கூடுதலாக 100 தியேட்டர்களில் வெள்ளக்காரதுரை!

விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் எழிலி இயக்கத்தில் கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளிவந்த படம் வெள்ளக்காரதுரை.

கிட்டதட்ட 200 திரையரங்குளில் வெளியான இந்தப் படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளக்காரதுரை படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்போது படம் கூடுதலாக 100 திரையரங்குகளில் திரையிடப் பட்டுள்ளதாம்.

1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். தனது முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால் அன்புசெழியன் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக மீண்டும் நிறைய படங்களை தயாரிக்க போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

-http://www.dinamani.com