எந்த ஹீரோயினாக இருந்தாலும் 10 வருடம்தான் மார்க்கெட் – ஸ்ருதி தடாலடி

sruthiஎந்த நடிகையாக இருந்தாலும் 10 வருடம்தான் மார்க்கெட் இருக்கும் என்றார் ஸ்ருதி ஹாசன்.

இது பற்றி அவர் கூறியதாவது:நடிகையாகிவிட்டால் குறிப்பாக பெரிய ஹீரோயின் என்று பெயர் எடுத்துவிட்டால் அதுவே நிலையானதாக இருந்துவிடாது. அவர்களின் காலம் சினிமாவில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. முன்னணி நடிகையாக இருந்தாலும் 7 முதல் 10 வருடத்துக்கு மேல் நீடிக்க முடியாது.

எனவே தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். பாடகியாக, இசை அமைப்பாளராக ஆகப்போவது எப்போது என்கிறார்கள். பாடகர், இசை அமைப்பாளர் யாருக்கும் வயது ஒரு வரையறை கிடையாது. எந்த வயதிலும் அவர் களால் தங்கள் துறையில் சாதிக்க முடியும். பாடகி, இசை அமைப்பாளர் என்ற பொறுப்பை ஏற்று பணியாற்ற எனக்கு இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது. அப்போது அதை முயற்சிப்பேன். அதற்கேற்ற கவனமும் அப்போதுதான் செலுத்துவேன்.

10 வருடம் கழித்தும் என் குரல் வளம் மாறாது என்ற நம்பிக்கையிலே இதை சொல்கிறேன்.இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.

-http://cinema.dinakaran.com