நடிகைகள் அரைகுறை உடையில் சினிமாவில் குத்தாட்டம் ஆடுவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது போன்ற கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகைகளால் தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கிறது என்றும், எனவே இவர்களை விபசாரிகள் என அறிவிக்க வேண்டும் என்றும் மும்பையை சேர்ந்த ஒரு அமைப்பினர் வற்புறுத்தி உள்ளனர்.
கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாக கூறி உள்ளனர்.
இதற்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:–
பெண்களுக்கு எதிராக நிறைய வன்கொடுமைகள் நடக்கின்றன. இதனை கண்டிக்காமல் பெண்கள் குட்டை பாவாடை போன்ற ஆடைகள் அணிவதால் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
கற்பழிப்பு கொடுமைகள் காமகொடூரர்களால் நடக்கின்றன. பெண்கள் ஆடை அணிவதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. நடிகைகள் குத்தாட்டம் ஆடுவதால் கற்பழிப்புகள் நடக்கிறது என்பது பொறுப்பற்ற ஆண்களின் பேச்சு இப்படிப்பட்ட ஆண்கள் பாவாடை கட்டிக் கொள்ளலாம்.
பெண்கள் கவர்ச்சி ஆடைகள் அணிவதை எதிர்த்து யாரேனும் கோர்ட்டுக்கு போனால் நானும் அதை நியாயப்படுத்தி கோர்ட்டுக்கு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-http://123tamilcinema.com
ஆபாஷம்….வேண்டாம் ….!
அது ஆபத்தே …!!