உழவர் பெருநாள், தமிழர் திருநாள் பொங்கலையொட்டி மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பு ஏற்பாட்டில் அண்மையில் நடந்த பட்டிமன்றம் ஒன்று நாடுதளுவிய அளவில் பலரின் கருத்தாடல்களுக்கு ஆளாகியுள்ளது.
இப்பட்டிமன்றத்தின் ‘உழவன் மடிகிறான், பொங்கல் தேவையா?’ எனும் தலைப்பு பலரிடையே பல கேள்விகளையும் கருத்து மோதல்களையும் உருவாக்கியுள்ளது. ஒருசிலர் அறிந்தும், இன்னும் சிலர் அறியாமலும் நாளிதழ்களிலும் மின்னூடகங்களிலும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இங்கு நான் பி.எஸ்.எம். கட்சியையோ அல்லது ஜெரிட் அமைப்பையோ தற்காத்து பேச எண்ணவில்லை. என் தனிப்பட்ட கருத்தையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்நிகழ்வு குறித்து நான் என் முகநூல் மற்றும் புலனத்தில் அழைப்பு விடுத்தபொழுது; பல தோழர்கள் இத்தலைப்பு குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு நான் கூறிய பதில், ‘இத்தலைப்பு குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, கருத்துரைக்கக் கூடாது’, என்பதே. ஆனால், இத்தலைப்பு மலேசிய இந்தியரிடையே, குறிப்பாகத் தமிழரிடையே இவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்துமென நான் கிச்சின்றும் எண்ணவில்லை; குறிப்பாக, தள்ளு முள்ளுவரை செல்லுமென்று.
பி.எஸ்.எம். மற்றும் ஜெரிட்
பி.எஸ்.எம். கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பைச் சார்ந்தவர்கள், இந்நாட்டில் தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதில் முதன்மையாக விளங்கும் செயல்பாட்டாளர்கள் என்பது நாம் அறிந்தது. ஆரம்பக்காலத்திலிருந்தே, தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் என, இன, மத வேறுபாடின்றின்றி; அனைத்து வர்க்க மக்களின் நலனுக்காகவும் போராடும் இவர்கள் நிச்சயம் ஓர் இனத்தின் பண்பாட்டு விழாவை மதியாது நடக்கமாட்டார்கள்.
மேலும், இன்று நாட்டில் தொழிலாளர் தினப் பேரணியைப் பெரிய அளவில் ஏற்று நடத்தும் அரசியல் கட்சியான பி.எஸ்.எம். , பொங்கல் திருநாளையும் ஆண்டுதோறும் பல நிகழ்வுகளுடன் நடத்தி வருகின்றது. ஆக, பொங்கலின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறியாதவர்கள் அல்ல இவர்கள். ஒரு சிலர் குறைபட்டுக் கொள்வதுபோல், தமிழர் பண்டிகைக்குச் சாவுமணி அடிக்க நினைப்பவர்கள் ; பொங்கலை வெறுப்பவர்கள், மறுப்பவர்கள், அழிப்பதற்கும் ஒழிப்பதற்கும் நினைப்பவர்கள் வருடா வருடம் அதனைத் தவறாமல், மறவாமல் கொண்டாடி மகிழமாட்டார்கள். பகுத்தறிவாளர்கள் என நான் கருதிய சிலரின் கருத்துகள், எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
உலகம் முழுவதும் உழவர் பண்டிகை
முதலில் நாம் இந்த உழவர் பெருநாள், தமிழர்கள் , நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று மார்தட்டிக் கொள்வதிலிருந்து விடுபட வேண்டும். உலகில் இன்று பல நாடுகளில் , அவரவர் மொழி, இன, பண்பாட்டு அடிப்படையில் இத்திருநாளை உழவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல கண்டங்களிலும் இப்பெருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேப் போல, இந்தியாவின் பல பாகங்களிலும் பல்வேறு பெயர்களில், அவரவர் பண்பாட்டிற்கு ஏற்றவாரு இப்பண்டிகையை உழவர்கள் மட்டுமல்ல; அனைவருமே கொண்டாடுகின்றனர். நெல், காய்கறி என்று வித்தியாசப்படுத்தி பாராமல்; ‘உழவு’ என்பதன் பொருளை, ஏர் பிடித்து நிலத்தை உழும் பணியாக மட்டும் பாராமல்; விவசாயத்தின் வழி உணவு உற்பத்தி செய்யும் அனைவரையும் நாம் கருத்தில் கொள்வது இங்கு சிறப்பாக அமையும்.
மலேசிய இந்தியர்களாகிய நாம், இப்பொங்கலை இன, மத விழாவாகக் கருதாமல், அனைவரும் இணைந்தே இதுநாள் வரை கொண்டாடி வருகிறோம், இனியும் அப்படிதான். தமிழ்ப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், அனைத்து ‘இந்திய’ மாணவர்களாலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. மலேசியாவில் தமிழர்களில் அதிகமானோர் உழவர்களாக இல்லை என்பதனால், நாம் பொங்கலைக் கொண்டாடாமல் இல்லை. அதனை ஒரு பண்பாட்டு நிகழ்வாக அனைவரும் கொண்டாடுகிறோம்.
உழவனுடன் தொடர்புடைய, முக்கியமாக நம்மிடையே பழக்கப்பட்ட ஒரு சொல் ‘பொங்கல்’. எனவேதான், ‘பொங்கல் தேவையா?’ எனத் தலைப்பிட்டுள்ளனர். ஒருவேளை, சரவாக்கில் கொண்டாடப்படும் ‘காவாய் திருநாளை’ இந்தியர்களாகிய நாம் கொண்டாடியிருந்தால்; ‘உழவன் மடிகிறான், காவாய் பெருநாள் தேவையா?’ என இப்பட்டிமன்றத்திற்குத் தலைப்பிட்டிருக்கலாம்.
ஆக, நமது தலைப்பின் நோக்கம், தமிழருடன் தொடர்புடையது எனக் கருதப்படும் ‘பொங்கல்’ திருநாளை மட்டும் ஒட்டியது அல்ல, உழவனுடன் தொடர்புடைய ‘அறுவடை’ திருநாளையும் ஒட்டியது. இரண்டிற்கும் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் உணர வேண்டும், உணர்ச்சிவயப்படாமல்.
உழவன் பாதிப்படைகிறான்; அவன் உற்பத்தி செய்யும் உணவுக்குத் தடை ஏற்படுகிறது; இதனால் மனிதக்குலத்திற்கு ஆபத்து; அவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் அதனை செய்யாமல் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்; அவர்களைக் கண்டிக்க வேண்டும், அவ்வளவுதான்.
உழவர் வாழ்க்கை
உழவன் உலகெங்கிலும் இருக்கிறான்; அவன் சீரும் சிறப்புமாக வாழ்கின்றானா என்பதே நமது கேள்வி. இங்கு நான் மீண்டும் முன்வைக்க விரும்புவது, நாம் பொங்கலுக்கு எதிரானவர்கள் அல்லர், மாறாக; மடிந்துகொண்டிருக்கும் உழவுத் தொழிலுக்கு தோல் கொடுக்க விரும்புபவர்கள்.
இன்று பல நாடுகளில், முதலாளி வர்க்கத்தின் கொடூரப் பிடியில் அடிமைபட்டு, வறுமையாலும் கடன் தொல்லையாலும் உழவன் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறான். ஆதிக்க வர்க்கத்திற்கு வென்சாமரம் வீசும் அரசாங்கம், மனித உயிரின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் உழவர்களைப் பாதுகாக்க தவறிவிடுகிறது. மழையின்மை, நிலத்தடி நீர் வற்றி போதல், வெள்ளம், மண் சரிவு என இப்படி பல இயற்கை பேரிடர்களை நாம் காரணமாக சுட்டிக் காட்டினாலும், இதற்கு எல்லாம் மூலமாக, மனிதனின் பேராசையே முதலிடத்தில் நம் முன்னே வந்து நிற்கும்.
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை’ என்பது வள்ளுவன் வாக்கு.
உலகில் பல தொழில்கள் புலக்கத்தில் இருந்தாலும்; விவசாயத்தைப் பின்பற்றியே இவ்வுலகம் இயங்கும். அதனால், எவ்வளவு துன்பம் வந்தாலும், எந்தச் சூழலிலும் உழவே சிறந்த தொழிலாகும் என்பது இக்குறளின் பொருள்.
இதை உணராத சில அர்ப்பப்பதர்கள், விவசாய நிலங்களை இன்று கூறுபோட்டு வருகின்றனர், அரசின் அனுமதியோடு. அவர்களைப் பாதுகாக்கும் வகையில் ‘நில மீட்புச் சட்டங்கள்’ வேறு. ஆக, உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அரசாங்கம், நாட்டு மக்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய அரசாங்கம் தனது கடமையிலிருந்து வழிதவறிவிட்டதைச் சுட்டிக்காட்ட நமக்கு ஒரு மேடை தேவைபடுகிறது.
பொறுப்பில் உள்ளவர்களின் கையாளாகாத்தனம்
உழவனை , உழவுத் தொழிலைப் பாதுகாக்காமல்; ‘ஒரே மலேசியா பொங்கல்’, ‘1008 பானைகளில் பொங்கல்’ , ‘கின்னஸ் சாதனை பொங்கல்’ என மக்களை ஏமாற்றும் அரசியல்வதிகளின் பொங்கல் நமக்குத் தேவையில்லை. ஆளுயர மாலையைப் பிரதமருக்குச் சாற்றுவதால், அன்றாட வாழ்க்கையைத் தங்குத்தடையின்றி ஒரு விவசாயியினால் ஓட்ட முடியாது.
இன்று இந்த உழவர்கள் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் ஆளும் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும் ஒரு காரணம். விவசாயம் மற்றும் வேளாண்மை கைத்தொழில் அமைச்சு, இயற்கை வள மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு, கிராமப்புற மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு, சக்தி, பசுமை தொழில்நுட்பம், நீர் வள அமைச்சு, தோட்டத்துறை மற்றும் உற்பத்தி துறை அமைச்சு என பல அமைச்சுகள், பல அமைச்சர்கள். இன்று நாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கடமைபட்டுள்ளார்கள். முக்கியமாக, நமது பிரதம மந்திரி, நஜிப்.
ஆனால், பொறுப்பில் உள்ள இவர்கள் தங்கள் பொறுப்பற்ற, கையாளாகாத் தனத்தை மறைக்க, பொங்கல் போன்ற பல நிகழ்வுகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர். பல வேளைகளில், அவர்களின் பிரம்மாண்டங்களுக்கு நடுவே, நமது போராட்டங்கள், கோரிக்கைகள் நீர்த்துபோய் விடுகின்றன என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
குரல் கொடுப்போம்
ஆக, அரசியல் இலாபத்திற்காக, உழவர் பண்டிகையைக் கூறு போடுபவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல்; அவர்களின் நலன் காக்கப் பாடுபடும் பி.எஸ்.எம். மற்றும் ஜெரிட் போன்ற இயக்கங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பது சரியானதொன்றா என நாம் சிந்திக்க வேண்டும். இத்தலைப்பை ஒட்டியோ, வெட்டியோ பேசுவது இங்கு முக்கியமல்ல; விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும்; அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும்; விவசாயிகளின் பிரச்சனை அவன் ஒருவனைச் சார்ந்ததல்ல; மாறாக, ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் சார்ந்தது என்பதை நாம் உணரவேண்டும்.
இத்தலைப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் அனைவருமே சமுதாய பற்றுடனேயே இங்கு தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர் என்பதனை நான் அறிவேன்; நானும் அந்த நேர்க்கோட்டிலேயே என் கருத்தை முன்வைக்கின்றேன்.
இன, சமய, மொழி கடந்து நாம் இப்பெருநாளை கொண்டாட முனைவோம். காரணம், உழவு என்பதும் உணவு என்பதும் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. ‘பசி வந்தால் பத்தும் போகும்’ , செத்தும் நம்மை வாழவைக்கும் உழவர்க்குத் தலை வணங்குவோம். தம் சுயநலத்திற்காக, உலக சோற்றுப்பானையை உடைத்தெறிய துணிந்த அரக்கர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். உழவர்கள் உலைவைக்கப்பட்டாலும் பொங்கல் தேவை என்பது மனிதபிமானமற்றது, கேவலமானது. அது மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபட்டை தகர்கிறது.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல், திரணி இருந்தால் உழைப்பவர்களுக்காக உரையாட வாருங்கள். பொங்கல் என்பதை வெறும் அழங்கார பண்பாட்டு நடவடிக்கையாக மாற்ற முயலாதீர்கள். அது ஓர் உயிரோட்டமுள்ள உணர்வு விழா. உழைப்பவர்களின் வாழ்வியலுக்கு உயிர் கொடுக்கும் நன்னாள்.
–
சரியாக சொன்னீர்கள் தமிழர் நந்தா
நமக்கென்று ஒரு ஆண்டு திருவள்ளுவராண்டு தமிழாண்டு
நமது சமயம் சைவம்
நமது தேசியம் தமிழர்
நமது நெறி திருவள்ளுவம்
நாய் குழைத்து சூரியனுக்கு ஒன்றும் ஆகபோவதில்லை
வாழ்க தமிழினம் , தமிழ் மொழி
பண்பாடு என்பது பலகாலமாக பண்பட்டு மேம்பட்டு வந்த நெறி ஓர் இனத்தின் அடையாளமாக விளங்குவது. அப்படி தமிழரின் பண்பாடாக வந்த நெறிகளில் ஒன்று “பொங்கல்” விழாவாகும். இது உழவர் விழா என்றும் வழங்கும். தமிழர் பண்டைய காலம் முதலே உயிருக்கு மூச்சாக விளங்கும் உழவுத் தொழிலில் உழன்று வாழ்ந்து வந்தவர். அந்த பயிருக்கு உயிராக விளங்குவது சூரியன். ஆக , தமிழர் பொங்கல் விழா கொண்டாடுவது உழவுத் தொழில் மட்டும் நாடி அல்ல மாறாக அதற்கும் மேலாக இருக்கும் அந்த சூரியனை வணங்க வந்த விழாவாகும். இதுவே முதல் நாளில் சூரியப் பொங்கல் என்று சொல்லி அறுவடை செய்த நெல் அரிசியைக் கொண்டு பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைத்து வணங்கினர். இதுதான் தமிழர் பண்பாட்டில் வந்த பொங்கல் திருநாள்.
தமிழர் மதத்தை காண்பதற்கு முன்னமே தனக்கு வாழ்வளிக்கும் சூரியனை வணங்கினான் என்பது இதிலிருந்து விளங்கும். இப்படி அந்த சூரியனை வணங்கிய தமிழர் சடமான ஒரு கோளைப் படைத்து உயிரனங்கள் வாழ வழிவகுத்த அதற்கும் மேலான அறிவுடைய ஓர் ஆற்றல் உள்ளதைதையும் அறிந்து வைத்திருந்தான். அதுவே இறை ஆற்றல் என்றும் நம்பினான். ஆக தமிழர் சூரியனை வணங்குவதானது அந்த இறை ஆற்றலையும் சேர்த்தே வணங்கினான் என்பதுதான் தமிழர் பொங்கல் விளக்கும் தத்துவம். தமிழர் எதைச் செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும். இப்படி அர்த்தமுள்ள தமிழரின் பொங்கலை உழவுத் தொழிலோடு நிறுத்தி அத்தோடு சாவு மணி அடிப்பது என்பது தமிழர் பண்பாடு அறியாதவரின் கூற்று. இவர்களுக்கெல்லாம் ஒரே பதில் நீர் தமிழன் இல்லை என்றால் தமிழரின் பண்பாட்டை கொலை செய்யாதே. நீ தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டை அறியாமல் இருந்தால் அதனை முழுமையாக அறிந்துக் கொள். இல்லையேல் எந்த முதுகலைப் பட்டம் கொண்டாலும் அது காற்றில் பறக்கும் பட்டத்திற்குப் ஒப்பாகும்.
அன்றைய உழவுத் தொழில் இன்று இல்லை என்றும், இன்று தமிழர் பொங்கல் வேண்டாம் என்றால் அன்று அம்மா என்ற தாயை இன்று அத்தை என்று கூப்பிட முடியுமா?. முடியாது அல்லவா. அதைப் போலவே தமிழரின் பண்பாட்டை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது. அது உழவன் இருந்தாலும் மடிந்தாலும் தமிழருடைய பண்பாடு. என்றென்றும் தமிழருக்கு உரிமையானது தமிழரின் தைப் பொங்கல்.
இதற்கு மேலும் தமிழருக்கு பொங்கல் தேவை இல்லை என்றால் இப்படி பொறுமையான மொழியில் விளக்கம் வராது. பதில் வேறு மாதிரியாக வரும்.
திருவள்ளுவராண்டு தமிழாண்டா?இன்று கி.மு ,கி.பி அல்லது common era அல்லது சகாப்தம் என்று time line இருப்பது போல் திருவள்ளுவர் ஆண்டுக்கு time line கொண்டு நடந்த சரித்திர சம்பவங்களோ அல்லது இலக்கிய ஆதாரங்களோ எங்கேனும் உண்டா?நம் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த காலங்களில் திருவள்ளுவர் ஆண்டை கொண்டா காலத்தை கணக்கிட்டார்கள்?
ஆரிய அரசன், வட இந்திய அரசன் – அவன் பெற்ற வெற்றிச் சின்னமாக வருடக் கணக்கை ஆரம்பிட்துள்ளான்.அதை நாம் பின்பற்றுவதா?ஆரியத் திணிப்புக்கு இது ஒரு அத்தாட்சி அல்லவா என்பது அவர்கள் வாதம். அதன் பயனாக திருவள்ளுவர் ஆண்டை இவர்கள் அறிமுகம் செய்துவிட்டனர்.
சகாப்தங்களின் உண்மை நிலவரத்தைப் பார்ப்போம்.
’ விஞ்ஞான சர்வஸ்வம்’ என்னும் நூலில் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பாரத மண்ணைச் சேர்ந்த மக்கள், பாரதீயம் அல்லாத, மற்றும் பாரதீயத்திற்கு எதிர்மாறான கொள்கைகளை உடைய அன்னிய நாட்டவரைப் படை பலத்தால் வென்றால், எந்த மன்னன் அப்படி வென்றானோ அவன் பெயரில் ஆண்டுகள் சொல்லப்படவேண்டும்.
அதை அந்த மன்னன் பெயரில் சகாப்தம் என்று அழைத்தனர்.
கலி யுகம் பிறந்தது முதல் இன்று வரை மூன்று மன்னர்கள் அவ்வாறு அன்னியர்களை வென்றிருக்கின்றனர்.கலியுகம் ஆரம்பித்து 5112 வருடங்கள் ஆகின்றன.இடைவிடாமல் கணக்கிடப்பட்டு வந்திருக்கும் கணக்கு இது.சிந்து சமவெளி நாகரீகம் என்று சொல்லப்படும் காலத்திற்குச் சற்றுமுன் இது தொடங்கி இருப்பதைக் கவனிக்கவும்.அதாவது, ஒரு பாரத மன்னன், வேத மரபுக்கு முரணான வாழக்கையை வாழ்ந்தவர்களை வெற்றி கொண்ட பிறகுதான், சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்திருக்கிறது. அதாவது, வேதம் கொடுத்த ஆரியர்கள் வந்தார்கள் என்று சொல்லப்படும் காலத்துக்கு முன்பேயே, திராவிடர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வேத- தரும வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது.
அவ்வாறு ஜெயித்த முதல் அரசர், பாரதப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்களது மூத்தவரான யுதிஷ்டிரர்.கலியுகம் பிறந்தது முதல் யுதிஷ்டிர சகாப்தம் ஆரம்பித்தது.இந்தக் குறிப்பால், பாரதப் போரில் பாண்டவர்கள் அன்னியர்களை முறியடித்திருக்கின்றனர் என்று தெரிகிறது.பாரதப்போர் முடிந்தபிறகே சிந்து சமவெளி நாகரிகம் என்று இவர்கள் கூறும் நாகரிகத்தின் காலம் (கி-மு-3000)ஆரம்பித்திருக்கிறது.
இதன் மூலம், பாரதப் போரின் விளைவாக, சிந்து நதிப் பகுதியில் வேத தரும வாழ்க்கை வாழாத அன்னியர்கள் விரட்டப்பட்டு, அங்கு பாரதீயர்கள் (வேத- தரும வாழ்க்கை வாழ்பவர்கள்) குடியிருக்க ஏதுவாக சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
யுதிஷ்டிரருக்குப் பிறகு விக்கிரமாதித்யர் என்று மேலே குறிப்பிடப்பட்ட அரசர், அரேபியப் பகுதிகளுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டித் திரும்பினார். ’வாலிகர்கள்’ என்னும் மக்களை அவர் வெற்றி பெற்றார் என்று இரும்புத் தூணிலும் எழுதி இருக்கிறார். அவர் அரேபியாவை வெற்றி பெற்ற விவரம் அடங்கிய ஒரு பட்டயம் இன்றும் (இன்னும்) முஸ்லீம்களின் முக்கிய இடமான மெக்காவில் உள்ள காபாவில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த அரசனால் அங்கு இந்து மதம் தழைத்தைப் பற்றிக் கூறும் அராபியப்பாடல்கள் இருக்கின்றன. இவை இஸ்லாம் என்னும் மதம் ஸ்தாபிக்கப்படுவத்ற்கு முன்பே பாடப்பட்டவை. இதன் மூலம் விக்கிரமாதித்யன் வென்ற வாலிகர்கள் அரேபியப்பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
Link: http://thamizhan-thiravidana.blogspot.com/2011/01/28.html
இந்த மன்னனது பேரனான சாலிவாஹனன் மத்திய ஐரோப்பியப் பகுதியில் அன்னியர்களை முறியடித்தார். எனவே இவர் பெயரில் சாலிவாஹன சகாப்தம் இன்று வரை 1932 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றது.
இவருக்குப் பின் எந்த இந்திய மன்னரும் அன்னியர்களை வெல்லவில்லை. ஆனால் அப்படி ஒரு காலம் வரும் என்றும் கணித்துள்ளார்கள். அதன்படி இன்னும் மூன்று சகாப்தங்கள் பாக்கி இருக்கின்றன.
“தமிழர் மதத்தை காண்பதற்கு முன்னமே தனக்கு வாழ்வளிக்கும் சூரியனை வணங்கினான் என்பது இதிலிருந்து விளங்கும்.” என்று தேனீ எழுதி உள்ளார். சூரியனை வணங்குவது என்பது வைதீக மதத்தில் சௌரம் என்பார்கள். வைதீக வேதத்தில் சூரியனில் தான் நாராயணன் சஞ்சரிக்கிறார் என்று பொருள் படும், இதுவே சூரிய நமஸ்காரத்திற்கு அஸ்திவாரம். எனவே தான் சூரிய வழிப்பாட்டு முறை அங்கே உள்ளது. சிவன் தலையில் சூடியிருப்பது பிறை நிலா. ஆகையால் என் நண்பர் சொல்கிறார் தமிழர்களை கொண்ட தமிழ் சித்தாந்தம் நிலவை தான் வணங்க வேண்டும் என்று. இப்பொழுது நான் யார் பக்கம் நிற்பது? எது வைதீகம், எது தமிழ் சித்தாந்தம் என்று பாகுபடுத்துவது ? அவர் அவர்களுக்கு என்ன என்ன தோன்றுகிறதோ, அதுவெல்லாம் தமிழர்களின் சித்தாந்தம் ஆகிறது இந்த செம்பருத்தியில் தான் … இதில் “பதில் வேறு மாதிரியாக வரும்” என்று தேனீ மிரட்டுகிறார். ஐயா தேனீ அவர்களே, ஒரு காலத்தில் தேவ தாசிகள் என்று தமிழர்களின் பண்பாடுகளில், தமிழ் நாட்டிலேயே கோவில்களில் இருந்தது. இதை பகிங்கரமாக எதிர்த்தவர்தான் பெரியார். ஒரு தேவ தாசியிர்க்கு திருமணம் செய்து வைத்தார் பெரியார் …. ஆகையால் எது தமிழர் பண்பாடு, எது பண்பாடு அல்ல என்று வரையறுக்காமல் எப்படி ஐயா ஒரு சாரர்கள் மட்டும் ஏக போக உரிமை கொண்டாடுகிறீர்கள் ? ஐயா ப.ஜெயகாந்தன் சொல்லவில்லை தமிழை ரோமன் நுமேறல் கொண்டு எழுதுங்கள் என்று. வேறு ஒருவர் கூரியதை அவர் வலிமொளிந்திருக்கலாம்.
ஒரு காலத்தில் தேவ தாசிகள் என்று தமிழர்களின் பண்பாடுகளில், தமிழ் நாட்டிலேயே கோவில்களில் இருந்தது.—–(அப்படினா எதுக்கு சமசுகிருதத்தில் மந்திரம் படிக்கனும் ? யாருடைய அதிகாரம் அது?)————————அய்யோ2 எந்த கோவிலில் எந்த கருங்கல் துாணில் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லையே?
ஐயா dhilip 2 அவர்களே ,கோவில்களில் தேவதாசி தமிழர்களின் பண்பாடு என எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? அல்லது நீங்கள் சிந்தனை சோம்பேறியா ? அல்லது சாராய போதையில் எழுதினீர்களா ? ஐயா தமிழ் நாட்டு கோவில்களில் தேவ தாசி என்றால் நிச்சயமாக அங்கே bapa ayam பூணூல் போட்ட பூசாரிதான் .ஐயா தமிழர் பண்பாட்டிற்கும் ,ஆரிய பார்ப்பனர் பண்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியவில்லை போலும் .ஒரு உண்மை சம்பவம் பெரியாருக்கு முன்பே அன்றைய இந்திய அரசு ,கோவிலில் தேவதாசிகள் வழக்கத்தை ஒழிக்க முற்பட்டபோது ,தேவதாசிகள் முறையை ஒழிக்க கூடாது என்றும் ! அது தேவ குற்றம் என்றும்,அன்று ஊளையிட்ட ஓநாய் எது என்று தெரியுமா? வேறுயாருமல்ல உலக ஹிந்து ஆரிய தலைவர் சங்கராச்சாரி தான் .கூறுங்கள் தேவதாசி முறை தமிழ் பண்பாடா ?. உழவன் அவர்களே மூளையை முட்டியில் வைத்துக் கொண்டு அலைபவர்கள் அதிகம்தான் .
உழவன் அவர்களே , ‘சமஸ்கிருதம் கோயிலில் மந்திரங்களாக இருக்குறது இன்று’ என்று குற்றம் சொல்லும் நீங்கள், அதை ஏன் தமிழில் மொழியாக்கம் செய்து, குறைந்த பட்சம் மலேசியாவில் உள்ள கோயில்களுக்கு தந்து உதவுலாமே. வேலை செய்ய யாரையும் காணவில்லை, குறை சொல்ல மட்டும் வந்து விடுகிறீர்கள்! ஐயா உழவன் அவர்களே, தயவு செய்து சம்ஸ்கிருத பூஜைகளை இன்று நீங்கள் தமிழில் மொழியாக்கம் செய்தீர்கள் என்றால், நாளை வரும் நம் சந்ததியினர் , அதில் தேவையுள்ளது அல்லது தேவையில்லாதது (உழவன் உலைவைக்கப்பட்டாலும், பொங்கள் தேவை என்பது கேவலமானது! – சாந்தலட்சுமி பெருமாள்) சரி செய்து விடுவார்கள். நீங்கள் தான் சம்ஸ்கிருத ‘தாக்கத்தை’ கையில் எடுக்க மாட்டேன், மற்ற மாட்டேன் என்க்ரீர்கள். செய்யுங்கள் ஐயா … வாழ்த்துக்கள் ஐயா …
வெள்ளியூர் முருகன் அவர்களே, உங்கள் கோபம் ஞாயம் அற்றது. ஒரு தேவ தாசியின் வீட்டிக்கு, சிவ பெருமான் சென்று, ஒரு நாள் முழுதும் நோய்வாய் பட்டவர்போல் நடித்து, அந்த பெண்ணின் தொழில் தர்மத்தை மதித்து, அவளின் பரிவில் மனமுருகி, மறுநாள் அந்த பெண்ணிற்கு வரம் தந்தார் ஐயா. உங்களுக்கும் எனக்கும் தான் தாசியின் தொழில் அருவருப்பானது, நம் மார்க்கத்தில் இருக்க கூடாது, ஆனால் கடவுளுக்கு அப்படி அல்ல. அந்த பெண், சிவம் என்று தெரிந்ததும், உங்களுடைய கால் என்றும் என் தலையில் இருக்க வேண்டும் என்று கேற்பதற்கு பதிலாக, என் கால் உங்கள் தலையில் இருக்க வேண்டும் என்று மாற்றி கேட்டு, அதற்க்கு சற்றும் தயங்காமல் தந்தேன் என்னை என்றார் சிவபெருமான். வேத வியாசர் இந்த தருனங்களை விளக்குகிறார் சிவபுராணத்தில். ஆகையால் சிவத்தை வழிபாடும் சைவர்கள் இதை எப்படி எடுத்து கொள்வார்களோ என்று என்னக்கு இன்னமும் புரிய விலையையா….இப்படி ஒரு சம்பவம் வைதீக மதத்திலும் வருகிறது. நரகாசுவரனை கொன்ற கிருஷ்ணனிடம், அவன் மனைவிகள் அல்லது ஆசைநாயகிகல் (16,100 பெண்கள்), முறையிடுங்கின்றனர். நரகாசுரனையே நம்பி வாழ்ந்து விட்டோம், எங்கள் குடும்பத்தாரும் எங்களை என்று கொள்வார்கள், நங்கள் எங்கே செல்வோம் என்று. இதற்க்கு மாய கிருஷ்ணர் கேட்கிறார் “அதற்க்கு நான் என்ன செய்ய என்று ?” உடனே அந்த பெண்கள் சொல்கிறார்கள், நீயே எங்களை திருமணம் செய்து கொள் கிருஷ்ணா என்று அவன் பாதத்தில் விழுகிறார்கள். தன்னிடம் சரண் அடைந்த பக்தனை காப்பேன் என்று மனுவிற்கும் இஷ்வாகுவிர்க்கும் சொன்னது ஞாபகம் வர, கிருஷ்ணநே 16,100 உருவங்களை எடுத்து, அணைத்து பெண்களுக்கு திருமண வைபோகத்தை நடத்தினார், தானே மணமகனாக. இதில் இருந்து நான் புரிந்து கொண்டது என்ன வென்றால், நாம் தாம் மதத்தை செய்தோமே ஒழிய, கடவுள் அல்ல என்று. இங்கே எழுதும் அன்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் எதையாவது சொன்னால், உடனே நானே அதை உட்பத்தி செய்து எழுதிகிறேன் என்று என் மீது பாய்கிறீர்கள்…. அப்படி இல்லை ஐயா … நானாக எந்த ஒரு மதத்திற்கும் அல்லது மார்கதிர்க்கும் வரையறை வகுப்பதில்லை. அதில் உள்ளதை அப்படியே உரைக்கிறேன். அதற்கு என்னை ஏசுவதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், அதுவும் எனக்கு வெற்றிதான் காரணம் உங்கள் மனதிற்கு உறைக்கிறதே என்று.
சமுசுகிரத மந்திரத்தை ஏன் தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும்? தமிழர்களின் திருமுறைகள் படித்து இறைவனை போற்றலாமே,
ஐயா ப.ஜெயகாந்தன் சொல்லவில்லை தமிழை ரோமன் நுமேறல் கொண்டு எழுதுங்கள் என்று. வேறு ஒருவர் கூரியதை அவர் வலிமொளிந்திருக்கலாம்.// Dhilip 2, உங்கள் புளுகு மூட்டையை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள் , பொங்கல் தேவையா என்று கேட்ட ”சாந்த லெட்சுமி” , அவருக்கு வக்காலத்து வந்த ”வெள்ளியூர் முருகனுக்கும்” , பொங்கலே வேண்டாம் என்று சொல்லும் Dhilip 2 அவருக்கு வழி வகுத்து கொடுத்து விட்டீர் ! இது உங்கள் வெற்றியா என்று யோசித்து பாருங்கள் ? Dhilip 2 பெரியார் நாயக்கரை புகழ்ந்து பேசிவிட்டு , சிவன் ‘வேசி’ வீட்டில் படுத்துருந்தார் ,கிருஷ்னர் 16,100 பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்து இருந்தார் என்ற கருத்துதான் உங்கள் பகுத்தறிவா ? நீங்கள் தமிழ் படித்தவர் ,ஆனால் தமிழர் இல்லை என்பது தெளிவாகிறது , எங்களை (தமிழரை) குழப்ப எண்ணம் வேண்டாம் , கிளம்புங்கள் செம்பருத்தியில் காற்று வரட்டும் ! சாந்த லெட்சுமியும் அவருக்கு வக்காலத்து வாங்கிய வெள்ளியூர் முருகனும் மீண்டும் ஒரு முறை என் கருத்தை படியுங்கள் ,நீங்கள் இருவரும் இனமான தமிழர்கள் என்று நம்புகிறேன் !
பார்பன ஈர மரக்கட்டை மேலே உன்ன காணொளியை பாரடா
மாடசாமி .
இறைவனை போற்ற தேவை இல்லை. இறைவன் என்றுமே தன்னை போற்ற வேண்டும் என்று க்கொரியதே இல்லை. இந்த மதவாதிகள் இறைவனின் பெயரில் வயிர்வலர்க்கும் கும்பல்கள். இறைவனுக்கு எல்லாம் தெரியும். அவனுக்கு சிறு புத்தி கிடையாது. ஏன் இது யாருக்கும் புரியவில்லை? இறைவனை மனதில் நினைத்து மற்றவர்களுக்கு கெடுதி செய்யாமல் திருக்குறளை நினைவு கூர்ந்து அதன் வழி நடந்தால் ஆண்டவனுக்கு புரியும்.
“தேவ தாசியின் வீட்டிக்கு, சிவ பெருமான் சென்று, ஒரு நாள் முழுதும் நோய்வாய் பட்டவர்போல் நடித்து, அந்த பெண்ணின் தொழில் தர்மத்தை மதித்து, அவளின் பரிவில் மனமுருகி, மறுநாள் அந்த பெண்ணிற்கு வரம் தந்தார் ஐயா. உங்களுக்கும் எனக்கும் தான் தாசியின் தொழில் அருவருப்பானது, நம் மார்க்கத்தில் இருக்க கூடாது, ஆனால் கடவுளுக்கு அப்படி அல்ல. அந்த பெண், சிவம் என்று தெரிந்ததும், உங்களுடைய கால் என்றும் என் தலையில் இருக்க வேண்டும் என்று கேற்பதற்கு பதிலாக, என் கால் உங்கள் தலையில் இருக்க வேண்டும் என்று மாற்றி கேட்டு, அதற்க்கு சற்றும் தயங்காமல் தந்தேன் என்னை என்றார் சிவபெருமான். வேத வியாசர் இந்த தருனங்களை விளக்குகிறார் ” மேற்கண்ட இந்த நிகழ்வை விளக்கு பிடித்து பார்த்தவன் போல் வியாசர் எனும் ஒரு பார்ப்பனன் எழுதியதை ,தமிழ் பண்பாட்டிற்கு ஒப்பிடுவது என்ன கேவலமான செயல் ? திலிப் நிச்சயமாக நீ ஒரு மண்டை ஓடி போன கை லா, தமிழ் பண்பாட்டிற்கும் ஆரிய ஹிந்துக்களின் பண்பாட்டிற்கும் வேறு பாடு தெரியாத உங்களையெல்லாம் …………. தூக்கணும் .இல்லனா தெளிவா இருக்கிற தமிழனையும் கெடுத்துடுவ .
நோய்வாய்ப்பட்டவன் 1) மருத்துவரை பார்க்கணும் ,எதுக்கு மேக்கடைக்கு போகணும் தாசியை பார்க்கணும் சிவபெருமான் முக்காலத்தையும் உணர்ந்தவர் ,நெற்றிக்கண்ணை திறந்து இருக்கும் இடத்திலேயே அந்த தாசியின் குணத்தை அறியலாமே எதற்கு வேஷம் போட்டு அங்கே போகணும் ? காம வெறியன் அல்லவா அங்கே செல்ல வேண்டும் ?
வைதீக புராண அறிவு மட்டுமே கொண்டு தமிழர் வழிபாட்டிற்கு விடை காண முயலும் ஓர் அரைகுறை அறிவாளிக்கு விளக்கம். தமிழர் வழிபாடுகளில் தொன்மையானது அவர்தம் மரபு வழிபாடே. இம்மரபு வழிபாட்டில் முதன்மை வகித்தது இயற்கை வழிபாடு. இதில் கதிரவனையும், நிலவையும், கந்தழி எனும் பாசங்கள் நீங்கிய கடவுளையும் தமிழர் வழிபட்டனர் என்பதற்கு தொல்காப்பியர் காட்டிய வரலாற்று உண்மை கீழ்காணும் நூற்பாவின் மூலம் அறியலாம்:
“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
இதற்கு நச்சினார்க்கினியரின் பொழிப்புரை பின் வருமாறு:
“கொடிநிலை – கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம் (கதிரவன்); கந்தழி – ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி – தண்கதிர் மண்டிலம் (திங்கள்); என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் – என்று சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும்.”
” நன்றி தமிழ் உலகம்”
தமிழரின் இயற்கை வழிப்பாட்டில் சூரியனும், நிலவும் அவற்றைப் படைத்த பரம்பொருளான (சிவபெருமான் – பாசங்கள் நீங்கியவன் – ஆணவம், கன்மம், மாயை அற்றவன்) 2,500 ஆண்டுகளுக்கு முன்னமே வழிபட்டனர் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமோ?. இயற்கை வழிபாட்டில் தமிழர் அல்லாமல் பிற நாகரிமடைந்த பண்டைய இனக் குழுவினரும் சூரியனை வழிபட்டனர் என்பது கற்றோருக்குத் தெரியும். இது வைதீக சூரிய வணக்கத்திற்கு மட்டும் உரியது அன்று என்று அறிவீர்.
சிவபிரானின் சடையில் இருக்கும் நிலவைக் கொண்டு தமிழர்கள் நிலைவை தான் வழிபடுவர் என்று சொன்ன சோனகிரிக்கும் அதனை அவ்வாறே ஏற்றுக் கொண்டு இங்கே எழுதிய அறிவிலிக்கும் ஒரு விளக்கம்:
முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்தம் சித்தாந்த சைவம் எனும் நூலில் சிவபெருமானின் அணிகலனாக வீற்றிருக்கும் பிறை நிலவு விளக்கும் தத்துவத்தை இவ்வாறு விளக்குகின்றார்:
“சிவபெருமான் அணிந்துள்ள பிறை நிலவு தேய்தல் வளர்தல் இன்றி ஒரு நிலையாக இருக்கின்றது. இறைவன் உயிர்களின் பிறப்பு இறப்புகளை நீக்கி என்றும் நீங்காத முத்தியின்பம் தருவதை இது குறிக்கின்றது.”
இப்படிதான் தமிழர் கண்ட மெய்நெறியாகிய சைவ சித்தாந்தம் அனைத்திற்கும் அறிவுப் பூர்வமான பொருளை விளக்கும். இதற்கு மாறாக, விஷ்ணு மோகினி உரு கொண்டு சிவனுடன் கலந்ததால் ஐயப்பன் தோன்றினார் என்று வைதீக புராணகள் சொல்கின்றது என்று மற்றொரு கட்டுரையில் எழுதியவருக்கு எப்படி தெரியும் சுத்த சைவ சித்தாந்தத்தின் மகிமை?. தொடரும்.
உழவரே தாங்கள் எந்த தூணிலும் முட்டிக் கொள்ள வேண்டாம். தங்கள் கருத்தை படித்தவுடன் நானும் சிரித்து விட்டேன். தமிழரின் பண்பாடு என்னவென்பதை அறியாத ஒரு தற்குறி தன் முகத்திலே கரியைப் பூசிக் கொண்டதைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
“தேவதாசியை” ஏற்படுத்தியது யார்?. ஆரிய வேதத்தைக் கற்று ஆலயத்திற்குள் பூசைனை போட வந்த பார்பனர்களில் ஒரு சிலர் அங்கே உதவி புரிய வந்த பெண்களை தங்கள் வைப்பாட்டியாக்கிக் கொண்டனர். இது தமிழ் நாட்டிலும் நடந்தது, மலையாள தேசத்திலும், தெலுங்கு தேசத்திலும், ஹிந்து தேசத்திலும் மற்றும் எங்கெங்கு பார்ப்பனர் கோவில்களில் பூசகர்களாக இருந்தனரோ அங்கெல்லாம் நடந்தது. நல்லொழுங்கு படைத்த பிராமண பூசகர்களை இங்கே குறிப்பிடவில்லை என்பதை உணர்வீர். அப்படியானால் இது “பார்பனரின் பண்பாடு” அன்றோ?. இதுதானே உண்மையும் கூட. இப்படிபட்ட பார்பனரா கோவிலில் ஆரிய மந்திரம் ஓத தகுதி வாய்ந்தவர்?. தமிழரல்லாதோர் தமிழரின் பண்பாட்டை வியாக்கீனப் படுத்துவதற்கு முன் அவர் எறிந்த அம்பு தன்னை வந்து தாக்கும் என்பதை அறியாமல் எழுதுவது எவ்வளவு பெரிய மடத்தனம்!. இதற்கு வள்ளுவப் பெருமகனார் இவ்வாறு பகர்ந்தார்:
“அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃது அறி கல்ல தவர்”
இன்னது செய்தால் இன்னது விளையும் என முன்னதாக அறியவல்லவர் அறிவுடையவர், அதனை அறிய முடியாதவர் அறிவில்லாதவர். இதில் பின்னதில் சேரும் தமிழர் பண்பாடு அறியாத அந்த அறிவிலியின் கூற்று. தொடரும்.
சம்ஸ்கிருத மந்திரத்தைப் பற்றி யாம் கருத்து கூறுவதற்கு முன்னமே தினா (கம்பார்) என்பார் கருத்துக் கூறி விட்டார். அதுவே எம் கருத்தும் கூட. சம்ஸ்கிருத மந்திரங்களை மொழிபெயர்த்து தமிழில் ஓத வேண்டிய அவசியம் தமிழருக்கு ஏதுமில்லை. திருமேனி வழிப்பாடு கண்டவர் தமிழர். அதற்கு வழிகாட்டியது சைவ ஆகமங்கள். சைவ சமயத்தைச் சார்ந்த முருக, பிள்ளையார் வழிப்பாடுக்கு தமிழரின் வேதமாகிய திருமுறைகளில் இருக்கும் அத்தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களே தமிழரின் ஆலய வழிபாட்டிற்கு உரியது. சைவ அருளாளர்கள் ஓதிய தேவாரம், திருவாசகம் சிவ ஆலயங்களில் ஓதி வழிபட வேண்டிய மந்திரங்கள் ஆகும். இதனை மலேசிய அருச்சகர்கள் சங்கம் ஆவணக் கொண்டு செயல்படுத்த முன் வர வேண்டும். இந்து சங்கம் இதை நிறைவேற்ற தகுதியற்றது. தங்களை “சிவாச்சாரியார்” என்று குறியிட்டுக் கொண்டு சிவ நெறியில் நிற்காமல் மனம் போன போக்கில் பல நெறிகளைக் கொண்டு சாலை வட்டம் (’round about’) போன்று சுற்றிக் கொண்டே இருந்தால் நீங்கள் முத்தி காண்பது எப்பொழுது?. ஒரே நேர்வழியை எடுத்துக் கொண்டு இலக்கை நோக்கி நடந்தால்தான் உங்களுக்கு முத்தி என்பதை அறிந்து சிவ நெறி ஒன்றிலேயே நில்லுங்கள். அதுவே சிவாச்சாரியார் என்று தங்களை பட்டமிட்டுக் கொள்வோருக்கு அழகு. இது காரணமாக மலேசிய சைவ சமய பேரவை இனி வருங்காலங்களில் இதனை முன் நிறுத்தி மலேசிய அருச்சகர் சங்கத்துடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினால் நல்லது. மாற்றம் வரும். தமிழர் மனது வைத்தால் நிச்சயமாக வந்தே தீரும்.
பிறரைத் தீண்ட தாகத வார்த்தைகளை கையாள எம்மனம் தடுக்கின்றது. அதுவே இன்னமும் நல்ல மொழியில் எழுதுகின்றோம்.
இங்கு பலர் அறிவுக்கு ஒவ்வா வகையில் கருத்து கூறுகின்றனர். முன்பு என்னவோ நடந்திருக்கலாம் – பலரும் அவர்களின் ஆதிகத்தை காட்டி இருக்கலாம். இன்றைய நிலையில் நாம் எது அறிவுக்கு-பகுத்தறிவுக்கு -அறிவியலுக்கு ஏற்றாற்போல் நம்முடைய வழிமுறைகளை மாற்றிக்கொண்டு ஒற்றுமையுடன் வாழவேண்டும்.அனாவசிய வறட்டு கெளரவம் கொண்டு நம்மை நாமே மட்டம் தட்டி இழி நிலைக்கு கொண்டு போவது தவறு. யாருக்கு எந்த இறைவன்(?) வேண்டுமானாலும் இருக்கட்டும்–அதற்காக முட்டாள்தனமான சாங்கியம் சம்பிரதாயம் வழி தங்களின் குறுகிய மன நிலையை காட்ட தேவை இல்லை. இதற்காக நாம் அடித்துகொல்வதும் முட்டாள்தனம்– அத்துடன் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கு ஒத்த வற்றை ஆதரிப்பதே மேல். ஆண்டவனுக்கு எல்லாம் தெரியும்.
“Dhilip 2 பெரியார் நாயக்கரை புகழ்ந்து பேசிவிட்டு , சிவன் ‘வேசி’ வீட்டில் படுத்துருந்தார் ,கிருஷ்னர் 16,100 பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்து இருந்தார் என்ற கருத்துதான் உங்கள் பகுத்தறிவா ?” என்று தமிழர் நந்தா கேடிருக்கிறார். நான் எங்கேயும் “கிருஷ்னர் 16,100 பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்து இருந்தார்” என்று எழுதவே இல்லை. திருமணம் என்றால் அது செக்ஸ் தேவைக்கு தான் என்று குழம்பும் அன்பரே …. அறிவும் … பழக்கமும் தர்க்கம் செய்யும் பொழுது, சற்று போராடதான் வேண்டியுள்ளது. ஐயா இந்த தப்பான பெண் வீட்டில் சிவம் இருந்த கதையை நான் மட்டும் கூர வில்லை. ஐய சுகி சிவம் அவர்களும் பேசியிருக்கிறார். அந்த லிங்க் தருகிறேன் … பொறுமை அவசியம்….
சிவத்தை அடைந்த பட்டினத்தார் மற்றும் பத்ரிகியார் அவர்களின் கதைகளை படியுங்கள்…. அவர்கள் புலம்பல் என்ன என்ன வெள்ளம் சொல்கிறது என்று பாருங்கள் …. அப்பொழுது புரியும்…பட்டினத்தார்: ஒரு ஆணின் மனம்: நித்தம் பிறந்த இடன் தேடுதே பேதை மட நெஞ்சம், கறந்த இடம் நாடுதே கண். அருணகிரிநாதர் தன் மனைவியை வேசியின் வீடிற்கு அழைத்து சென்று… தான் செய்யும் லீலைகளை பார்க்க வேண்டும் என்று அடித்து துன்புரித்தினார். இன்று முருகனுக்கு பக்கத்தில் சிலையாக நின்று எல்லா பூஜைகளையும் வாங்கி கொள்கிறார் … ஆகையால் … கடவுளின் பார்வை நிச்சயமாக தமிழர்களுக்கு ஒன்றும் மற்றவர்கலுக்கு ஒன்றும் கிடையாது .
இஸ்லாமியர்களை விரட்டி ஹிந்து மதத்தை வாழவைக்கபோறோம் என்று ஆந்திராவிலிருந்து தமிழர் தாய்நிலத்தை ஆக்கிரமிக்க வந்த தெலுங்கு நாயக்கர்கள் முறைதான் தேவதாசி மற்றும் தங்கள் மலகழிவை அகற்ற தெலுங்கு தாள்தபட்டவர்களையும் அழைத்துவந்து பார்பன சாத்திய முறையையும் தமிழர் மண்ணில் பரப்பியவர்கள் .. தமிழர் ஆலயங்களில் தெலுங்கு பார்பனர்களை அமர்த்தியும் விட்டவர்கள் .தமிழர் ஆலயங்களில் நீசபாசை வழிபாடும் அறிமுகபடுதியவர்கள் .. இவர்களின் வாரிசுகள்தான் இன்றைய தமிழ் தலிவர்கள் … கருணாநிதி ,வைக்கோ ,விஷ்கி காந்த் போன்றோர் …
நம் தமிழினம் பட்ட துயரங்களை பலரும் உணர்ச்சி உடன் வெளிப்படுத்த்தி உள்ளார்கள்..இவற்றிலிருந்து மீண்டுவர ஒரே வழி
ஒவ்வொரு தமிழனும் நான் என்னும் எண்ணத்தை விட்டு நாம் என்று எண்ண துவங்க வேண்டும்.
https://www.facebook.com/video.php?v=948586628508936&set=vb.100000728228619&type=2&theater
சாலிவாகனன் யார்? ஒரு வடவன் . அவனால் தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் என்ன பயன்? அவன் பேரால் தமிழாண்டு என்றால் ஏற்று கொள்ள கூடியதா?
இதன் பின்னல் ஆபாசமான கதை உள்ளது என்பதால் தான் 500 தமிழ் அறிகர்கள் ஒன்று கூடி திருவளுவராண்டு தமிழாண்டு என்று சொன்னார்கள். எது எப்படியா என் பாட்டன் வள்ளுவனால் என் இனத்துக்கு பெருமை .
வாழ்க வள்ளுவராண்டு தமிழ் புத்தாண்டு
யார் யாருக்கு மதச்சட்டங்களைப் போட்டு மக்களை அடிமைப் படுத்தி வதைத்தனர்? ஏன் 16-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையிலானா மத சட்டங்ககளைக் கொண்டு ஆண்டு வரப்பட்ட ஆங்கிலேயர்கள் அதனை பாதிரியார்கள் பாரபட்சமான முறையில் செயல்படுத்துகின்றனர் என்று கூறி அதற்கு மாற்று வழியாக சிவில் சட்டங்களை அறிமுகப் படுத்தினர்?. அவ்வாறே இந்தியாவிலும் மனு (இந்து) தர்மம் அடிப்படையிலான சட்ட அமைப்புக்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சுய நலக்கிருமியானவர்கள் பிறரை துன்புறுத்தியதாலேயே ஆரிய மதக் கோட்பாடுகள் வெறுக்கப் பட்டன. ஒதுக்கப்பட்டன. அந்த சட்டங்களை தகர்த்தெறிய வேண்டும் என்ற ஆதங்கம் அன்று எங்கும் வெளிப்பட்டது. தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் துணிவால் தமிழர் வெகு சீக்கிரமாகவே அந்த வைதீக மத கிடுக்குப் பிடியில் இருந்து தப்பினர். இல்லையேல் இன்றும் நாம் அவர்களுக்கு அடிமையாகவே வாழ்ந்திருக்க வேண்டும். அதனால் ஆரிய பிராமணர் பண்பாடு தமிழர் மீது திணிக்கப் பட்டதற்கு அக்காலக் கட்டத்தில் எதிர்ப்பு நடந்தது என்பதை மறுக்க வேண்டிய அவசியமே இல்லை. எப்படி அவர்களால் பிறர் பாதிக்கப் பட்டனரோ அவ்வாறே பாதிக்கப் பட்டோர் பதிலடி கொடுத்தது தப்பாகுமோ?. அன்று நடந்தது இன்றைய ஹின்றாப்ட் எழுச்சி போன்றதுதான். தமிழர் தமிழனாக வாழ வழி வகுத்தவர்களில் திராவிட கழகத்தாருக்கும் பங்குண்டு என்பதை தமிழர்கள் வெகு சீக்கிரமாக மறந்து விடக் கூடாது. வீரமணி அவர்கள் வயது தளர்ச்சி காரணமாக தற்காப்பில் நின்றதை மட்டும் வெட்டி ஒட்டி போடுவது முறையாகாது. அந்த பேட்டியை முழுமையாக காண நேர்ந்தால் கருத்து எழுத ஏதுவாக இருக்கும்.
தமிழ்ச்சதுரர் மு.பெ சக்திவேல் முருகனார் அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலக சைவ சமய மாநாட்டு மலருக்கு வரைந்த “தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு” என்ற கட்டுரையில் இருந்து சில பொன் மொழிகள்:
“இந்த “சக .ஆண்டு” என்ன? யாருக்குத் தெரியும் என்கிறீர்களா? நானே சொல்லி விடுகின்றேன். …
“விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த ஆண்டுதான் சக ஆண்டு. விக்கிரமாதித்தன் தமிழனா? இல்லை. அவன் ஒரு சாளுக்கிய மன்னன்?. அப்புறம் ஏன் அவன் பெயரில் தமிழன் தன் ஆண்டுக் கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்?. ஏதாவது வேண்டுதலா?.”
” ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொரு ஆட்சியாண்டு இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அயலவர் ஆட்சி வந்தது. அதனுடன் வடமொழி பிராமணர்கள் தமிழகத்தின் பலவேறு ஊர்களில் அயலின மன்னர்களால் குடியேற்றப் பட்டனர் என்று வரலாறு கூறுகிறது. பல சதூர் வேதி மங்கலங்கள் தமிழகத்தில் முளைத்தன. இவர்கள் தமிழகத்து அரசர்களின் ஆதரவைத் தமக்கு ஆதரவான சாத்திரங்கள் காட்டிப் பெற்றனர். அவர்களுக்கு இறையிலியாக சிற்றூர்கள் வழங்கப் பெற்ற போது வடக்கிலிருந்து வந்தவர்கள் ஆட்சியாண்டை வடமொழியில் உள்ள சக ஆண்டுக்கு மாற்றிக் கல் வெட்டிக் கொண்டார்கள். இதுதான் சக ஆண்டு தமிழகத்துள் நுழைந்த கதை.”
“ஒரு கேள்வி: பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆண்டை திடீரென மாற்றலாமா?”
ஒவ்வொரு அரசனும் வரும் போது ஆட்சியாண்டு மாறிக் கொண்டே வந்திருக்கின்றது என்று கல்வெட்டுகள் சான்று கூறுகின்றது. அப்படியானால், தமிழரசு ஒன்று தமிழாண்டுக்கு மீண்டும் மாறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?”
“விக்கிரமாதித்தனுக்கு முன் மன்னர்களே இல்லையா?. அவனோடு தான் இந்த உலகம் பிறந்ததா?. இல்லையே. அவன் பிறந்த பின் அவனை ஒட்டிய ஒரு புதிய ஆண்டுக் கணக்குக்கு மாறலாம் என்றால் அவனோடு எந்தத் தொடர்பும் இல்லாத தமிழினம் தன் இனத்தோடு தொடர்புடைய ஆண்டுக் கணக்கிற்கு மாறுவதில் என்ன தவறு இருக்க இயலும்?”
“போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் இந்தப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராயிந்தார்கள். அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள் இரண்டு. இனி தமிழர்கள் மட்டுமின்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்து விடும்.”
“இரண்டாவதாக ஆண்டுத் தொடக்கத்தை தை முதல் நாளிலிருந்து கணக்கிடுவது.”
“தமிழன் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால் தான் வள்ளுவர் ஏர்ப் பின்னது உலகம் என்றார். உழவன் ஆண்டு முழுவதும் உழைத்து இயற்கையோடு இயைந்து பருவத்தே பயிர் செய்து முடிவில் பலன் காண்கின்ற மாதம் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்துக் கிடப்பவன் தமிழன். எந்த மாதத்தில் தமிழனுடைய வாழ்வில் வழி பிறக்கின்றதோ அந்த மாதத்தில் ஆண்டு பிறக்கட்டுமே!. அப்போது தானே ஆண்டு முழுவதும் அவனுக்கு நல்லபடியாக நடந்தேறும். இதையெல்லாம் சிந்தித்துத் தான் தமிழறிஞர்கள் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் இந்த மாதத்தில் இயற்க்கை கூட இனிமையான கரும்பைக் கொடுக்கிறது. தமிழன் இயற்கையான இனிமையையே தேர்ந்தெடுப்பவன்.”
இதற்கு மேலும் திருவள்ளுவர் ஆண்டைப் பற்றி விளக்கம் வேண்டுமோ?.
.
500 தமிழ் அறிகர்கள் ஒன்று கூடி திருவளுவராண்டு தமிழாண்டு என்று சொன்னார்களாம்.கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போனது?சற்று பின்னோக்கி பார்த்தால் குறைந்த பட்சம் 5000 வருடங்களில் வாழ்ந்த அத்தனை தமிழர்களும் வடவனுக்கு தூபம் காட்டிக் கொண்டா இருந்தார்கள்? ஔவையார் முதற் கொண்டு வள்ளுவன் படைப்பை மெச்சி பாராட்டினார்களே தவிர அவருக்கு சிலைவடிக்கவோ அல்லது அவரின் பெயரை ஆண்டு கணக்கிட பரிந்துரைக்கவோ இல்லையே.அரசர்கள் பலர் தங்கள் பெயரில் ஆண்டு கணக்கை அமைத்துக் கொள்ளும் போது தமிழக அரசு பெயரை மாற்றினால் என்ன? நல்ல கேள்வி.ஆனால் காலத்தை கணக்கிடும் போது நம் இஷ்டத்திற்கு Calender Girls படத்தை மாற்றிக் கொள்வதைப் போல் அல்லவே .அதற்கென்று வரையறை உண்டு.
( சகாப்தங்களின் உண்மை நிலவரத்தைப் பார்ப்போம்.
’ விஞ்ஞான சர்வஸ்வம்’ என்னும் நூலில் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பாரத மண்ணைச் சேர்ந்த மக்கள், பாரதீயம் அல்லாத, மற்றும் பாரதீயத்திற்கு எதிர்மாறான கொள்கைகளை உடைய அன்னிய நாட்டவரைப் படை பலத்தால் வென்றால், எந்த மன்னன் அப்படி வென்றானோ அவன் பெயரில் ஆண்டுகள் சொல்லப்படவேண்டும்.
அதை அந்த மன்னன் பெயரில் சகாப்தம் என்று அழைத்தனர்.
கலி யுகம் பிறந்தது முதல் இன்று வரை மூன்று மன்னர்கள் அவ்வாறு அன்னியர்களை வென்றிருக்கின்றனர்.கலியுகம் ஆரம்பித்து 5112 வருடங்கள் ஆகின்றன.இடைவிடாமல் கணக்கிடப்பட்டு வந்திருக்கும் கணக்கு இது.சிந்து சமவெளி நாகரீகம் என்று சொல்லப்படும் காலத்திற்குச் சற்றுமுன் இது தொடங்கி இருப்பதைக் கவனிக்கவும்.அதாவது, ஒரு பாரத மன்னன், வேத மரபுக்கு முரணான வாழக்கையை வாழ்ந்தவர்களை வெற்றி கொண்ட பிறகுதான், சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்திருக்கிறது. அதாவது, வேதம் கொடுத்த ஆரியர்கள் வந்தார்கள் என்று சொல்லப்படும் காலத்துக்கு முன்பேயே, திராவிடர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வேத- தரும வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது.)
ஆக நம் இஷ்டத்திற்கு எல்லா Dick & Harryகும் ஆண்டு பெயரை வைத்து விடுவது முறையல்ல.
தையில் புத்தாண்டா?
திரும்பிய பக்கமெலாம் தெய்வக் கோவில்கள் இருந்த பண்டைய தமிழ் நாட்டில், எந்த தினத்தைத் தேடி எடுத்தாலும் அதில் வேத ‘ஆரியம்’தான் இருக்கும். அப்படியிருக்க, திராவிடவாதிகளது ‘கண்டுபிடிப்பான’ தை வருடப்பிறப்பில் மட்டும் அது இல்லாமல் போய் விடுமா? விடிய விடிய இவர்கள் திராவிடம் பேசினாலும், இவர்கள் வருடப் பிறப்பென்று சொல்லும் தை முதல் நாளை வேத மரபிலிருந்துதான் கடன் வாங்கியிருக்கிறார்கள். தை மாதத்திற்குப் பதிலாகச் சித்திரையையே ஏற்றுக் கொண்டிருந்தாலாவது, பழந்தமிழ் மன்னர்கள் வழியைத்தான் பின்பற்றுகிறோம் என்று சொல்லியிருக்கலாம்.
தைப் பொங்கலை திருமால் அடியார்களிடமிருந்தும், மாட்டுப் பொங்கலை முல்லை நில ஆயர்களிடமிருந்தும் கடன் வாங்கியிருக்கிறோம். தைப் பொங்கலின் ஆரம்பம் மார்கழியிலேயே தொடங்குகிறது. மார்கழியில் ஆரம்பித்து, கார்த்திகை மாதம் வரை, 12 மாதங்களும், கோகுலத்து ஆயர்களும், விஷ்ணு பக்தர்களும் விஷ்ணுவை ஆராதித்து வந்தனர்…
…பொங்கலா? சங்கராந்தியா?
“திருச் சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திரு உற்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் முப்பத்து நான்கும்” (“கல்லும் சொல்லும்”, பக் 147, இரா. நாகசாமி)
என மொத்தம் 34 விழாக்கள் தஞ்சைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. சதயத்திருவிழா என்பது, ராஜராஜ சோழனது பிறந்த நாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட கோவில் விழாக்களாகும், குலோத்துங்க சோழனது பிறந்த நாளை பூசத்திருவிழா என்று கொண்டாடியது போல, ராஜராஜ சோழனது பிறந்த நாளை சதயத் திருவிழா என மாதம் தோறும் கொண்டாடியிருக்கிறார்கள். இது தவிர கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். சித்திரை விஷுவைவும், ஐப்பசி விஷுவையும் விமரிசையாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இவை முறையே சித்திரை மாதப் பிறப்பும், ஐப்பசி மாதப் பிறப்பும் ஆகும். விஷு என்றால் ‘சம பகல்- இரவு நாள்’ என்று பொருள். இந்த இரண்டு நாட்களிலும் விமரிசையாக விழாவும், கொண்டாட்டங்களும் நடந்திருக்கின்றன என்றே கல்வெட்டுச் சான்றுகள் காட்டுகின்றன. சித்திரை விஷு என்பதே தமிழ் வருடப்பிறப்பாகும். விஷு என்றே 1000 வருடங்களுக்கு முன் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் எழுதியிருக்கிறார்கள்.
இதில் காமெடி என்னவென்றால், தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தியும், போகிப் பண்டிகையும், மாட்டுப் பொங்கலும், கிருஷ்ணனைத் தெய்வமாகக் கொண்டாடிய கோகுலத்து மக்கள் வழக்கமாகும். ராமனைத் திட்டியவர்கள், கிருஷ்ணனை அரவணைத்து பரிகாரம் தேடுகிறார்கள் போலிருக்கிறது!
பொங்கல் என்பது அறுவடைப் பண்டிகையாக இருந்தால், அதன் அடையாளம் மருத நிலத்தில் தென்பட வேண்டும். அதற்கான ஆதாரம், சோறுடைத்தச் சோழ நாட்டில் கிடைக்க வேண்டும். ஆனால் சோறுடைத்த சோழன் தலைநகரமான தஞ்சையில் கிடைத்த ராஜ ராஜன் காலக் கல்வெட்டில், மகர சங்கராந்தி உட்பட பன்னிரெண்டு சங்கராந்திகளையும் கொண்டாடினதுதான் சொல்லப்பட்டுள்ளது.
சங்கராந்தி என்றால், நுழைதல் என்பது பொருள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நேரத்தை சங்கராந்தி என்பார்கள்.மகர ராசியில் நுழையும் நாள் தை முதல் நாள் ஆகும். அதை மகர சங்கராந்தி என்றார்கள். இதை மாதப் பிறப்பு என்கிறோம். அதைப் பொங்கல் என்றோ, வருடப் பிறப்பென்றோ கொண்டாடவில்லை. சங்கராந்தி என்றே கொண்டாடினார்கள். 12 மாத்த்திற்கு 12 சங்கராந்திகள் கொண்டாடினார்கள் என்பதைச் சோழ வளநாட்டுத் தஞ்சைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அந்தக் கல்வெட்டில் ஒரு வருடத்தில் மொத்தம் 34 விழாக்கள் கொண்டாடப்பட்டன என்று சொல்லப்பட்டுள்ளது. அதில் தைப் பொங்கல் இடம் பெறவில்லை.
முழு கட்டுரைக்கு: http://thamizhan-thiravidana.blogspot.com/2012/01/94.html
எதற்காக தமிழர் மாற்றான் பண்பாட்டை பின் பற்ற வேண்டும்?. இதற்கு முதலில் பதில் சொல்லி விட்டு மேலும் போகவும். முல்லை மக்கள் தமிழர்கள் இல்லையா?. திருமால் வழிபட்டவர்கள் தமிழர் இல்லையா? பின்னாளில் அவர்கள் வைணவ மதத்தை வைதீகத்துடன் இணைத்துக் கொண்டு திருமாலை விஷ்ணுவாக்கிக் கொண்டார்கள் என்பதால் பண்டைய முல்லை மக்கள் தமிழர் அல்லாதவர் ஆகி விட்டனரோ? இப்ப எந்த முல்லையில் வைணவ ஆரிய மக்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.? எங்களுக்கு ஆரியமும் வேண்டாம். அவர்களது ஆண்டும் வேண்டாம், அவர்கள் பண்பாடும் வேண்டாம் என்றால் ஏன் வலுக்கட்டாயமாக அதைத்தான் பின் பற்ற வேண்டும் என்று வம்புக்கு நிற்கின்றீர்?. காரணம் நீர் தமிழர் அல்ல என்பதால் அல்லவா?. உமக்கு அவர்களை விட்டால் வேறு வழி என்பதால் அல்லவா?. நீர் வேண்டுமானால் எந்த ஆண்டையாவாது எடுத்துக் கொள்ளும். அது கி.மு. வாக இருக்கட்டும் அல்லது கி.பி. யாகவாது இருக்கட்டும் அல்லது எந்த ஆரிய ஆண்டாகாவாது இருக்கட்டும். எங்களுக்கு என்ன வந்தது?. அதை தமிழர் கடைபிடிக்க வேண்டும் என்று நிற்பந்திப்பதில் உமக்கு என்ன உரிமை இருக்கின்றது?. நீர் தமிழனா?. இந்நாட்டு தமிழர் என்ன உமக்கு அடிமைப் பட்ட சஞ்சிக் கூலிகள் என்ற நினைப்பா?. போங்கடா உங்க ஆரிய ஆண்டும் மண்ணாங்கட்டியும்.
“500 தமிழ் அறிகர்கள் ஒன்று கூடி திருவளுவராண்டு தமிழாண்டு என்று சொன்னார்களாம்.கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போனது?”.
அறிவுள்ள தமிழறிஞர்கள் வழி காட்டியதைக் கேட்டுப் பின்பற்றுவதர்க்கு தமிழருக்கு அறிவுண்டு. அது கேப்பார் பேச்சி கேட்டுக் கொண்டு ஆடுவது அல்ல. அது அறிவுடைய தமிழர் கொண்ட வழிமுறை என்பதை அறிந்து தமிழர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத இந்த அகஸ்டின் சொல்வதையா தமிழர் கேட்க வேண்டும்?. நீ யாருடா தமிழருக்கு அறிவு புகட்ட?. உங்க அப்பன் தமிழனா?. உங்க அம்மா தமிழச்சியா? அல்லது நீர்தான் தமிழனா?. மானங்கெட்டவனே.
தேனீ அருமையாக சொன்னீர் ..
இவன் திராவிட திருட்டுமுதேவி . மானம்கேட்டவன் ..
தேனீ இனிமேலும் திருட்டு திராவிடத்துக்கு ஆதராவா பேசாதிர்கள்..
தமிழகத்தில் இப்போது திருட்டு திராவிடம் எடுபடாதேன்றதும் …வந்தேறி திருட்டுகலகங்கள் அனைத்தும் வரும் சட்டமன்ற தேர்தலை மனதில்கொண்டு கூட்டணி அமைக்கபோரார்களம்!!
மானம்கெட்டவனுன்க…மலேசியாவிலும் உயர்ந்த நிலையில் உள்ள தமிழர்களை தங்கள் வீட்டுபென்னை வைத்து வலைத்துபொடுவானுக.. பலமாநிலங்களில் உள்ள தமிழ் மன்னன் பெயர்தாங்கி வியாபாரி மனைவி வடுகச்சி .. இவன் சகோதரர்களை அந்நியபடுதிவிட்டாள். உருகாற தொளிலாலியானாலும் வடுகரா என்றுதான் பார்த்து பதவிகொடுகிராலாம் வடுகச்சி ..
தமிழர்களால் உருவாக்கபட்ட இந்துசங்கம் இன்று வடுகர்கள் கையில் .தேசியத்தலைவர் ,மாநிலத்தலைவர் எல்லாம் வடுகபயலுவ!! நேற்றைய தமிழ் நாளிதழில் ஆகமப்படி ஆலயங்கள் செயல்படவேண்டுமாம் ..அப்போதானாம் மாநில அரசின் மானியம் கிடைக்குமாம் .. பெரும்பான்மை தமிழர்களை இவர்கள் தலைமை தாங்குகிறார்கள் வெக்ககேடு
பெங்களூருவில் தமிழ் சிறுமியை அடக்கம் செய்ய எதிர்ப்பு: தமிழகம் கொண்டுவரப்பட்டது உடல்..
இதே சம்பவம் ஒருபேச்சுக்கு தமிழர்களால் தமிழகத்தில் நடந்திருந்தால் திராவிட நாய்களும் அவர்களின் தொலைகாட்சிகளும் /பார்பனர்களும் எப்படி விஷம் கக்கி இருப்பார்கள் ?
நம் நாட்டில் மதவாதம் ஓரளவு இருந்தாலும் இறந்த உடலுக்கு இடமில்லை என்று சொல்லி நான் அறியேன் !!
அந்த உர் தமிழர் மண் முன்னொரு காலத்தில் ..
http://m.tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article7051903.ece
…………..பாவம் ……………….தமிழும் புரியல தமிழ் பண்பாடும் தெரியல.மறு கருத்தை முன் வைக்கவும் முடியல.நீ தமிழனா என்று கேட்டுவிட்டால் என்னவோ தான் தான் தமிழன் என்று ஊர் மெச்சும் என்று நினைத்துக் கொள்ளும் ………..
ஆய்வு கட்டுரை ஆர்வலர்களுக்கு:
http://thamizhan-thiravidana.blogspot.com/2011/01/28.html
jayasreesaranathan.blogspot.com/
தமிழர்கல்கு வெட்கம் மானம் சூடு சரனை கிடையாது வேறு என்ன சொல்ல?
“தேனீ அருமையாக சொன்னீர் ..
இவன் திராவிட திருட்டுமுதேவி . மானம்கேட்டவன் ..
தேனீ இனிமேலும் திருட்டு திராவிடத்துக்கு ஆதராவா பேசாதிர்கள்..” என்று தமிழர் எழுச்சி பறை எழுதி உள்ளீர். அப்படி என்றால் தேனீ இதுவரை திராவிடர்களுக்காகதான் பேசி கொண்டிருக்கிறாரா ? இனிமேலும் பேசாதிர்கள் என்று கேட்கிறீர், அப்படி என்றால் இதுவரை பேசினார் என்று தானே பொருள் வரும். ஒ இதுதான் சந்துல சிந்து பாடறதோ ? அகஸ்டின் … என்னையும் (திலிப் 2) இவர்கள் ஆரியனாக , திராவிடனாக , சிங்களவனாக பல முறை விமர்சித்து விட்டார்கள் …. நீங்களாவது பரவாயில்லை …. என் பரம்பரையையே விளாசிவிட்டார்கள் … காரணம் இவர்கள் கூரும் தமிழ் பண்பாட்டு வழிகளுக்கு நான் ஒத்து வராதது தான் காரணம்…..
இந்நாட்டில் பிறந்த அனைவருமே இந்நாட்டின் குடிகளென நாம் சொல்கிறோம். குடிகளுக்கு இடையில் பாகுபாடு, ஏற்றதாழ்வு கூடாது; உரிமைகளிலும் சலுகைகளிலும் சமத்துவம் வேண்டும். இவ்வாறு நாம் வேண்டுகிறோம். இந்த அடிப்படையிலேயே, நாடு விடுதலை அடைந்ததுமுதல் மலேசியாவை ஆண்டு வரும் தேசிய முன்னணியை எதிர்க்கிறோம். மாற்று அரசியலை ஆதரிக்கிறோம். நம் குழந்தைகளும் அவர்களின் குழந்தைகளும் யார்? நம்மை விட்டுத்தள்ளுவோம். (அதிகம் அனுபவிச்சாச்சு; இனி அவன் நம்ம அரவணைச்சாலும் அதனால நமக்கு ஒன்னும் ஆகப்போவது இல்ல.) ஆனால் நம் பிள்ளைகளும், அவர்களுக்குப் பின் வரும் நமது சந்ததியினரும் வந்தேறிகள் என்ற பட்டத்தோடுதான் வாழ வேண்டுமென விரும்புகிறோமா? எக்காலத்திற்கும் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுகமாகவே நமது பிள்ளைகள் வாழ வேண்டுமெனச் சொல்லாமல் சொல்கிறோமா? என்ன ஒரு கேவலமான வாதம்! மக்களைப் பிரித்தாளும் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நமக்கே அவைபற்றிய தெளிவும் அவற்றிற்கு எதிரான தீவிர சிந்தனையும் இல்லாவிடின் நம்மைச் செம்பருத்தி வாசகர்களெனச் சொல்லிக்கொள்வதில் பொருளிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை…
ஆரிய சித்திரை வருடப் பிறப்பு எங்கிருந்து வந்தது? தெரியவில்லை என்றால் நானே சொல்லிவிடுகின்றேன். அது வந்தது சோதிடத்தில் இருந்து. சோதிடம் என்பது என்ன?. தனி ஒரு கல்வித் துறையாக விளங்கிய வானவியல் சாத்திரம். இந்த சோதிடம் சாத்திரம் ஆரிய நெறி தோன்றிய காலத்தே தோன்றி வந்தது அல்ல. இதனை யார் வேத நெறியுடன் ஒட்டி வைத்தது?. வேத நெறியின் ஆறு அங்கங்களில் ஓர் அங்கமாக ஓட்டிவைக்கப் பட்டது ஆரியரால். ஏன் ஓட்டிவைக்கப் பட்டது? காரணம் அவர்கள் சோதிடத்தை தங்கள் வாழ்வியல் பண்பாடாக ஏற்றுக் கொண்டனர். இந்த சோதிடம் வரைமுறை செய்யப்பட்டு தனிநபர் பயன்பாட்டிற்கு வந்தது கடந்த 1,600 வருடங்ககளுக்கு பிந்தியே. அதற்கு முன்பு கால மாற்றத்தை அறிய பயன்படும் வானவியல் சாத்திரமாகவே இருந்து வந்தது. இப்ப சொல்லுங்கள் சோதிடம் யார் பண்பாடு?. ஆரியர் பண்பாட்டில் வந்த அதை தமிழர் பின்பற்ற வேண்டும் என்று நமக்கு என்ன வேண்டுதலையா?. தமிழருக்குத் இயற்கையுடன் ஒட்டிய அவர்கள் வாழும் மண்ணின் நிலைக்கு ஏற்ற தனி பண்பாடு உண்டு என்பதை தமிழ்ச்சதுரர் மு.பெ சக்திவேல் முருகனார் அவர்களின் கருத்தில் இருந்து தெரிகின்றது அல்லவா? அப்புறம் ஏன் தமிழர் பிறரின் பண்பாட்டை பின் பற்ற வேண்டும் என்று வர்புறுத்துகின்ரீர்?. தமிழரின் திருமண விருந்தில் குத்து விளக்கை ஏற்றி மணமக்களுக்கு வாழ்த்து பா பாடி வாழ்த்தும் வழக்கம் போய் இப்பொழுது அணிச்லில் ஏற்றிய மெழுகுவர்த்தியை “அனைத்து” “மதுரசத்தை” கோப்பையில் மணமக்கள் ஊற்றிக் குடிக்கும் பழக்கம் வந்து விட்டதால் தமிழரை மதம் மாற்றம் செய்வதற்கு முதல் படி போடப் பட்டு விட்டது. இப்படியே தமிழருக்கு இருக்கும் பண்பாட்டை இழந்து மற்றவர் பண்பாட்டை பின்பற்றி தமிழர் அழிய வேண்டும் நினைப்பவர்தான் ஆரிய பண்பாட்டிற்கு தூபம் போட்டு ஆராத்தி எடுப்பார். இது மானங்கெட்டவன் பிழைப்பு. உண்மைத் தமிழர் பிழைப்பு அல்ல. தொடரும்.
தமிழ்ச்சதுரர் மு.பெ சக்திவேல் முருகனார் அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து விடுத்த வரிகளை மேலும் பதிலாக எழுதுகிறேன்:
“சக ஆண்டைத் தமிழகத்தில் நுழைத்தவர்கள் மாதங்களுக்கும் சமஸ்கிருதப் பெயர்களை நுழைத்தார்கள். தமிழர்களின் ஆண்டு வரலாற்றில் வாராத காலத்தில் இப்போதைய சித்திரையில் இருந்து தொடங்கவில்லையாம். ஆவணி மாதத்தில் இருந்து தொடங்கியதாக தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியார் குறிப்பிடுகின்றார்.
இது பற்றி ஆரிய பரத்துவாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியார் கூறுவது:
கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் ஆண்டாம். ஆதலின் இதை எங்கே குறிப்பிடுகிறார்?.
“காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.”
என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிவர் தான் மேற்கூறியவாறு ஓர் ஆண்டுக் கணக்கு இது என்று காட்டினார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி, கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கின்றது என்பது நச்சினார்க்கினியார் உரையின் மூலம் அறிய முடிகின்றது அதாவது சித்திரையில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரையே ஆணித்தரமான சான்று.
சக ஆண்டை நுழைத்தவர்கள் இதை மாற்றினார்கள். சூரியனது ஆட்சி வீட்டிற்கு உரிய சிம்ம ராசிக்குப் பதிலாக சூரியன் உச்சம் பெரும் இராசியான மேஷராசிக்கு மாற்றி அதற்கு உரிய மாதமான சித்திரை மாதத்திலிருந்து ஆண்டுத் தொடக்கத்தை அமைத்து எல்லா மாதங்களுக்கும் அதையொட்டி 60 ஆண்டுகளுக்கும் வடமொழி பெயர் வைத்துத் தமிழ் நாடில் உலாவ விட்டார்கள். அரசனது ஆதரவு பெற்று கல்வெட்டுகளில் அவர்கள் தொடர்ந்து இந்த மாதப் பெயர்களையும் ஆண்டுப் பெயர்களையும் புகுத்தி நடைமுறைப் படுத்தியதால் அதுவே நிலை பெறலாயிற்று. இதுதான் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஆன கதை.
இப்பொழுது எழும் கேள்வி என்ன என்றால் ஆவணி மாதத்தில் இருந்து அயலவர்கள் தமிழகத்தில் நுழைந்து சித்திரைக்கு மாற்றி இது தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழர்களின் மீது திணிப்பது எப்படி நியாயமாகும்? அதே போல் அந்தக் கணக்கைத் தமிழர்கள் சிந்தித்துத் தமக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி அநியாயம் ஆகும்? ஆகவே மாற்றம் அவசியம் வேண்டும்.”
இதுதான் தமிழ்ச்சதுரர் மு.பெ சக்திவேல் முருகனார் வழி யாம் கொடுக்கும் பதில். ஆரிய வேதநெறிகளையும் பண்பாட்டையும் பாடிக் கொண்டு “தமிழன் திராவிடனா” என்று கேள்வி கேட்ட ஆரிய பிராமணருக்கு அடிமையாக வேண்டிய அவசியம் இந்த தேனிக்கு இல்லை என்பதையும் அறிவீர்.
பிரித்தாளுதல் என்பது வேறு ஓர் இனம் அவர்தம் பண்பாட்டைக் காத்துக் கொள்வது என்பது வேறு. தமிழர் அவர்தம் பண்பாட்டைக் காத்துக் கொள்வது எப்படி பிரித்தாளுதல் ஆகும்?. இந்தியர்கள் என்று கூட்டுக் குடும்பமாக இந்நாட்டில் வாழ்ந்த நம்மை பிரித்தால இடம் கொடுத்தவர் யார்?. நாங்கள் இன்ன மொழி பேசும் இந்தியர்கள். எங்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை. ஆதலால் நாங்கள் தனித்து நின்று எங்கள் மொழியையும், பண்பாட்டையும் காப்பாற்ற எங்களுக்கு பண உதவி கொடு என்று நம்பிக்கை நாயகனிடம் கையேந்தி ஓடியது யார்?. 2008-ம் ஆண்டு இந்தியர்களின் ஒட்டு எதிரணிக்கு ஒட்டு மொத்தமாகப் போனதால் இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை இழந்த கட்சி அதே வேகத்தில் இந்தியர்களை பிரித்தால போட்ட திட்டத்திற்கு துணை போனவர் யார்?. இன்று தங்களைப் பிரித்துக் கொண்டு 5-ம் திகதி நம்பிக்கை நாயகனிடம் கை கோர்த்து நடப்பது யார்?. ஏன் அவர்களுக்கு அறிவுரை சொல்லாமல் இங்கே தமிழர்களுக்கு மட்டும் அறிவுரை சொல்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிண்றீர்கள்?. தமிழர் தங்களைத் தனித்து காட்டும் பொழுது வரும் ஆதங்கம் அவர்களிடமும் காட்ட வேண்டும். அவர்களுக்கும் இது புரிய வேண்டும். புரிய வைப்பீர்களா?. இல்லை இது ஒரு கை ஓசை என்பீர்களா?.
நிர்வாகத்தினர் நான் எழுதியதை edit செய்யாமல் முழுமையாக போட்டிருக்கலாம்,தன வினை தன்னை சுடும் என்பது போல் அவர் கொட்டிய வார்த்தை அவரையே சுட்டிருக்கும்.இருப்பினும் செம்பருத்தியின் rules க்கு நான் மதிப்பளிகின்றேன்.நன்றி. .
தமிழறிஞர்கள் பலர் 1921 (அ) 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அ) திருச்சியில் ஒருங்கே கூடி……தமிழ் ஆண்டு பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!
யார் யார்? = மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க,
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர்!
ஆனால், அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? என்பது இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?
* இப்போது சொல்லப்படும் பிரபவ-விபவ என்னும் அறுபதாண்டுகள், தமிழ் அல்ல!
* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! – அதையே தமிழ் ஆண்டு என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் கி.மு. 31= எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!
நல்லாக் கவனிங்க: வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா?ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!
* புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது
பேருலயே தெரியலையா? = பு”ஷ்”ப விதி! :))
இதெல்லாம் தரவாகாது!
இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடித் தான்!
பல பேருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது! = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு இவரு!
2007 இல் கலைஞரே…”பரவாயில்லை, தமிழனுக்கு இரண்டு புத்தாண்டுகள் இருக்கணும் ன்னா இருந்துட்டுப் போகட்டுமே – அதுவும் சிறப்பே” ன்னு சொன்னவரு தான்!:)
கழகத் தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சி வரும்படியை நிறுத்தி விடுவாங்களா என்ன?:)
1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் “கொண்டாட” வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:)
2. மக்களிடம் – விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! – இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.
தமிழ்….பாவம்! = இவங்க போதைக்கு, ஊறுகாயாகப் போய்விட்டது:
தேனீ க்கும், தமிழ் பற்றாளர்களுக்கும், இடையில் மூக்கை நுழைப்பதற்கு மன்னிக்க வேண்டும். தமிழர்களின் இறை நெறியையும், சமய வழிபாட்டினையும்,—- கற்பனை கதைகளும், கட்டு கதைகளும் நிறைந்த வைதீக வேத புராணங்களை, மாயை குணம் கொண்ட இந்து மத வழிபாட்டின் வழி நம் இனத்தின் மீது கட்டாயமாக திணித்து நம்மை கடைபிடிக்க வைத்து, நம் இறைநெறியை மூடி மறைத்து விட்டனர். நம் இனத்தவரை உளவியல் ரீதியாக மனதை மாற்றி நம்மை இந்த இழி நிலைக்கும் தள்ளி விட்டனர். இவர்கள் (இந்து மதக்காரர்கள்) இதற்கான தீர்வையும் காணமாட்டார்கள். மதம் வளர்ந்தால் போதும், கள்ளா பெட்டியில் பணம் நிறைந்தால் போதும். என்றிருப்பார்கள். தினம் தினம் இந்து மத வேதத்தின் ஓட்டை வழியாக புதுப்புது போலிச்சாமியார்கள் தோன்றி மக்களின் பணம், மனம், கற்பு மற்றும் பல கொள்ளையடிப்பதும் இவர்கள் கண்ணுக்கு தெரியாது. இதை தடுப்பதற்கான தீர்வையும் ஏற்படுத்த மாட்டார்கள். எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன என்று இருப்பார்கள். தமிழர்களாகிய நாம் இதற்கான தீர்வை தேடினாலோ, நம் தமிழ் மக்களுக்கு புகுத்தினாலோ. அந்த நேரத்தில் இவர்கள் நம்மால் இந்து மத வேதத்தின் புனிதம் கெட்டு விட்டது என்று ஒப்பாரி வைத்து ஊளையிடுவார்கள். இந்நாட்டு இந்தியர்கள் படு வேகமாக கிறிஸ்துவ மதத்திற்கும், மற்ற மதத்திற்கும் மாற்றப் படுவதையும், சொந்தமாக மாறுவதும் இவர்கள் கண்ணுக்கு தெரியாது. இதற்கான தீர்வும் தேட மாட்டார்கள். இவர்களின் நோக்கமே மதம் (யானைக்கும் பிடிக்கும் மதம்) மென்மேலும் பரவி, அதன் வழி பிரிவினையால் பிரிந்து போன மக்களின் மூலம் வியர்வை வடியாத உடலை வளர்க்க வேண்டும் என்பதே.
தமிழில் ஆறாவது அறிவுக்கு வேலை கொடுக்கும் அழகான வாக்கியம் ஒன்று உள்ளது. அதாவது கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்று. இவர்களுக்கு சொல்லி கொடுத்த வாத்தியார் தப்பாக சொல்லி கொடுத்துவிட்டார். அதாவது கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். கட்டு கதைகளும், கற்பனையும் ஆன புராணக் கதைகளை கட்டிக் கொண்டு அழுவதே மெய் என்று. அதனால் தான் இந்த வடுகர்கள் தானாகவே நம்மிடம் புகுந்து வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல், வன்முறையும், பிரிவினையும், மாயயையும் கலந்த வேதம் என்ற நஞ்சை புகுத்துகின்றனர். இதனாலேயே நம் மக்களிடம் —–முன்னேற வேண்டும் என்ற சுய சிந்தனையும், இன்னதை அடைய வேண்டும் என்ற லட்சியமும், ஒற்றுமை என்ற கொள்கையும் இல்லாமல் போனது.—– இதனை என்று தமிழ் மக்கள் உணர்கிறார்களோ அன்றே அவர்களுக்கு விடிவு நாள்.
இதையும் படியுங்கள்—1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.—
2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.—-
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?—–
4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது……………………………………………….
—————————————————————————————————————-இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.
வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.
ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட…எப்படி முன்னேற…?
—————————தொடர்ந்து படிக்க https://ta-in.facebook.com/Kadhambam/posts/795964120463028:0
தமிழா! ஏன் தொலைத்தாய்?
*********************************************
+++++அன்று +++++
ஆரியனும், பிராமணனும் சேர்ந்தே வெட்டிய குழியில்——
உன் இறை நெறியை தொலைத்து விட்டு, ——–
மூட பழக்கத்தை வளர்த்துக்கொண்டாய்.———
+++++நேற்று++++++
கலைக்கூத்தாடி வடுகன்கள் காட்டிய குழியில்———
உன் கலை, கலாசாரத்தை தொலைத்து விட்டு, ——–
வன்முறையும், பிரிவினவாதத்தையும் வளர்த்துக்கொண்டாய்.———
+++++இன்று+++++
மேலை நாட்டு நாகரிக முன்னேற்றம் என்ற மாயக் குழியில்———
உன் உணவு பழக்கத்தையும், தாய் மொழியையும் தொலைத்து விட்டு,———-
உன் உடலுக்கு நோயையும்,
உன் தலைமுறைக்கும் டமிங்கிலிசையும் வளர்த்துக் கொண்டாய்.———-
+++++நாளை+++++
இனி உன்னிடம் மிஞ்சி நிற்பது பண்பாடு மட்டுமே.———-
அதையும் யாரிடம் தொலைத்து விட்டு, ——–
அம்மனமாய், பரதேசியாய் திரிய போகிறாய்?———-
சொல் தமிழா! சொல், ———–
ஆறறிவு கொண்ட, சிந்திக்கும் மனம் கொண்ட
தமிழா சொல்?
*************************************************************
தமிழை கிண்டினால் மணக்கும்,———
தமிழை சீண்டினால் வெடிக்கும்——–
தமிழுடன் வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.———
ஆனால் சிலருக்கு————-
தமிழில் பேசினால் வாய் கசக்கும்.———-
டமிலில் பேசினால் வாய் இனிக்கும்———-
தமிழே எல்லா மொழிக்கும் தாய் மொழி——–
டமிலா! எதுதான் உன் தாய் மொழி?
திரு. தேனி அவர்களே, மக்களைப் பிரித்தாளும் கொள்கைக்கும் ஒரினம் தம் பண்பாட்டைக் காத்துக்கொள்ள அல்லது செம்மைபடுத்த எடுக்கும் முயற்சிகளுக்கும் உள்ள வேறுபாடு யார் காலில் காலணி இருக்கிறது என்பதைப் பொருத்து வெளிப்படுகிறது. ஒரு சிறுபான்மை இனம் தமது மொழி, பண்பாட்டிற்காக முயற்சிகள் எடுத்தால், அதனால் பெரும்பான்மை இனத்திற்குப் பாதிப்பு இல்லை. அதே முயற்சிகளைப் பெரும்பான்மை இனம் எடுக்கும்போதும், பரப்புரைகளை நடத்தும்போதும், சட்டமாக்கவோ நடைமுறையாக்கவோ முயலும்போதும், அவை சிறுபான்மை இனத்தையும் பாதிக்கின்றன. (தற்போது தீவிரமாக விவாதிக்கப்படாமல் விவாதிக்கப்பட்டு வரும் ஹுடுட் சட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.) இத்தெளிவு நமக்கு எப்போது இருத்தல் நலம். சரி, நேரடியாகவே கேள்விகளைக் கேட்டுப் பதில்களையும் தந்துவிடுகிறேன். ஓரினம் தமது மொழியையும் பண்பாட்டையும் காத்துக்கொள்ளும் முயற்சிகளை நாம் எதிர்க்கிறோமா? பதில்: இல்லை. நாம் மலேசியக் குடிகளாக இருந்தாலும், தமிழ் நமது தாய்மொழி; அதனைப் பேசவும் அம்மொழியில் கற்கவும் நமக்கு அடிப்படை உரிமைகள் உள்ளன என நாம் வாதிடுகிறோம்…………….அதோடு, ஒருவன் தமிழனாக இருந்துவிட்டால்மட்டும் அவனால் சக தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற எந்த உறுதியும் இல்லை. இதற்கு நம்மிடையே கடந்த நூறாண்டுகளாக வாழ்ந்துவரும் யாழ்ப்பானத் தமிழர்களே சான்று. ஈழப்பிரச்சனை வெடிப்பதற்கு முன்னர் அவர்கள் நம்மை எவ்வளவு கேவலமாகப் பார்த்தனர், நடத்தினர்? இன்றும் அவர்கள் பெயரளவில்தான் தமிழர்களாக இருக்கிறார்களே அன்றி, தமிழர்களாக வாழ்கின்றனரா? அவர்களில் எத்தனை விழுக்காட்டினர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்? அவன் தமிழன்தான். ஆனால், தமிழனா? இக்கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. கேள்வியும் தேவையற்றது என்பது என் வாதம்…
அம்மாவசை என்பது சமஸ்கிருதம் – தமிழில் மறைமதி
பௌர்ணமி என்பது சமஸ்கிருதம் – தமிழில் நிறைமதி . .
கும்பாபிசெஹம் – தமிழில் குடமுழுக்கு
இனிமேல் தமிழ் சொற்களை பயன்படுத்துவோமே.