உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் உத்தம வில்லன் திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பை புகழாதவர்கள் யாரும் இல்லை.
இவரின் அடுத்த படமான பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை முடித்த கையோடு ‘ஓர் இரவு’ என்ற படத்தில் கமல் நடிப்பதாக உள்ளார்.
ஆனால், தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் தலைப்பு ‘தூங்கா வனம்’ என்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-http://www.cineulagam.com
உத்தம வில்லன் செம்ம தூக்கம் ,பணமும் விரையம்
உத்தம வில்லன் தற்காலத்திர்கேற்ற படமல்ல. தமிழ்ப் பட ரசிகர்கள் இப்படைத்தை இன்னும் 10 ஆண்டுகளில்தான் ரசிக்க முடியும். அந்த முதிர்ச்சி இன்னும் நமது ரசிகர்களுக்கு வரவில்லை. உத்தம வில்லனை பார்க்க 3 தகுதிகள் வேண்டும் .அ. இரணிய இதிகாசம் தெரிந்திருக்க வேண்டும். ஆ. கமலஹாசன் , பாலசந்தர் மீது வைத்திருக்கும் குரு பக்தியை தெரிந்திருக்க வேண்டும் இ.அவர் நடிப்பின் மீது வைத்திருக்கும் அதிதீத பற்றினை புரிந்துவைத்திருக்க வேண்டும். இவை இருந்தால் மட்டுமே இப்படம் வசப்படும்.
கோவிந்தசாமி அவர்களே இந்த படத்தை ஒரு புத்தக கதையாக எழுதினால் தாராளமாக படிக்கலாம் ,2 அரை மணி நேரம் ஓடக்கூடிய படம் எப்படி இருக்க வேண்டும் ,அதுவும் பணம் கொடுத்து GST கட்டி இந்த படத்தை பார்க்க முடியுமா / பணம் கொடுத்து 2 அரை மணி நேரம் பார்க்க கூடிய படம் இப்படியா எடுக்க வேண்டும் ,அதிரடியாக இருந்தால் தானே கொடுத்த பணத்துக்கு சுவாரசியமாக இருக்கும் .அதே கமல் தசாவதாரம் எடுத்தாரே எப்படி இருந்தது ,அதுரடியாக தானே இருந்தது ,இவனுங்க இச்ட்டதுக்கு படம் பண்ணுவானுங்க நாங்க பணத்தை செலவு பண்ணி இப்படி பட்ட படத்தை பார்க்க வேண்டுமா ? இப்படியே கமல் படம் எடுத்தால் நீங்கள் ரசிப்பேங்க ,ஆனால் கமல் பாக்கெட்டில் பணம் நிரம்பாது இறுதியில் கமல் ஓட்டாண்டியாக போக வேண்டியதுதான் .கமலே இப்பதான் சில கடன்களை கட்டி தலை தூக்கி இருக்கிறார் .புராண படத்தையும் ,இலக்கிய படத்தையும் எடுக்க சொல்லி அவரை பாண்டியாக ஆக்கிவிடாதீர்கள் ,தமிழனை வாழ வையுங்கள் .
ஒரு மனிதனை புரிந்து கொள்ள வயது போதாது … அதிலும் இந்த உத்தம வில்லனை புரிந்து கொள்ள ஒரு ஜென்மம் போதாது… எத்துனை நேர்த்தியான கதை…… எத்துனை அற்புதமான நடிப்பு.. கமலை அவரின் இல்லற வாழ்கையை மட்டும் வைத்து எடை போடுவது மாபெரும் தவறு… இதை உணர முடியாதவர்கள் அவர் மரணத்திற்குப் பின் நிச்சயம் உணருவர்.. கமல் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் கலைஞன்… ஈடு இணை அற்ற சகல வித்தைகளையும் கையகப் படுத்திய மிகப் பெரிய தமிழ்க் காவியத் தலைவன்…