வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள எலி படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடிவேலு பேசும்போது,
இந்த படம் கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையாக படத்தை எடுத்திருக்கிறோம். இதில் சதா எனக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
எனது முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டது. காரணம் ஒரு நல்ல தரமான படத்தை கொடுப்பதற்காகத்தான் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. இனிமேல் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றார்.
மேலும் மீண்டும் அரசியல் பிரவேசம் உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, அதுபற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாது. இப்போதைக்கு சினிமா கடையைத் திறந்து விட்டிருக்கிறேன். இது நல்லாத்தான் போகுது. தேவைபட்டால் அரசியலுக்கு வருவேன். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார். சகாப்தம் படம் குறித்து அவர் கூறுகையில், என் படத்தை பார்ப்பதற்கே நேரம் இல்லை. பிறகு எப்படி இதையெல்லாம் பார்க்கமுடியும் என்றார்.
-http://www.dinamani.com
நீங்க அரசியலுக்கு வந்தா, உங்கள வச்சி காமடி பண்ணிபுடுவாங்க,கவனம்.