ரஜினி அரசியலில் ஈடுபட வற்புறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் ரசிகர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவை, மருத்துவர் பேரவை, மகளிர் பிரிவு நிர்வாகிகள், பங்கேற்றன.
கூட்டத்தில் ரசிகர்கள் பேசியதாவது,ரஜினி நேரடி அரசியலுக்கு வந்தால் நாட்டில் நேர்மையான ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என்று அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே மக்கள் நலன் கருதி ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்.
ரஜினி அரசியலில் ஈடுபட ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாடுகள் நடத்தி உள்ளோம். ரசிகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பாராட்டோ பதவியோ அல்ல. தாங்கள் நேரடி அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளதா? இல்லையா என்பதை ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தங்களுடைய அரசியல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு எதுவாக இருந்தாலும் ஏற்போம். இனி வாழ்வோ, அல்லது சாவோ உங்களோடுதான்.
இதற்காக உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தப்போகிறேம். அதை நடத்தும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.
-http://www.newindianews.com
அட பாவிகளா சும்மா இருக்கிற மனுஷன போயி அரசியலுக்கு இழுப்பதா ? தமிழ் நாட்டு காரண நம்பி அரசியலில் குதிச்சா கோவணம் கூட மிஞ்சாது .படத்தை பார்த்தோமா ரசித்தோமா என்று இருங்கப்பா .
ஏம்பா! இந்த வரணும் போவனும்! அவர் பாட்டுக்கு அவர் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கிறார்! சும்மா இருக்கிறவரை வம்புக்கு இழுக்கிறீர்களே!
தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் ,,,,,,,பக்கத்துக்கு மாநிலத்தில் ஒரு தமிழன் ,,அரசியலிலோ ..அல்லது மற்ற துறையிலோ உயர் பதவியில் அமரவிடுவர்களா? மாட்டார்கள் காரணம் அவர்கள் தன்மானம் உள்ளவர்கள் ,,,,தமிழனுக்கு அது குறைவு .