![]()
நீண்ட இடைவேளைக்கு பிறகு தன்னுடைய குருவின் கடல் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகர் அரவிந்த்சாமி. அதன் பிறகு பல பட வாய்ப்புகள் தேடி வந்தாலும் எதையுமே ஏற்காமல் இருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஜெயம் ராஜா சொன்ன “தனி ஒருவன்” கதை அவருக்கு பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
இவர் இப்படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் அரவிந்த்சாமிக்காக பாலிவுட்டிலிருந்து முக்தா கோட்சே என்ற நடிகையை இறக்குமதி செய்துள்ளனர்.
முக்தா கோட்சே 2008ல் வெளிவந்த பேஷன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி , நயன்தாரா முதன்முறையாய ஜோடி சேர்ந்துள்ளனர்.
-http://www.cineulagam.com

























