கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவின் அலுவலகம் முன்பு இன்று 3–வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தியாகுவின் விளக்கம் தொடர்பாகவும், தொடரும் தனது போராட்டம் குறித்தும் தாமரை கூறுகையில், எனக்கும், தியாகுவுக்கும் முதல் திருமணம் தோல்வியிலேயே முடிந்தது.
இதனால் முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் இருவருமே மனமுவந்து திருமணம் செய்து கொண்டோம்.
தியாகு சொல்வது போல சட்டப்பூர்வமான தீர்வுக்கு நான் தயாராக இல்லை, எனக்கு தேவை சமூக தீர்வுதான்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி இரவு தஞ்சையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை.
பிரபலமான தமிழ் கவிஞரான நான் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்பது பற்றி, தமிழ் உணர்வாளர்களே தியாகுவிடம் கேட்க வேண்டும்.
இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை எனது போராட்டம் நீடிக்கும். தமிழ் உணர்வாளர்கள் பலரும், பெண் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் எனது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நான் எந்த தவறும் செய்யவில்லை, தவறு செய்தது தியாகுதான் என்றும் அது என்ன என்பது பற்றி இப்போதே வெளிப்படையாக கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மனைவியை பிரிந்தது ஏன்? கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விளக்கம்
கவிஞர் தாமரையின் கணவர் தியாகு, நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று தாமரையை பிரிந்ததற்கு விளக்கமளித்துள்ளார்.
திரைப்பட பாடலாசிரியையும் கவிஞருமான தாமரை நேற்று, தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுடன் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்நிலையில் அவரது கணவர் தியாகு இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, சென்னை- வேளச்சேரியில் மகள் வீட்டில்தான் இருக்கிறேன்.
இல்லறத்தில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபடலாம். இல்லாது போன அறத்தில் இருந்து எப்படி பொதுவாழ்க்கையில் ஈடுபடுவது?
கடந்த ஐந்து வருடங்களாக எங்களுக்குள் பிரச்சினை இருந்தது உண்மைதான். அதற்கு ஒரு முடிவு வேண்டும் அல்லவா? சேர்ந்து வாழ முடியாமல் இருக்கும் போது பிரிவதுதான் ஜனநாயகத் தீர்வு
எனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லை. எனவே தாமரை விவாகரத்து கேட்காமல் நான் நீதிமன்றத்தை அணுக மாட்டேன்.
அவர் விவகாரத்து கேட்டால் கொடுக்க தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் என் மகனிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்.
இதில் எந்தத் தப்பும் செய்யாமல் என் மகன் வருத்தப்படுவதுதான் கஷ்டமாக இருக்கிறது.
நான் தாமரையிடம் எத்தனையோ முறை மகனை பகடைக் காயாக பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனாலும், அவரை பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
தற்போது ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகனை நான் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அவன் வளர்ந்த பிறகு யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கட்டும். என் மகன் அம்மா மாதிரி கெட்டிக்காரன்.
மேலும், என் மகன் வளர்ந்து பெரியவன் ஆனதும், நான் பிரிந்தது நன்மைக்குதான் என்பதை உணர்ந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com
அன்புள்ள தோழர் தியாகு அவர்களுக்கு வணக்கம். மரியாதைமிகு தோழி தாமரைக்கும் வணக்கம்.
உங்கள் பிரிவை 2012 முதலே அறிவேன். உங்களை நான் சந்தித்த போதும் அதுவும் பொது வாழ்வில்தான். மலேசியாவில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டு அழைப்பிதழ் தர வந்த எங்களை மிகவும் இன் முகத்தோடு சந்தித்து தமிழர் தேசியம் பற்றிய பல கருத்ததுக்களை பேசினோம். பிறகு மக்கள் தொலைக்காட்சியில் சங்கப்பலகையில் எங்களை பேட்டியும் எடுத்தீர். அது ஒரு பசுமையான இன உணர்வின் நட்பு.
நீங்கள் மிகுந்த தைரியமான ரோசமான மனிதர் என்பதை அறிவேன். உங்கள் இளமைக்கால போராட்டங்களை குருமூர்த்தி அவர்கள் சொல்ல உங்கள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளேன். இந்த நிலையிலும் உங்கள் இனப்போராட்ட ஆதங்கத்தை பார்க்கிறேன். என் பாசத்தின் வாழ்த்துகள்.
தோழி தாமரையின் இன உணர்வும் உங்கள் மண் உணர்வும் ஒன்றோடு ஒன்று ஒட்டிப்பிறந்த குழந்தைகள் போல எண்ணங்களால்
உறைந்துபபோனவர்கள் என்பதையும் அறிவோம். இந்த மடலை எழுத ஆயிரமாயிரம் யோசனைகள்…. உலகம் தெரிந்த உங்களுக்கு உங்களைத தெரிய நான் எழுத வேண்டுமா?
சுவை புதிது ,பொருள் புதிது ,வளம் புதிது என்று நீங்கள் பேச தாமரை எழுத எத்தனையோ விதிகளை சொன்ன உங்களுக்கு சட்டம் சொல்ல ஒன்றுமில்லை. இலக்கிய பக்தியும் தேச பக்க்தியும் மிக்க உங்களுக்குள் நடந்த பழையவை ஓடும் கங்கைதான்.ஓடும் அலையை விரட்டும் அலைதான் வாழ்க்கை. பாரதம் அடிமைப்பட்டு இருந்த காலம்….. அன்பு மனங்கள் நால்லாத்தனே இருந்துள்ளது.அப்போது எத்தனயோ வறுமைகள் இருந்தும் மனதில் வறுமைகள் சுமையாக இலையே ! வெருமைகள் காணாமல் இருந்ததே !
சமுதாயம் வாழ ஜனங்களின் சங்க பொதுவுடைமை பேசி தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் புதிய விதி செய்ய வந்த உங்களுக்கு தனி விதி எதுவுமில்லை. இது வெறும் தத்துவ சங்கமம்தான் எனக்கு முடியாது, வேண்டாம் என்பதற்கு வயது போதா ! மகனை பற்றி உணரும் நீங்கள் மனைவியையும் பக்குவமாகக முடியும். தோழி தாமரையும் நல்ல கீதம்தான் அவர்களுக்கு வாழ்கையை மீட்கததெரியும் என்றே நம்புங்கள்.இதுவும் கடந்துப்போகும் மகத்துவம் உங்களுக்கு தெரிந்த உலகம் தானே !
சமத்துவம் என்ற ஒரு வார்த்தையில் உங்களை உங்களால் கட்டிப்போட முடியும் ” வாழ்க நீ” என்ற கவிதைதான் மகாத்மாவை ஆண்டதாக அறிவோம். இப்படி பல உதாரங்களை நீங்கள் சொல்லித்தான் நாங்கள் அறிந்தோம்.. நான் என்னதான் எழுதினாலும் அதில் நீங்கள் பேசிய மொழி இல்லாமல் இருக்காது.இந்த உங்கள் காதலும் அப்படித்தான் வாழ்த்திருக்கும்..வாழ வேண்டும். மகா கவி பாரதியும் இதைதான் உங்களுக்கு சொல்லி இருப்பார். நன்றி வணக்கம். வாழிய நீவீர் !
அன்புடன் தோழர் தமிழவன்
ம. அ.பொன் ரங்கன்
மலேசியா