இந்திய சினிமாவில் குணச்சித்திர நடிகர்களுக்கு என்றுமே பஞ்சம் தான், அதிலும் தமிழில் ஒரு நடிகர் வில்லன் என்றால் கடைசி வரை வில்லன் தான், இதை உடைத்து எறிந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நாசர்.
இவரிடம் வில்லன், குணச்சித்திரம் ஏன் ஹீரோ கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அந்த கேரக்டராகவே வாழ்ந்து விடுவார். இவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டம் பெற்றார். இதற்கு முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார்.
இவரது ஆர்வத்தினால் இயக்குனர் கே.பாலசந்தர் கல்யாண அகதிகள் என்ற படத்தில் வாய்ப்பளித்தார். அன்று துவங்கி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
இவரின் முதல் படமே கமல்-மணி ரத்னத்தின் மாஸ்டர் பீஸான நாயகன் தான். இப்படத்தில் கடமை தவறாக காவல்த்துறை அதிகாரியாக நடித்து கலக்கினார். இதை தொடர்ந்து கமல் படத்தில் மட்டும் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இதில் தேவர் மகன், குருதிப்புனல், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, ஹேராம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் ரஜினியில் ஆரம்பித்து இக்கால விஜய், அஜித், ஆர்யா வரை அனைவருடனும் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், பாலிவுட்டிலும் நடித்துள்ளார். தற்போது இவரின் மகனும் சைவம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவரின் தொடர் வெற்றி பயணம் இன்று போல் என்றும் தொடர சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
-http://www.cineulagam.com
நல்ல பெயரோடு நிலைத்து நிற்பவர். வாழ்க! வளர்க!