சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயரிப்பாளர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப்போராட்டம் சென்னையில் நடைபெற்றது.
போராட்டத்திற்குப் பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு க்யுப் ,யூ.எப்.ஓ உள்ளிட்ட நிறுவனங்களுடன் கட்டண உயர்வைக் குறைப்பது தொடர்பாக இன்னும் இரண்டொரு நாட்களில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம்.
இந்த நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணங்களை உயர்த்துவதால் படத்தை வெளியிட முடியவில்லை இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப் பட வேண்டும்
தமிழ்த் திரையுலகின் போதாத காலம் கடந்த சில வருடங்களாகவே தமிழ்ப் படவுலகம் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது பெரிய படங்கள் கூட பிரச்சினைக்கு உள்ளாவது வாடிக்கையாக உள்ளது .
கட்டண உயர்வு இது போதாதென்று டிஜிட்டல் நிறுவனங்கள் வேறு அவ்வப்போது கட்டணங்களை உயர்த்தி பிரச்சினை தருவது மட்டும் இல்லாமல் சமயங்களில் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் செய்து வருகின்றன இதற்கு சமீபத்திய எடுத்துக் காட்டு உத்தம வில்லன் திரைப்படம்.
தொடரும் உண்ணா விரதங்கள் இந்த கட்டண உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்த் திரை உலகினர் ஆங்கங்கே தொடர்ந்து உண்ணாவிரதத்தில்ஈடுபட்டு வருகின்றனர் .
கலைப்புலி எஸ் .தாணு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு தலைமையில் நடந்த உண்ணாவிரதத்தில் டிஜிட்டல் நிறுவனங்களின் விளம்பரங்கள் திரையில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும், இப்பிரச்சினைக்கு சுமூக முறையில் தீர்வு காணப் பட வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப் பட்டன.
தலையிடுமா தமிழக அரசு இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் அதாவது டிஜிட்டல் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் .
ஜூன்12 தேதி முதல் படம் திரையிடப் படாது இம்மாதம் 29ம் தேதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப் படாவிடில் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் எந்த படத்தையும் திரையிட விட மாட்டோம்என்று அவர் கூறியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் திரைக்கு இது போதாத காலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.