வடகொரியத் தலைவரை கொலை செய்வதாக, நகைச்சுவையுடன் சர்ச்சைக்குரிய வகையில் புனையப்பட்ட ஒரு சதித்திட்டத்தை மையாமக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இன்று(24.12.14) முதல் இணையதளத்தில் வெளியாகும் என்று சோனி திரைப்பட நிறுவனம் அறிவித்துள்ளது.
‘தி இண்டர்வியூ’ எனும் பெயரில் வெளியாகும் அந்தப் படத்தை எவ்வளவு பேர் பார்க்க முடியுமோ அவ்வளவு பேர் பார்க்க வகை செய்யும் நோக்கிலேயே, இணையதளத்தின் மூலமாக அதை விநியோகிப்பது எனும் வழி தேர்தெடுக்கப்பட்டது என்று சோனி திரைப்பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
யூ ட்யூப் மற்றும் மைக்ரோசாஃப்ட் உட்பட பல இணையதளங்களில் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்றும் சோனி தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தப் படம் அமெரிக்காவின் பல திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று செவ்வாய்க்கிழமை சோனி அறிவித்திருந்தது.
இணையதளத்தை சட்டவிரோதமான வகையில் பயன்படுத்தி, அந்தப் படத்தின் வெளியீட்டை முடக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததை அடுத்து, அதை திரையரங்குகளில் வெளியிடுவதை முன்னர் அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது.
இப்போது அந்த முடிவு மாற்றப்பட்டு படம் திரையரங்குகளுக்கும் வருகிறது.
இணையதளக் குற்றவாளிகள் தமது நிறுவனத்தை மௌனிக்க வைக்க முடியாது என்பது குறித்து தாங்கள் பெருமை கொள்வதாக சோனி பொழுதுபோக்கு நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் லிண்டன் கூறியுள்ளார். -BBC
லிங்கா படத்தைவிட மோசமானதா?