நடிகர்களின் பாப்புலாரிட்டியை இப்போதெல்லாம் யூட்டியூப்தான் தீர்மானிக்கிறது. படத்தின் டீஸருக்கு எத்தனை ஹிட்ஸ் கிடைத்தது, எத்தனை லைக்ஸ் கிடைத்தது? இதை வைத்துதான் மாஸ் ஹீரோவின் மார்க்கெட்டே அளக்கப்படுகிறது.
அந்தவகையில் அஜீத்தின் பாப்புலாரிட்டிக்கு எந்த பங்கமும் இல்லை. என்னை அறிந்தால் டீஸர் இரண்டு தினங்களில் 20 லட்சம் ஹிட்ஸ்களை கடந்துள்ளது. ஆனால் இன்றுவரை ஐ படத்தின் ட்ரெய்லர்தான் எழுபது லட்சங்களை கடந்து முதலிடத்தில் உள்ளது.
லைக்ஸை பொறுத்தவரை என்னை அறிந்தால் முதலிடத்தில் உள்ளது. 42 ஆயிரங்களை கடந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஐ. அதன் பிறகுதான் கத்தி, லிங்கா எல்லாம் வருகின்றன.
என்னை அறிந்தால் 2015 ஜனவரி 8 திரைக்கு வருகிறது. -http://tamil.webdunia.com
இப்படியெல்லாம் பொய்கணக்கு சொல்லி தங்களது படத்துக்கு விளம்பரம் தேடும் சினிமா தந்திரம்.
இந்த சாதனையெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப்போகிறது? சினிமா பைத்தியம் தான் அதிகமாகும்!
SONY கம்பெனி ஒரு புதிய தொலைகாட்சி அறிமுகம் செய்யும் பொது 1 மாதத்தில் எத்தனை லட்சம் பெயர்கள் வாணி இருக்கிறார்கள் என்று சொளிவிடுவார்கள் இதுவும் ஒரு வியாபாரம்தான் ,புதிய தொலைகாட்சி எவ்வளவு விலை இருந்தாலும் பணம் கொடுத்து வாங்கிகிறோம் ,அதுபோலதான் சின்மாவும் ஒரு கம்பெனி ,அதில் உழைப்பவர்கள் ஏராளம் ,ஒரு படத்தை அறிமுகம் செய்வதில் தப்பில்லை ,இஸ்டம் இருந்தால் வாங்குங்க ,இல்ல பாருங்க ,இல்லை என்றால் மூ…. போங்க…………….
உலகத்திலே எவன் எவனோ சாதனை செய்கிறான் . இந்திய காரனுக்கு சினிமாவ விட்ட வேற சாதனையே செய்ய தெரியாது . அப்புறம் சீனா கரன் கிட்டே போன் வாங்குவான் . கொரியா கரன் கிட்ட டிவி வாங்குவான் . இவன் உருபடிய ஒன்னுமே கண்டுபுடிச்சி சாதனை பண்ணி வியாபாரத்திலே முனேற மாட்டான்