பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(91) உடல் நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார்.
மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் திலீப் குமாருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக திலீப்குமாரை மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு காலமானார்.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் 1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பிறந்த திலீப்குமாரின் உண்மையான பெயர் யூசுப்கான். 1954 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது தோற்றுவிக்கப்பட்ட போது முதல் விருது இவருக்குத்தான் வழங்கப்பட்டது.
அதன்பிறகு 8 தடவை அவர் பிலிம்பேர் விருது பெற்றார். 1991ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது கொடுத்து கெளவுரவித்தது. 1994 ஆம் ஆண்டு பாபா தாதாசாகேப் விருது பெற்றார். கடந்த 2000 முதல் 2006 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் மிக உயரிய விருதான “நிஷன்-இ-இம்தியாஸ்” விருதை திலீப்குமாருக்கு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
தேவதாஸ், மதுமதி, மற்றும் கங்கா ஜமுனா உள்பட 60க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் திலீப் குமார்.
-http://www.dinamani.com
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.