாண்டீரோ தீப்பொறியார் ஐயா!
தெவிட்டாத கவிச்சுவையை தேன்தமிழில் தந்து
தென்றலாய்ப் பாவெழுதி வென்றீரே ஐயா!
தேன்கவியில் ஆசானாய் கவிச்சொல்லித் தந்தாய்
பொன்னென்ற சொல்லையே மாணவர்க்கு ஈந்து
பொற்கவிதை தந்துவிட்டு வி ண்ணுலகம் சென்றீர்
தென்மொழியில் தீப்பொறியாய்ச் சுட்டவரும் நீரே
தேன்சுவையில் நகைச்சுவையைத் தந்தவரும் நீரே
அன்னாரின் மறைவின்போது தினக்குரலில் நான் எழுதிய கவிதை இது
மலேசிய நன்பனில் நானும் நீண்டகாலம் பணி புரிந்தேன்.
தீப்பொறியார் பற்றி அதிகம் அறிவேன் . அவரும் நானும் 1997 முதல் உயர்வோம் எனும் மாத இதழிலும் அவர் ஆசிரியராகவும் நான் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்தோம் . அதன் பின் அவர் விலகிவிட்ட பின் நான் ஆசிரியரானேன் . அதன் பின் 2005 முதல் அவரும் நானும் நன்பனில் பணிபுரிந்தோம். நாகரிகமான விவாதங்களில் அவருக்கு இணையாக வாதிடுவேன் . அந்நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. ஒருவர் இருக்கும் பொது அவரைப்பற்றிய குறைகளை மட்டுமே பேசுவோம் . அவரே மறைந்து விட்ட பிறகு அவருடை நல்ல நினைவுகளை மட்டுமே பகிர்வோம் . அதுதான் நம் பண்பாடு. சகோதரர் தீப்பொரியார் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற கவிதைகள் எதிர்கால நம் சந்ததிகளுக்கு அடையாளம் காட்டும்.
புலவர் கோமகள்
கும்கி யானை நாங்கள் தமிழர்கள் என்பதை உறுதி படுத்த
குப்பைகளை குவிக்கிற பத்திரிகைகளை வாங்க வேண்டும்
என்று காட்டில் இருந்து பட்டணம் வந்த யானையாரே உங்களுக்கு எந்த மடையன் சொன்னான் ,தமிழ் பத்திரிக்கைகள்
வராத காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா ,தமிழன் என்றால் அவனுக்கு தமிழர்கள் மீது
பற்றும் ,மொழி மீது பற்றும் இருக்க வேண்டும் ,தமிழ் நூல்களை வாங்கி படிக்க முடியாதவர்கள் நூலகத்திற்கு
சென்று தமிழ் இலக்கிய புத்தகங்களை இரவல் வாங்கி படிக்க வேண்டும் , கும்கி போடும் சாணியை அல்ல
தகுதியுள்ள பேப்பர்களை வாங்கினால் தமிழ் வளராது ,இருப்பினும் இப்போது தாய்மொழி என்று தரமான தமிழ் பத்திரிக்கை வந்துக்கொண்டு இருக்கிறது அதை வாங்கி படிக்கிறேன் இந்த பத்திரிக்கையாவது தொடர்ந்து நம் சமுதாயதிற்கு தேவையான செய்திகளை வழங்கும் என்ற
நம்பிக்கைதான் .தேனீ அக்கா கருத்து உண்மைதான் எங்கள்
வட்டாரத்திலும் 95 சதவிகிதம் முஸ்லிம் கடைகள் ,முஸ்லிம் சமுதாயம் நண்பன் பதிரிக்கைக்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார்கள் அவர்களுக்கு இருக்கிற ஒற்றுமை ஏன் நமக்கு இல்லை ,தமிழன் நினைத்தால் மலேசியா நண்பனை
புறகணிக்க முடியாதா முடியவில்லை என்றால் இனிமேல்
சோற்றில் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டாம் .
மானமிகு பாவலர் தீப்பொறி அவர்களின் மறைவையொட்டி அனுதாபம் தெரிவிக்க வேண்டிய நாம் ;அதை மறந்து விட்டு திசை மாறி போய்கொண்டிருக்கிறோம்? சரியா தோழர்களே?
ஒருவர் தவறினால் அவருக்கு அனுதாபம் சொல்லலாம். அன்னாருக்கு எம்பெருமானுடைய அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் .ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
தீப்பொறி அவர்கள் தமிழ் நேசனில் நீண்ட காலம் பணியாற்றியவர். அவரின் தமிழ்ப் புலமையை மதித்து அந்த பத்திரிகை முதலாளிகள் ாழும் காலத்தில் அவருக்கு எதுவும் செய்ததில்லை. உரிய அங்கீகாரமும் வழங்கியதில்லை. அதேபோல்தான் மலேசிய நண்பன் பத்திரிகையும். ஆனால். இற்ந்த பிறகு பெரிய சைசில் அனுதாபச் செய்தி போட்டுக் கொண்டார்கள். இது போன்ற தமிழ்ப்பற்றாளர்களை மதிக்காத பத்திரிகைகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தீப்பொறியுடன் ஒன்றாக வேலை செய்தவன் என்ற முறையில் அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்து அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் குப்புசாமிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.தமிழ் நாளிதழில் உழைத்தவர்களுக்கு முறையான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனையான செய்தி தான்.இன்று தமிழ் நாளிதழ்கள் அரசியல் லாபத்திக்காக நடத்தப்படுகிறது.இல்லாவிட்டால் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளும் இழுத்து முட வேண்டும் என்று ஈனத்தனமாக பேசிய கேவிஸ் தாய் மொழி என்று தமிழ் நாளிதழ் நடத்துவாரா ? அரசியலில் வயிறு வளர்க்க தமிழ் மொழி தேவை படுகிறது.இந்த நாட்டில் தமிழை வைத்து வயிறு வளர்க்கும் கூட்டம் என்றால் அது தமிழ் நாளிதழ்கள் முதலாளிமார்கள் தான்.இந்த 7 தமிழ் நாளிதழ்கள் முதலாளிமார்களில் ஒருவருக்கு கூட மொழி பற்று, இனப்பற்று கிடையாது.இவர்களின் பிள்ளைகள் கூட தமிழ் பள்ளியில் படிக்கவில்லை. தன் ஸ்ரீ சுப்ரா, டத்தோ ஸ்ரீ கேவிஸ், சிக்கந்தர் பாட்சாவின் மகன்கள், டத்தோ கென்ட் ஈஸ்வரனின் பிள்ளைகள், ஆதி குமானின் மகன் ஆகியோர்களில் ஒருவர் கூட தமிழ் பள்ளியில் படிக்காத தமிழின துரோகிகள்.இந்த துரோகிகளுக்கு ஏன் மானம் உள்ள தமிழர்கள் வங்கி படிக்க வேண்டும் என்பதை கும்கி நாகரிகமாக விளக்க வேண்டுகிறேன்.இணங்கு பதிவு செய்பவர்கள் பண்பான சொற்களை பயன் படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் மீண்டும் தமிழ் பதிரிக்கை பிரச்சனை ,சம்பளம் கிடைக்காத (தினக்குரலில் ) நிருபர்கள் மடையர்கள் ,5 மாதம் ,6 சம்பளம் கிடைக்காதவர்கள் ஏன் தொழில் வள அலுவகதிருக்கும் ,சேமநிதி வெட்டவில்லை என்று சொல்லும் நிருபர்களும் தொழிலாளர் சேமநிதி வாரியத்திற்கும் சென்று புகார் செய்யாமல் புலம்புவது ஏன் எல்லோரும் தமிழ் பத்திரிகையை இது வரை கோடி கணக்கில் நிருபர்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தை சுருடிகொண்டு ஓடி விடுவார்கள் , பொது நிவாரண நிதி என்று சொல்லி கோத்தா திங்கியில் 2007 ஆம் ஆண்டு மக்கள் ஓ… நிவாரண நிதி என்று கூறி பல லட்சம் வெள்ளியை தலைமையாசிரியர் எம்.ரா… இணைத்து பெரி…மி பத்திரிக்கை வசூல் செய்து விட்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு காசு கூட கொடுக்காமல் அந்த பணத்தை கொண்டு தமிழ் ம… பத்திரிக்கையை நடத்தும் பெரி…மி யை போல மற்ற பத்திரிக்கைகளின் ரகசியங்கள் விரைவில் வரும் அதுவரை பொறுத்திரு நைனா .தமிழ் பத்திரிக்கையை அயோக்கியர்களுக்கு துணை போகாதே நைனா.
யாரையா இவரு ??
mk இவன் தான் தமிழ் பித்தன் ,தமிழுக்கு துரோகம் செய்யும்
துரோகிகளையும் தமிழர்களின் துரோகிகளையும் அடையாளம்
கண்டு அவர்களின் முகதிரையை வெளிச்சம் போட்டு காட்டுகிறவன் .