ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் ‘டார்லிங்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பிறகு ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஜி.வி.பிரகாஷ்.
இப்படத்தின் தொடக்கவிழா இன்று எளிமையான பூஜையுடன் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி முதல் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ படத்தின் நாயகி ஆனந்தி நடிக்கிறார். பல்வேறு இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை இயக்குகிறார்.
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சி.ஜே. ஜெயக்குமார் என்பவர் தயாரிக்கிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் ஜெயக்குமார் கூறும்போது, இந்த கதைக்கு ஜி.வி.பிரகாஷ்தான் பொருத்தமாக இருப்பார்.
அவரது முதல் படமான ‘டார்லிங்’ வெற்றி பெற்றது எங்களுக்கு கூடுதல் பலமாகும். நாயகி கயலுக்கு இந்த படம் அவரை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டும்.
குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க இருக்கிறோம். இது இளைஞர்களை நிச்சயம் கவரும் என்றார்.
-http://123tamilcinema.com