விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க விருப்பம்: எஸ்.ஜே.சூர்யா

sjsuriaஎஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இசை’. இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இதில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி விஜய் நடிப்பில் வெளியான ‘குஷி’ படம் சூப்பர் ஹிட்டானது. வணிக ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து அவர் கூறும்போது, ‘நானும் விஜய்யும் இணைந்து பணியாற்றி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

இருந்தாலும் விஜய் என்னுடைய படத்தின் பாடல்களை வெளியிட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படம் செய்ய விரும்புகிறேன்’ என்றார்.

எஸ்.ஜே.சூர்யா- விஜய் கூட்டணியில் குஷி படம் போல் சூப்பர் ஹிட் படம் உருவாகும் என நம்பலாம்.

-http://123tamilcinema.com