கடந்த 2010ஆம் ஜெய்,ஸ்வாதி, சசிகுமார், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சுப்பிரமணியபுரம்’.
சசிகுமார் நடித்து, இயக்கியதோடு மட்டுமல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். இந்நிலையில் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க இருக்கின்றனர்.
இந்தப் படத்தை வசந்த மணி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார். இவர் ஜில்லா படத்தை இயக்கிய நேசனின் உதவியாளர் ஆவார். சிறு நகர் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறதாம். படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
-http://www.dinamani.com