அட்டகத்தி’ தினேஷ், கார்த்திக் ராஜு கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளது.
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருடன் போலீஸ். தினேஷ் இதில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.
இந்நிலையில் திருடன் போலீஸ் படத்தை தொடர்ந்து கார்த்திக் ராஜு இயக்கும் புதிய படத்திலும் தினேஷ் தான் நாயகன். இந்தப் படத்திற்கு உள்குத்து என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தை கெனன்யா ஃபிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரிக்கிறார். இவர் கார்த்திக் ராஜுவின் நண்பராம். இப்படத்திற்கான நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. -http://www.dinamani.com


























