நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நட முடிவு: விவேக் பேச்சு

vivekகாரைக்குடி அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தில் சென்னை ரோட்டரி கிளப் ஆப் ஆர்ச்சிட்டி, ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மவுண்ட், காரைக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி அமைய உள்ள இடம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் நாசர், பன்னாட்டு மலர் வணிக தொழிலதிபர் பஷீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், திரைப்பட நகைச்சுவை நடிகருமான விவேக் முதலாவது மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:–

காற்றை சுத்தம் செய்யும் இயற்கை தொழிற்சாலை மரங்கள் தான். ஒரு குழந்தை பிறந்தவுடன் உபயோகப்படுத்த தொட்டில் வேண்டும். ஏன் கடைசி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போதும் தேவைப்படுவது மரம் தான். பிறப்பு முதல் இறப்பு வரை நமது வாழ்க்கையின் அங்கமாக திகழ்வது மரம்.

நாம் உயிர் வாழ இன்றியமையாதது மரம் ஒன்று தான். எல்லோமே மரம், மரம், மரம் தான். ஆனால் மனிதன் தான் அதை மறந்து விட்டான். நான் அப்துல்கலாம் ஆலோசனைப்படி நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு வைத்துள்ளேன்.

தற்போது 25 லட்சம் வரை மரக்கன்றுகளை நட்டு வைத்து விட்டோம். இன்னும் 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இங்கே வருவேன். அப்போது உங்களோடு இந்த மரங்களுக்கு இடையே நின்று நான் மகிழ்வோடு நின்று சிரிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

-http://123tamilcinema.com

நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நட முடிவு: விவேக் பேச்சு