பிரமாண்டமான இயக்கத்துக்கு பெயர் போன ஷங்கரின் டைரக்ஷனில் உருவாகியுள்ள ’ஐ’ படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியானது.
இந்த டிரெய்லரின் பிரமாண்டத்தில் மனதை பறிகொடுத்த பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ’திரையுலகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சராசரி மனிதனாக இந்த டிரெய்லரை பார்த்த பிறகு, தமிழ்நாட்டில் ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோரை விட ஷங்கர் மிகப் பெரியவர் என நான் உணர்கிறேன்’ என்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்.
’ஐ’ படத்தின் முதல் நாள் வசூல் ‘லிங்கா’ படத்தின் வசூலை விட அதிகமாக இருக்கும் என்பது எனது கணிப்பு. அதனால்தான், ரஜினிகாந்தை விட ஷங்கர் மிகப்பெரியவர் என்று நான் கூறுகிறேன்.
இதற்கு முன்பு ரஜினிகாந்தின் மிகப்பெரிய விசிறியாக இருந்த நான், தற்போது ஷங்கரின் ஆதரவாளனாக மாறி விட்டேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://123tamilcinema.com

























