சாந்தி தியேட்டரை விற்பதாக பிரபு அறிவிப்பு

Shanthi Theatre1

சென்னையில் உள்ள சாந்தி தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு அறிவித்துள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி தியேட்டரை வாங்குவதாக தெரிகிறது.

54 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது சாந்தி தியேட்டர். சிவாஜிகணேசன் நடித்த ‘ராஜராஜ சோழன்’ படத்தை தயாரித்த உமாபதிக்கு சொந்தமாக சென்னை அண்ணாசாலையில் ஆனந்த் என்ற திரையரங்கமும் இருந்தது. 1962ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கத்தை ஜி.உமாபதியிடம் இருந்து சிவாஜிகணேசன் வாங்கினார்.

அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன. 2005 ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்கமாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.

-http://www.tamilfilmnews.com

Shanthi Theatre1