பிசாசு படத்தின் மூலம் மீண்டும் தன் ஹிட் பாதைக்கு திரும்பினார் மிஷ்கின்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான பிசாசு படம் ரசிகர்கர்கள் மத்தியிலும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சூட்டோடு சூட்டாக தனது அடுத்தப் படத்தை ஆரம்பிக்க தயாராகிவிட்டார் மிஷ்கின். சில தினங்களுக்கு முன்பு தனது கதை ஒன்றை விஜய் சேதுபதியுடன் பேசிப்பார்க்கலாம் என்று சென்றிருக்கிறார்.
முதலில் மிஷ்கினை நீங்கள் நல்ல இயக்குநர்தான், திறமையானவர்தான்….இல்லேங்கல….என்றெல்லாம் பாராட்டிய விஜய் சேதுபதி பிறகு அவர் படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டாராம். இதற்கு விஜய் சேதுபதி சொன்ன காரணம், “சார்…உங்கள் படங்களின் கதாநாயகன் சற்று யதார்த்தத்தை விட்டு தள்ளியே இருப்பான், எனக்கு அது செட் ஆகாது” என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம்.
இதனால் மிஷ்கின், விஜய் சேதுபதி மீது கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர்களில் மிஷ்கினுக்கென்றே தனி ஸ்டைல் உள்ளது. அது மட்டுமின்றி அவர் படம் என்றால் ஹீரோ இப்படிதான் இருக்கனும் என்கிற வரையறையும் இருக்கும். அதனால இது தனக்கு சரிப்பட்டு வராது என்பதாலேயே விஜய் சேதுபதி ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-http://www.dinamani.com