மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ.எஸ்.ராமசாமியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோ. ரா, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட அவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய அவர்,மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டார், அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை தற்போது மோசமடைந்துள்ளது.
-http://www.newindianews.com