உடல் உறுப்பு தானம் செய்தார் சூர்யா

சூர்யா தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார்.

தற்போதெல்லாம் நடிகர், நடிகைகள் பலர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருகிறார்கள். அந்த வகையில் கமல், சரத்துகுமார், த்ரிஷா உட்பட பலர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக ஏற்கெனவே ஒப்புதல் கொடுத்துவிட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகை அசின் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததோடு அதற்கான உறுதி மொழி பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.இப்போது அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த 2013ல் வெளியான சென்னையில் ஒரு நாள் என்ற படத்தின் இறுதியில் தோன்றும் சூர்யா அதில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசுவார். தற்போது அது வெறும் பேச்சல்ல என்பதை நிருபித்துவிட்டார். -http://www.dinamani.com/