அம்மாவிற்கு கோவில் கட்டும் பிரபல கதாநாயகன்

அம்மாவிற்கு கோவில் கட்டும் பிரபல கதாநாயகன் - Cineulagam

சினிமாவில் மட்டுமே அம்மாவிற்கு கோவில் கட்டுவேன் அப்பாவிற்கு கோவில் கட்டுவேன் என வசனம் பேசுவார்கள். ஆனால் நிஜ வாழ்வில் இதுவரை யாரும் அவ்வாறு செய்ததில்லை.

இந்த பேச்சிற்கு அணை போடும் விதமாக ராகவா லாரன்ஸ் அவரது அம்மாவிற்கு கோவில் கட்ட தனது அப்பாவின் சொந்த ஊரான பூவிருந்தவல்லியை தேர்ந்தெடுத்துள்ளார்.

மேலும் இன்று அன்னையர் தினம் என்பதால் அதன் பணியை இன்றே ஆரம்பித்துவிட்டார் இந்த பாச மகன். ராகவா லாரன்ஸின் தாய் பாசத்தை கண்டு அனைவரும் மெய் சிலிர்த்து போய் உள்ளனர்.

-http://www.cineulagam.com