மராட்டி படத்தில் நடிக்கிறார் சசிகுமார்

sasikumarசென்னை: சசிகுமார் தயாரித்து இயக்கி நடித்த படம், ‘சுப்ரமணியபுரம்’. இதில் ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழில் மெகா ஹிட்டான இந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. இதன் இந்தி ரீமேக்கை சசிகுமாரே இயக்க இருந்தார்.

ஆனால் சில பிரச்னைகளால் தள்ளிப்போனது. இப்போது இதன் மராட்டி ரீமேக் உரிமையை சமீபத்தில் சசிகுமார் கொடுத்துள்ளார்.
மராட்டி இயக்குனர் ஆதித்யா சர்போட்கர் இதன் உரிமையை வாங்கியுள்ளார். நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை.

இதன் ஷூட்டிங் பிப்ரவரில் தொடங்கும் என்று தெரிகிறது. இதில் கவுரவ வேடத்தில் சசிகுமார் நடிக்க உள்ளார். தற்போது பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சசிகுமார் நடித்துவருகிறார். -cinema.dinakaran.com