சினிமா வெற்றி பெறுபவர்களை மட்டும்தான் கொண்டாடும்: கள்ளப்படம் இயக்குனர்

kallappadamஇயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் நடித்து இயக்கியிருக்கும் படம் கள்ளப்படம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதில் இப்படத்தின் இயக்குனர் வடிவேல், இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலரின் ஆரம்பக் காட்சியில் ரஜினி, கமல் ஆகியோர் நடிக்கும் படத்தில் வேலை செய்வது போல் என்று கனவு காணும் நான்கு இளைஞர்களை காண்பிக்கிறார்கள்.

இந்த காட்சி சினிமாவில் சாதிக்க துடிக்கும் நான்கு இளைஞர்களின் கதை என்று ரசிகர்களின் மத்தியில் ஆவலை தூண்டுகிற வண்ணம் அமைந்துள்ளது.

“கோடம்பாக்கத்தில் சினிமா கனவுடன் உலவும் பலருக்கு திரை ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஆகியோரின் படத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படிப்பட்ட நான்கு பேரின் கதைதான் ‘கள்ளப்படம்’.

சினிமா வெற்றி பெருபவர்களை மட்டும்தான் கொண்டாடும். அந்த வெற்றிக்கு ஒவ்வொரு தனி நபரும் கடந்த வந்த பாதையை எவரும் பார்ப்பதில்லை.

ஒவ்வொரு கலைஞனும் தன் எதிர்காலத்துக்கான கனவை ஒரு புள்ளியில் நிறுத்தியாக வேண்டியிருக்கிறது. அங்கிருந்து அவன் எதிர்கொள்ளும் விஷயங்களின் கோர்வையே ‘ கள்ளப்படம்’.” என்கிறார் இயக்குனர் வடிவேல்.

-http://123tamilcinema.com