பொங்கல் பண்டிகைக்கு முன் ரஜினியின் லிங்கா படத்தின் வசூல் விவரத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் முடிவு செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியான லிங்கா திரைப்படம் பெரும் வசூலைக் குவித்தது.
ஆனால் அதனை அந்தந்த ஏரியாக்களில் வாங்கி வெளியிட்டவர்கள் பொய்யான கணக்குகளைக் காட்டி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி வருகின்றனர். பெங்களூர் நகரில் இந்த மோசடி அம்பலமானது. ஆனால் தமிழகத்தில் இதுபற்றி யாரும் கவலைப்படவில்லை.
பொங்கலுக்கு முன் லிங்கா வசூல் விவரங்களை வெளியிட தயாரிப்பாளர் முடிவு லிங்கா படம் வெளியான முதல் நாளில் சென்னையின் சில அரங்குகளில் ரூ 1000 வரை விலை நிர்ணயித்து டிக்கெட் விற்றனர்.
முதல் நாள் எட்டு காட்சிகளும், அடுத்த இரு தினங்கள் ஆறு காட்சிகளும் திரையிட்டு பெரும் வசூலை அள்ளினர். முழு வரிவிலக்கு வேறு.ஆனால் இவர்கள் காட்டிய கணக்கில் டிக்கெட் விலை ரூ 10, 40, 85, 120 என்று குறிப்பிட்டிருந்தனர்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் முதல் நாள் ஆறு ஷோக்களும், அடுத்த இரு தினங்களில் 5 ஷோக்களும் திரையிட்டனர். மூன்று நாட்களும் அரங்குகள் நிரம்பி வழிந்தன. இவற்றை இந்த முறை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகக் கூறுகின்றனர் அந்தந்த பகுதி ரஜினி மன்ற நிர்வாகிகள்.
இங்கெல்லாம் டிக்கெட் விலை சராசரியாக ரூ 250 முதல் ரூ 300 வரை வைத்து விற்றனர். ஆனால் காட்டிய கணக்கு ரூ 10 மற்றும் 40 மட்டுமே. பிற பகுதியில் உள்ள மால்களில் ரூ 10, 120 டிக்கெட்டுகள் மட்டும் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.
சென்னையில் சத்யம் குழும அரங்குகள், ஐநாக்ஸ், லக்ஸ் தவிர்த்த பிறவற்றில் டிக்கெட் விலை ரூ 250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஸ்நாக்ஸுக்கும் சேர்த்து இந்த கட்டணம் என்று கூறி விற்றனர்.
இப்போது நஷ்டம் என்று கூறும் எந்த விநியோகஸ்தர் – தியேட்டர் உரிமையாளரும் உண்மையாக வசூலித்த தொகைக்கான கணக்கை காட்டவே இல்லை என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
வெளியில் இவர்கள் லிங்காவுக்கு எதிராக செய்து வரும் பிரச்சாரம் மீடியாவில் பெரிதுபடுத்தப்படுவது ரஜினி ரசிகர்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே லிங்கா வசூல் குறித்த உண்மை நிலவரத்தை அறிவித்து, எதிர்ப்பாளர்களை வாயடைக்க வேண்டும் என்று லிங்கா தயாரிப்பாளர் மற்றும் ஈராஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈராஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘சினிமாவில் எந்தப் படத்தின் வசூலையாவது முழுவதுமாக வெளியில் சொல்லியிருக்கிறார்களா… கிடையாது.
ஆனால் லிங்காவுக்கு மட்டும் இந்த நெருக்கடியைத் தருகிறார்கள். இந்தப் படத்துக்கு எதிராகப் பேசுவோர் நிச்சயம் உண்மையான வசூல் விவரங்களைத் தரமாட்டார்கள். எனவே நாங்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், பொங்கலுக்கு முன் வசூல் விவரங்களை அறிவிக்கப் போகிறோம்,” என்றனர்.
–tamil.filmibeat.com