உழவர் பெருநாள், தமிழர் திருநாள் பொங்கலையொட்டி மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பு ஏற்பாட்டில் அண்மையில் நடந்த பட்டிமன்றம் ஒன்று நாடுதளுவிய அளவில் பலரின் கருத்தாடல்களுக்கு ஆளாகியுள்ளது.
இப்பட்டிமன்றத்தின் ‘உழவன் மடிகிறான், பொங்கல் தேவையா?’ எனும் தலைப்பு பலரிடையே பல கேள்விகளையும் கருத்து மோதல்களையும் உருவாக்கியுள்ளது. ஒருசிலர் அறிந்தும், இன்னும் சிலர் அறியாமலும் நாளிதழ்களிலும் மின்னூடகங்களிலும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இங்கு நான் பி.எஸ்.எம். கட்சியையோ அல்லது ஜெரிட் அமைப்பையோ தற்காத்து பேச எண்ணவில்லை. என் தனிப்பட்ட கருத்தையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்நிகழ்வு குறித்து நான் என் முகநூல் மற்றும் புலனத்தில் அழைப்பு விடுத்தபொழுது; பல தோழர்கள் இத்தலைப்பு குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு நான் கூறிய பதில், ‘இத்தலைப்பு குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, கருத்துரைக்கக் கூடாது’, என்பதே. ஆனால், இத்தலைப்பு மலேசிய இந்தியரிடையே, குறிப்பாகத் தமிழரிடையே இவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்துமென நான் கிச்சின்றும் எண்ணவில்லை; குறிப்பாக, தள்ளு முள்ளுவரை செல்லுமென்று.
பி.எஸ்.எம். மற்றும் ஜெரிட்
பி.எஸ்.எம். கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பைச் சார்ந்தவர்கள், இந்நாட்டில் தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதில் முதன்மையாக விளங்கும் செயல்பாட்டாளர்கள் என்பது நாம் அறிந்தது. ஆரம்பக்காலத்திலிருந்தே, தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் என, இன, மத வேறுபாடின்றின்றி; அனைத்து வர்க்க மக்களின் நலனுக்காகவும் போராடும் இவர்கள் நிச்சயம் ஓர் இனத்தின் பண்பாட்டு விழாவை மதியாது நடக்கமாட்டார்கள்.
மேலும், இன்று நாட்டில் தொழிலாளர் தினப் பேரணியைப் பெரிய அளவில் ஏற்று நடத்தும் அரசியல் கட்சியான பி.எஸ்.எம். , பொங்கல் திருநாளையும் ஆண்டுதோறும் பல நிகழ்வுகளுடன் நடத்தி வருகின்றது. ஆக, பொங்கலின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறியாதவர்கள் அல்ல இவர்கள். ஒரு சிலர் குறைபட்டுக் கொள்வதுபோல், தமிழர் பண்டிகைக்குச் சாவுமணி அடிக்க நினைப்பவர்கள் ; பொங்கலை வெறுப்பவர்கள், மறுப்பவர்கள், அழிப்பதற்கும் ஒழிப்பதற்கும் நினைப்பவர்கள் வருடா வருடம் அதனைத் தவறாமல், மறவாமல் கொண்டாடி மகிழமாட்டார்கள். பகுத்தறிவாளர்கள் என நான் கருதிய சிலரின் கருத்துகள், எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
உலகம் முழுவதும் உழவர் பண்டிகை
முதலில் நாம் இந்த உழவர் பெருநாள், தமிழர்கள் , நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று மார்தட்டிக் கொள்வதிலிருந்து விடுபட வேண்டும். உலகில் இன்று பல நாடுகளில் , அவரவர் மொழி, இன, பண்பாட்டு அடிப்படையில் இத்திருநாளை உழவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல கண்டங்களிலும் இப்பெருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேப் போல, இந்தியாவின் பல பாகங்களிலும் பல்வேறு பெயர்களில், அவரவர் பண்பாட்டிற்கு ஏற்றவாரு இப்பண்டிகையை உழவர்கள் மட்டுமல்ல; அனைவருமே கொண்டாடுகின்றனர். நெல், காய்கறி என்று வித்தியாசப்படுத்தி பாராமல்; ‘உழவு’ என்பதன் பொருளை, ஏர் பிடித்து நிலத்தை உழும் பணியாக மட்டும் பாராமல்; விவசாயத்தின் வழி உணவு உற்பத்தி செய்யும் அனைவரையும் நாம் கருத்தில் கொள்வது இங்கு சிறப்பாக அமையும்.
மலேசிய இந்தியர்களாகிய நாம், இப்பொங்கலை இன, மத விழாவாகக் கருதாமல், அனைவரும் இணைந்தே இதுநாள் வரை கொண்டாடி வருகிறோம், இனியும் அப்படிதான். தமிழ்ப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், அனைத்து ‘இந்திய’ மாணவர்களாலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. மலேசியாவில் தமிழர்களில் அதிகமானோர் உழவர்களாக இல்லை என்பதனால், நாம் பொங்கலைக் கொண்டாடாமல் இல்லை. அதனை ஒரு பண்பாட்டு நிகழ்வாக அனைவரும் கொண்டாடுகிறோம்.
உழவனுடன் தொடர்புடைய, முக்கியமாக நம்மிடையே பழக்கப்பட்ட ஒரு சொல் ‘பொங்கல்’. எனவேதான், ‘பொங்கல் தேவையா?’ எனத் தலைப்பிட்டுள்ளனர். ஒருவேளை, சரவாக்கில் கொண்டாடப்படும் ‘காவாய் திருநாளை’ இந்தியர்களாகிய நாம் கொண்டாடியிருந்தால்; ‘உழவன் மடிகிறான், காவாய் பெருநாள் தேவையா?’ என இப்பட்டிமன்றத்திற்குத் தலைப்பிட்டிருக்கலாம்.
ஆக, நமது தலைப்பின் நோக்கம், தமிழருடன் தொடர்புடையது எனக் கருதப்படும் ‘பொங்கல்’ திருநாளை மட்டும் ஒட்டியது அல்ல, உழவனுடன் தொடர்புடைய ‘அறுவடை’ திருநாளையும் ஒட்டியது. இரண்டிற்கும் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் உணர வேண்டும், உணர்ச்சிவயப்படாமல்.
உழவன் பாதிப்படைகிறான்; அவன் உற்பத்தி செய்யும் உணவுக்குத் தடை ஏற்படுகிறது; இதனால் மனிதக்குலத்திற்கு ஆபத்து; அவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் அதனை செய்யாமல் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்; அவர்களைக் கண்டிக்க வேண்டும், அவ்வளவுதான்.
உழவர் வாழ்க்கை
உழவன் உலகெங்கிலும் இருக்கிறான்; அவன் சீரும் சிறப்புமாக வாழ்கின்றானா என்பதே நமது கேள்வி. இங்கு நான் மீண்டும் முன்வைக்க விரும்புவது, நாம் பொங்கலுக்கு எதிரானவர்கள் அல்லர், மாறாக; மடிந்துகொண்டிருக்கும் உழவுத் தொழிலுக்கு தோல் கொடுக்க விரும்புபவர்கள்.
இன்று பல நாடுகளில், முதலாளி வர்க்கத்தின் கொடூரப் பிடியில் அடிமைபட்டு, வறுமையாலும் கடன் தொல்லையாலும் உழவன் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறான். ஆதிக்க வர்க்கத்திற்கு வென்சாமரம் வீசும் அரசாங்கம், மனித உயிரின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் உழவர்களைப் பாதுகாக்க தவறிவிடுகிறது. மழையின்மை, நிலத்தடி நீர் வற்றி போதல், வெள்ளம், மண் சரிவு என இப்படி பல இயற்கை பேரிடர்களை நாம் காரணமாக சுட்டிக் காட்டினாலும், இதற்கு எல்லாம் மூலமாக, மனிதனின் பேராசையே முதலிடத்தில் நம் முன்னே வந்து நிற்கும்.
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை’ என்பது வள்ளுவன் வாக்கு.
உலகில் பல தொழில்கள் புலக்கத்தில் இருந்தாலும்; விவசாயத்தைப் பின்பற்றியே இவ்வுலகம் இயங்கும். அதனால், எவ்வளவு துன்பம் வந்தாலும், எந்தச் சூழலிலும் உழவே சிறந்த தொழிலாகும் என்பது இக்குறளின் பொருள்.
இதை உணராத சில அர்ப்பப்பதர்கள், விவசாய நிலங்களை இன்று கூறுபோட்டு வருகின்றனர், அரசின் அனுமதியோடு. அவர்களைப் பாதுகாக்கும் வகையில் ‘நில மீட்புச் சட்டங்கள்’ வேறு. ஆக, உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அரசாங்கம், நாட்டு மக்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய அரசாங்கம் தனது கடமையிலிருந்து வழிதவறிவிட்டதைச் சுட்டிக்காட்ட நமக்கு ஒரு மேடை தேவைபடுகிறது.
பொறுப்பில் உள்ளவர்களின் கையாளாகாத்தனம்
உழவனை , உழவுத் தொழிலைப் பாதுகாக்காமல்; ‘ஒரே மலேசியா பொங்கல்’, ‘1008 பானைகளில் பொங்கல்’ , ‘கின்னஸ் சாதனை பொங்கல்’ என மக்களை ஏமாற்றும் அரசியல்வதிகளின் பொங்கல் நமக்குத் தேவையில்லை. ஆளுயர மாலையைப் பிரதமருக்குச் சாற்றுவதால், அன்றாட வாழ்க்கையைத் தங்குத்தடையின்றி ஒரு விவசாயியினால் ஓட்ட முடியாது.
இன்று இந்த உழவர்கள் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் ஆளும் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும் ஒரு காரணம். விவசாயம் மற்றும் வேளாண்மை கைத்தொழில் அமைச்சு, இயற்கை வள மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு, கிராமப்புற மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு, சக்தி, பசுமை தொழில்நுட்பம், நீர் வள அமைச்சு, தோட்டத்துறை மற்றும் உற்பத்தி துறை அமைச்சு என பல அமைச்சுகள், பல அமைச்சர்கள். இன்று நாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கடமைபட்டுள்ளார்கள். முக்கியமாக, நமது பிரதம மந்திரி, நஜிப்.
ஆனால், பொறுப்பில் உள்ள இவர்கள் தங்கள் பொறுப்பற்ற, கையாளாகாத் தனத்தை மறைக்க, பொங்கல் போன்ற பல நிகழ்வுகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர். பல வேளைகளில், அவர்களின் பிரம்மாண்டங்களுக்கு நடுவே, நமது போராட்டங்கள், கோரிக்கைகள் நீர்த்துபோய் விடுகின்றன என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
குரல் கொடுப்போம்
ஆக, அரசியல் இலாபத்திற்காக, உழவர் பண்டிகையைக் கூறு போடுபவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல்; அவர்களின் நலன் காக்கப் பாடுபடும் பி.எஸ்.எம். மற்றும் ஜெரிட் போன்ற இயக்கங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பது சரியானதொன்றா என நாம் சிந்திக்க வேண்டும். இத்தலைப்பை ஒட்டியோ, வெட்டியோ பேசுவது இங்கு முக்கியமல்ல; விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும்; அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும்; விவசாயிகளின் பிரச்சனை அவன் ஒருவனைச் சார்ந்ததல்ல; மாறாக, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் சார்ந்தது என்பதை நாம் உணரவேண்டும்.
இத்தலைப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் அனைவருமே சமுதாய பற்றுடனேயே இங்கு தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர் என்பதனை நான் அறிவேன்; நானும் அந்த நேர்க்கோட்டிலேயே என் கருத்தை முன்வைக்கின்றேன்.
இன, சமய, மொழி கடந்து நாம் இப்பெருநாளை கொண்டாட முனைவோம். காரணம், உழவு என்பதும் உணவு என்பதும் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. ‘பசி வந்தால் பத்தும் போகும்’ , செத்தும் நம்மை வாழவைக்கும் உழவர்க்குத் தலை வணங்குவோம். தம் சுயநலத்திற்காக, உலக சோற்றுப்பானையை உடைத்தெறிய துணிந்த அரக்கர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். உழவர்கள் உலைவைக்கப்பட்டாலும் பொங்கல் தேவை என்பது மனிதபிமானமற்றது, கேவலமானது. அது மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபட்டை தகர்கிறது.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல், திரணி இருந்தால் உழைப்பவர்களுக்காக உரையாட வாருங்கள். பொங்கல் என்பதை வெறும் அழங்கார பண்பாட்டு நடவடிக்கையாக மாற்ற முயலாதீர்கள். அது ஓர் உயிரோட்டமுள்ள உணர்வு விழா. உழைப்பவர்களின் வாழ்வியலுக்கு உயிர் கொடுக்கும் நன்னாள்.
–
அன்பான தமிழர்களே இங்கு கருது கூறும் பலர் தமிழர் அல்ல ..
தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி
http://senkettru.com/2015/03/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/
இன்று நேரம் கம்மி இருந்தாலும் பதில் எழுத தூண்டுகின்றது மனம். திருவள்ளுவர் ஆண்டுதான் பிரச்சனை சித்திரையா அல்லது தை மாதம் தொடக்கமா என்பது பிரச்சனை இல்லை என்றால் என்ன அர்த்தம். ஓர் ஆண்டிற்கு தொடக்கம் இல்லாமலா அந்த ஆண்டு பிறக்கும் முடிவடையும்?. இது கரு கூடாமல் பிள்ளையை பெத்தெடு என்பது போல் அல்லவா இருக்கு!. திருவள்ளுவர் என்ற பெருமகனாரைக் கொண்டு தமிழருக்கு ஆண்டு ஆரம்பித்தால் கிறிஸ்துவருக்கும் தமிழர் அல்லாதோருக்கும் எங்கு வலிக்குதுன்னேன்?. ஏம்பா, நாங்க என்ன கி.மு-வையும், கி.பி-யையும் மாற்றி தி.ஆ. என்றா எழுதச் சொன்னோம்?. நீங்கள் எகிறி குதித்து வருவதற்கு?. எங்களுக்கு எது தேவையோ, எது எங்களின் பண்பாட்டிற்கு உகந்ததோ அதை நாங்கள் செய்கின்றோம். பல நூற்றாண்டுகளாக அயலாரின் ஆக்கிரமிப்பில் இருந்த தமிழரின் பண்பாடு பலவகையாக மாறிப் போயிடுச்சி. இருப்பதையாவது காத்துக் கொள்ள எங்களுக்கு தனிநபர், இனக்குழு அடிப்படையில் உரிமை இருக்கு அல்லவா. அதை நாங்கள் செய்யும் பொழுது எதற்கு சம்பந்தம் இல்லாமல் எங்கள் வழியில் குறுக்கே நிற்கின்றீர்கள்?. நீங்கள் எனக்கு என்ன மாமனா, மச்சானா, இல்லை அண்ணனா, தம்பியா?. அந்த ஓட்டுரவுதான் வேணாம்முன்னு அவரவர் வழியை பார்த்துக் கொண்டு போகின்றீர்களே. அப்புறம் எதற்கு தமிழர்களை சீண்டுகின்ரீர்?. உங்க வேலையை பார்த்துக் கொண்டு போங்கப்பா எங்க வேலையை நாங்க பார்க்கின்றோம்.
ஹுடுத் சட்டத்தை எம்மைப் போன்றோர் எதிர்பதர்க்குக் காரணம் உண்டு. இந்நாட்டின் மதச் சார்பற்ற அரசியல் சாசனத்தை, ஓர் இனத்தின் இறையியல் சார்புடைய அரசியல் சாசனமாவதையே எதிர்க்கின்றோம். இதன் பின் விளைவுகள் அரசியல் பலம் இல்லாத சிறுபான்மையினோருக்கு பெரும் பாதமாக இருக்கும். இதை சாதிக்க விரும்புவோர் முன் வழியே வராமல் மதத்தின் பெயரை வைத்துக் கொண்டு பின் கதவு வழியே வந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ள அவசரப் படுகின்றனர். இதற்கும் பெருபான்மையினர் அவர்தம் பண்பாட்டை காத்துக் கொள்வதானது வேறுபாடுள்ளது.
தமிழர் அவர்தம் பண்பாட்டை காத்துக் கொள்வது இதர இந்தியர்களின் மொழி பண்பாட்டை எவ்வாறு அழிக்கும்?. ஆக்கிரமிப்பு அல்லது சட்ட ரீதியில் நிர்பந்திப்பு என்று இருந்தால்தானே சிறுபான்மையான பிற இந்தியர்களின் மொழி பாண்பாடு சிதைவுறும். இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோரிடையே மதம், பண்பாடு, மொழி என்பது ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பினையப்பட்டு உள்ளது. இதை பிரித்தாளுவது என்பது சுலபமல்ல. ஆகா தாங்களாகவே தங்களைப் பிரித்துக் கொண்டு போவோரிடம் ஏன் வம்பு?. அவர்கள் செல்லும் வழியில் செல்லட்டும். தமிழர் அவர்தம் வழியில் செல்வோம். இதனால் எப்படி இந்தியர்களுக்குள் இருக்கும் சிறு சிறு குழுக்கள் சிதைவுறும்.
இதை வேறொரு கோணத்திலும் பாருங்கள் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். இப்ப யாரு கூத்தாடி? இந்துவாக இருந்து மதம் மாறிப் போன இந்திய இனக்குழுவிற்கு கொண்ட்டாட்டம். இவர்களெல்லாம் பிரிந்து விட்டார்கள் இனி நமது ஜெகதாலா கில்லாடி வேலையை ஆரம்பிப்போம் என்று எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி குளிர் காய விரும்புகின்றார்கள். இதுவரை இந்து மதத்தின் குறைகளைச் சொல்லி மதம் மாற்றியவர், மதம் மாறினோர், இனி இந்திய இன குழுக்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமையைப் பயன் படுத்தி மத மாற்றம் செய்ய நாமே அவர்களுக்கு வழி விடுகின்றோம். எதிர் வரும் காலங்களில் இந்து இந்தியர் என்போர் குறைந்து கிறிஸ்துவ, முஸ்லிம் இந்தியர் என்போர் பெருகி சிவ பெருமான் தலையில் கை வைத்ததுபோல் நம் தலையிலும் கை வைக்கப் போகின்றார்கள். சுமார் 15 வருடம் காத்திருங்கள் இது நடந்தேறும். கண் கேட்ட பிறகு சூரிய வணக்கம் என்று சொல்வார்களே அது நடக்கும். இப்பொழுது இந்து சங்கம் என்ற கம்பெனி ஒன்றை வைத்துக் கொண்டு இந்து சமய வியாபார கம்பெனியாக செயல்படுவோர் இன்னும் 15 வருடத்தில் போண்டியாகி பிற மதத்தினர் காலடியில் வீழ்ந்து கிடப்பர். ஆனால் இந்நாள் தலைகள் அந்நாள் இருக்காது. வினைப்பயனை அனுபவிப்போர் நமது எதிர்கால தலைமுறையினர்.
சைவத்தினருக்கே தகப்பன் சாமியாக வந்து பாடம் கற்பிக்க எத்துனை பேர் கிளம்பி இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை!. கமலை ஞானப்பிரகாசர் (குருஞானசம்பந்தரின் குருநாதர்) வழங்கிய புட்பவிதி அல்லது புட்பமாலை எனும் நூல் பூக்களை வெவ்வேறு வகையில் பாகுபடுத்திக் கொண்டு அவற்றால் பூசை செய்யும் முறையைக் கூறும். எந்த தெய்வத்திற்கு எது உரிய பூ, எது ஆகாதது என்றும் அதன்படி பூசை செய்வதாலும் வரும் பலனை கூறும் நூல். இவர் ஒரு வைதீகச் சைவர். மனிதரைப் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தி வேற்றுமை காட்டும் வைதீக நெறியினை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர். இவர் இயற்றிய சாதிநூல் என்று ஒரு நூலும் உண்டு இதில் நான்கு வருணாசிரம வேறுபாட்டை ஏற்றுக் கொண்டு, 81 சாதிகளைச் சொல்லி, திருட்டுத்தனமான ஆண் பெண் உறவுகளால் தோன்றிய அனுலோமர் உற்பத்தி என்றும் பிரதிலோமர் உற்பத்தி என்றும் பாகுபடுத்திக் கூறியவர். உயிர்குலத்தை மட்டுமே பேசும் சுத்த சைவத்தில் இவர் நின்றவரா?. உயிர்க் குலம் பாகுபாடு கொண்டவை அல்ல என்று சொன்ன சுத்த சைவத்தில் இவர் நின்றாரா?. வைதீகச் சைவர்களாகிப் போனவர் சித்திரை மாதத்தை சோதிடத்தின் அடிப்படையில் முதல் மாதமாக சொல்லி இருந்தால் அதில் வியப்பு ஏதும் உண்டோ?.
அமரர் பண்டிதனின் அரசியல் கொள்கைகளில் எனக்கு உடன் பாடு இல்லாவிட்டாலும், அடிக்கடி அவர் முன்பு சொன்ன ஒரு வார்த்தை இன்று தீர்க்க தரிசனமானது ! எதிர்காலத்தில் இன்று ” bangsa melayu , china , india dan lain -lain என்பது ” bangsa melayu ,china dan lain – lain என்று ஆகிவிடும் என்று அடிக்கடி கூருவார் ! இன்று இது உண்மையாகிவிட்டது . வரும் காலத்தில் வங்காளதேசி அரசாங்க வேளைகளில் அமரபோகிறான் . நம்ப எல்லாம் டண்டனக்கா ……டனக்குனக்கா …..நக்கி நக்கா …….
அம்மா,ஆத்தா என்று கூப்பாடு போட்டு திராவிட தமிழ் நடத்தினால் ஜனங்கள் வேடிக்கை தானே பார்ப்பார்கள்.பத்துப் பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்துக் கொண்டால் ஒட்டு மொத்த தமிழருக்கும் பேச்சாளர் ஆகிவிடுவாரோ?உம்மை யாரையா என் கருத்தை படிக்க சொன்னது?படிக்கிறவர்கள் படித்து விட்டு போகட்டும்.இல்லை என்றால் குப்பை என்று ஒதுங்கட்டுமே.நான் யாரையும் என் கருத்தை படிக்கும்படி வற்புறுத்தவில்லையே .வேண்டுமானால் ஒரு தனி தளம் அமைத்து எழுதுங்கள்.பொது தளத்தில் நீ யார் என்று கேட்டால் மற்றவர்களும் தான் நீ யார் என்று கேட்பார்கள்.இந்த கழக விஷமிகளால் தானே இன்று தமிழ் கலாசாரம் தாலி அறுப்பு போராட்டம் வரை சீரழிவுகுள்ளாகி உள்ளது.ரம்ஜான் பண்டிகை கிறிஸ்துமஸ் பண்டிகைகெல்லாம் வாழ்த்து சொல்வார்கள் ஆனால் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லமாட்டார்களாம்,அது ஆரிய பண்டிகையாம்.ஆனால் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வருவார்கள்.(இதில் படம் போட வழியிருந்தால் அந்த தானை தலைவர்களின் அர்ச்சனை படங்களை போட்டிருப்பேன்)அவர்கள் நடத்தும் கூத்தை வேடிக்கை பார்த்து தான் நான் என் கருத்தை பதிப்பிக்கிறேன்.என்னை கிறிஸ்தவன் என்று முத்திரை குத்தி முறையான வாதத்தை வைக்கமுடியாமல் நீர் பிதற்றுவதையும், திசை திருப்புவதையும் மற்றவர்களும் படிக்கட்டும்.திராவிடம் என்பதே தமிழர்க்குரிய நாடு இல்லை என்கிற போது கால்டுவெல் என்கிற வெள்ளை தோல்காரன் சொன்னான் என்று திராவிடத்தை ஏற்றுக் கொள்ளும் போது ஏன் இந்த கருப்புத் தோல் தமிழன் அகஸ்டின் கருத்து எழுத கூடாதா?சரி,சரி நேரமில்லை பிறகு பார்ப்போம்.
அகஸ்தியரே ……ம்ம்ம் ….மன்னிக்கவும்,அகஸ்டியன், ஏன் இந்த கோபம் !
யாரும் படிக்கக் கூடாது என்றால் ஏன் இங்கே கருத்தைப் பதிவு செய்ய வேண்டும். உங்க கருத்தை எழுதி உங்க வீட்டீர்க்குள்ளே ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே படித்துக் கொள்ளுங்கள் யாருக்கு என்ன வந்தது. பொதுவில் குப்பையைக் கொட்டினால் போவோர் வருவோர் எல்லாம் காறித் துப்பி விட்டுதான் போவார்கள். வசதி எப்படி. இத்தோடு நிறுத்திக் கொள்வீர்களா?.
கிறித்துவன் என்று முத்திரை குத்துவதற்கு முன் பல முறை சொன்னேன். எதற்கும் ஓர் அளவு உண்டு என்று. சைவத்தின் மேன்மை அறியாமல் எம் முன் சைவத்தை தூற்றியது யார்?. அப்பொழுது எங்கே போனது இந்த அறிவு. பொறுமை காத்த எமக்கு ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரௌண்டு இப்ப உலகம் சுத்துதடி பல ரௌண்டு என்று போதை ஏற வைத்தது யார்?. போதை ஏறியவன் உண்மையைத்தான் பேசுவான். நினைவில் இருப்பவரே பிறரை திசை திருப்ப/ஏமாற்ற இரட்டை வேடம் போடுவார். இதனை சித்தாந்தில் சகலர் வாழும் மயக்க நிலை என்போம். இப்ப மயக்கம் யாருக்கு என்று புரிந்திருக்கும். அங்க ரேடியோவை நிப்பாட்டினால் இந்த ரேடியோவும் நிற்கும்.
தேனி அவர்களே, இவர்கள் புலித்தோல் போர்த்திய புலி . அதனால் தான் இந்த விதண்டாவாதம். .
எனக்கு தெரிந்தவை தமிழ் கத்தோலிக்க கிருத்தவ மக்கள் பொங்கல் தமிழ் புத்தாண்டு தை முதலே என தெளிவாக இருக்கிறார்கள். இந்து சங்கம் தமிழக சட்ட சம்பையில் தமிழ் புத்தாண்டு என அறிவித்ததே
இந்து சங்கத்துக்கும் தமிழ் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு
அப்ப கிருத்துவ,முஸ்லிம் தமிழ் என்ன கேனயன்களா?
நீ ஏன் தீபாவளி கொண்டாடதை கிருஸ்தவனோடு இணைகிற
இன்னைக்கு உலகத்து எந்த நாட்டுக்கு போனாலும் தமிழ் கிருத்தவர்களுக்கு தமிழில் வழிபாடு நடக்குது.
தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டுலேயே சமஸ்கிருதம்.
கிறிஸ்தவன், இஸ்லாமுல எவன் வேணுமானாலும் மறை ஓதலாம்.
எங்க இந்துல நீ மாத்து . தமிழா கல்யாணம் பண்ணி காமி.
கிருத்தவன் ,இஸ்லாம் மதம்தான் வேற. அவன் சுத்த தமிழன்.
என் கருத்தை இப்பொழுதெல்லாம் பிரசுரிப்பதே இல்லை…. உண்மை கசக்கும், அதனாலோ ?. அல்லது நானும் அகஸ்தியன் அவர்களின் வழியில் ………… முத்திரை குத்தபட்டதநாளோ ?
dhilip,அகஸ்டின் உங்க மாதிரி divide&rule கூலி படை கூத்து எல்லாம் தமிழ் நாட்டிலே செல்லும்! இங்குள்ள தமிழர்கள் விழித்து ரொம்ப நாளாச்சு!
நீ நீசபாசைல கருத்து போடு .. தமிழர்களுக்குள் மத சண்டைமுட்டும் நாடோடி . உமக்கு தமிழர் பற்றிபேச தகுதி இல்ல .. Dhilip 2.காயு ..(ஈரமரகட்டை) தோழர் தேனீ சிறிய விண்ணப்பம் . உண்மை தமிழர்கள் கிறிஸ்தவனோ /இஸ்லாமியனோ /சைவனோ பரிவோடும் பாசத்தோடும் அக்கறையோடும் வாழ்கிறார்கள் . மொழியை வளர்ப்பதில் அவர்களும் பெரும் பங்கு வகிகிறார்கள் .. அகஷ்டியன் ஒரு வடுகர் ..
திரு சாட்டை, அப்படியா!!! இங்குள்ள தமிழர்கள் விழித்துக் கொண்டார்களா??? நல்ல ஜோக்கு போங்க….. தெரிந்துதான் எழுதுகிறீரா அல்லது சுய திருப்திக்காக எழுதுகிறீரா???
TAPAH BALAJI இது கோபமில்லை,நாம் நடந்து செல்லும் பாதையிலே பல நண்பர்கள் வரக்கூடும் ஆனால் சில நரிகளும் விளையாடும்ல அதனால ஏற்பட்ட அனிச்சை செயல்.
Dhilip 2 உங்க வருத்தம் எனக்கு புரிகிறது.சிலருக்கு நாம் எழுதவது பிடிப்பதில்லை.நம் கருத்தை,எதிர்ப்பை தடை செய்தும் இருக்கிறார்கள்.நமது வாசகர் வட்டத்தில் தடை போடப்பட்டாலும் நம்முடைய கருத்தை எதிர்ப்பை படித்த செம்பருத்தி நிர்வாகி ஒருவராவது உள்ளார்.நம் எண்ணம் வாசகர் வட்டத்தில் ஒருவரிடமாவது சேர்ந்ததே என்று மகிழ்வு கொல்வோம்.
நீர் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் உலகம் இருளென பொருள் ஆகாது ஒருவன்…
நண்பர்களே, இங்கே எழுதுவதில் எனக்கு எந்த ஒரு வெற்றி அல்லது தோல்வியும் இல்லை. நான் எதையும் தீர்மானிப்பதில்லை. கடவுள் நினைத்தால், எந்த ஒரு மொழியும் அல்லது நாகரிகமும் அழிந்து போகலாம். நான் யார் அதை தடுக்க. அதில் உள்ள நல்லது கெட்டதைதான் தான் நான் பேசுகிறேன். தீர்மானிப்பதில்லை. எனக்கு நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. ஜனநாயகம் வாழ, ஈழ தமிழர்கள் ஆகட்டும், அல்லது பாலஸ்தீனியர்கள் ஆகட்டும், சோமாலிய கறுப்பின மக்களாகட்டும், என் ஒட்டு ஜனநாயக மறு மலர்சிக்கே. இதில் மொழி, மதம், இனம் என்று ஒருசாரர் பிரித்து கொள்வதை விட, எல்லோரும் பாடு பட்டு ஜனநாயகத்தை வளர்க்க, நீதியின் வழி பாடு படுவோம் என்று என் வாதத்தை முடிக்கிறேன்.