உத்தம வில்லனில் ஆறு பாடல்களைப் பாடியுள்ள கமல் ஹாஸன்!

uthamavillain1232014_mஉத்தம வில்லன் படத்தின் 7 பாடல்களில் ஆறு பாடல்களை கமல் ஹாஸனே பாடியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் ‘உத்தம வில்லன்’. இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல் ஹாசன்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். உத்தம வில்லன் திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

http://tamil.filmibeat.com