புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மக்கள் கலைவிழா புதுவை காந்தி திடலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட டைரக்டர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார்.
இதில் அவர் பேசியதாவது:–
கலை அற்புதமானது. கலைகளை ஆரம்பித்ததே கம்யூனிஸ்டுகள்தான். மனிதன் வசதி வாய்ப்புகள் வரும் போது தனது சுயத்தை இழக்கிறான். சம்பாதிப்பவனுக்கு மூளை மழுங்குகிறது.
வறுமையில் இருக்கிறவனுக்குதான் வேகம் இருக்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படும் போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏன் உள்ளூர் தமிழர்கள் கூட அதனை தட்டிக்கேட்கவில்லை.
ஆகையால் தமிழர்களுக்கு எதிர்ப்பு உணர்ச்சி வேண்டும். கம்யூனிஸ்டுகள் சுத்த தங்கம் போல் இருக்கக்கூடாது. சுத்த தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ராஜா எம்.பி., ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-http://123tamilcinema.com
எதிப்பு உணர்ச்சிக்கு ஒன்றுபட்ட மனம் வேண்டும்