சென்னை: சென்னையில் நடந்த சர்வதேசப் பட விழாவில் சிறந்த படமாக குற்றம் கடிதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக சதுரங்க வேட்டை படம் தேர்வானது.இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் நடத்திய இந்தத் திரைப்பட விழா, 18ஆம் தேதி தொடங்கியது. 25&ம் தேதி வரை நடந்தது.
விழாவில் அமெரிக்கா, ஈரான், இராக், பிரான்சு, துருக்கி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உட்பட 46 நாடுகளைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன.
இதில் சிறந்த படமாக ‘குற்றம் கடிதல்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக சதுரங்க வேட்டை தேர்வானது. சிறப்பு ஜூரி விருது, பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ படத்துக்கு கிடைத்தது.
சிறப்பு விருது ‘பூவரம் பீப்பி‘ படத்துக்கு கிடைத்தது. அமிதாப்பச்சன் நம்பிக்கை நட்சத்திர விருது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு வழங்கப்பட்டது.விழாவில் சரத்குமார், ராதிகா, மோகன், இயக்குனர் பி.வாசு, இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் தலைவர் கண்ணன், செயலாளர் தங்கராஜ், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், பூர்ணிமா பாக்யராஜ், மனோபாலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-http://cinema.dinakaran.com