1943, ஜுன் 2ம் தேதி, தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்தது இசை.. ஆம் இசை என்றாலும் இளையராஜா என்றாலும் ஒன்றுதானே.
1976ல் வெளிவந்த ”அன்னக்கிளி” படத்தின் மூலம் ஞானதேசிகனாக இருந்தவர் இளையராஜாவாக புது அவதாரம் எடுத்தார். அன்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை பின்நாளில் இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவனாக உருவெடுப்பார் என்று! கிராமத்து கீதங்களுக்கு புத்துயிர் கிடைக்கபெற்றது இவரின் இசையில் தான்.
இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை, கேட்க இசைஞானியின் இசை இதுவே பல தமிழர்களின் வாழ்வின் அத்தியாவசிய தேவைகள்!
பூமிக்கு மட்டும் புவியீர்ப்பு விசை உள்ளதென்று யார் சொன்னது இவரின் இசைக்கும் உள்ளதென்று நியூட்டனும் புது கோட்பாட்டை எழுதியிருப்பார் அவர் நம் இசைஞானியின் இசையை ருசித்திருந்தால்.
ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எற்றார்போல் இசையமைத்தால் அவர் இசையமைப்பாளர். ஆனால் தன் இசையாலே ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியுமென்றால் அவர் தான் இசைஞானி!
தூர பயணங்களில் நம்மை தாலாட்டும் தாயாய், வேலை பளுவில் துணை நிற்கும் தோளாய், காதல் நேர மயக்கமாய், கொண்டாட்ட நேரங்களில் குதூகளமாய் இருப்பது இந்த ராகதேவனின் மெட்டுக்களே!
இது வரைக்கும் கிட்டதட்ட 5000 பாடல்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜா உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்திடாத இல்லை இல்லை செய்யமுடியாத சாதனையாக 1000த்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
பாலசுப்பிரமணியம், யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜானகி, சித்ரா இன்னும் பல குரல் சக்ரவர்த்திகள், வைரங்களாய் மிளிர்ந்தது இவரின் இசையாலே என்று சொன்னால் அது மிகையாகது!
வசனங்கள் அற்ற காட்சிகளுக்கு உயிர் கொடுக்க உன்னை போன்ற ஒரு இசை பிரம்மா இன்றளவில் எங்கும் இல்லை.
இதுவரை உலகம் முழுவதுமிருந்து வந்த சிறந்த 10 பாடல்களில் இளையராஜா இசையமைத்த தளபதி படத்தில் இடம் பெற்ற பாடலான “ராக்கம்மா கையதட்டு” இடம்பெற்றதே இவரின் இசைக்கு எல்லை என்பதில்லை என்பதற்கு சான்று!
இசைஞானி லண்டனில் உல்ல Trinity College of Music ல் தங்கப்பதக்கம் வென்றவர், இவரின் சிறப்பான இசைக்கு 4 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் புகழின் பின்னால் சென்றதில்லை அதனால் தான் புகழ் இவரை எப்போதும் பற்றிக்கொண்டது!
மிடாஸ் டச்சை நாங்கள் உணர்ந்ததில்லை ஆனால் இந்த மேஸ்ட்ரோவின் டச்சில் எப்போதுமே லயித்திருப்போம்! காலங்களை உறையவைக்கும் உன் உன்னத இசையால் என்றுமே எங்களை ஆட்சி செய்திடு! எத்தனை உறவுகள் இருந்தாலும் தாயைப்போல் ஆகுமா?
எத்தனை எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்கள் ராஜாவாக முடியுமா? ஒரு படத்தில் சொன்னதுபோல் ரேடியோவை கண்டுபிடித்தது மார்க்கோனி ! அதை கேட்க வைத்தது நம் இசைஞானி! ஏனென்றால் என்றுமே எங்கள் இளையராஜா தான் இசையின் ”ராஜா”!
வாழும் சகாப்தமான இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளான இன்று இவரை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது சினிஉலகம்! இன்னும் இன்னும் உங்கள் இசையால் எங்கள் செவிகளுக்கு உயிர்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று தாழ்மையோடு கேட்கிறோம் இசைபிரம்மாவே!
-http://www.cineulagam.com
நீண்ட நாள் வாழ வாழ்த்துகள்.
கோடி கொடியாக சம்பாரித்த நீங்கள் தமிழ் மக்களுக்கும் ஈழ தமிழர்களுக்கும் ஒரு பைசா கூட கொடுத்து உதவ வில்லையே ,,,
நல்ல பாடல்களை போட்டால் மட்டும் போதாது. மக்களுக்கு நன்மை செய்ய மனம் வேண்டும்
இளைய ராஜாவுக்கு சமற்கிருதம் தமிழை விட அதிகம் பிடிக்கும்–
சமஸ்க்ருதம் என்ன கேட்ட மொழியா? என்பா எது எதுக்கோ முடிச்சி போடுரீங்க. அந்த மனுஷன் மலையாளத்திலும் பாட்டு போட்டிருக்காரு தெலுங்கிலும் பாட்டு போட்டிருக்காரு அதுக்குனு அந்த மொழி அதிகம் பிடிக்கும்னு சொல்ல முடியுமா? தமிழையும் சமஸ்கிருதத்தையும் பிரிக்க முடியுமா என்ன? தமிழில் எத்தனை சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கிறது? பல இந்திய மொழிகளை ஆராய்ச்சி பண்ணினால் இது தெரிய வரும்.
மேஸ்ட்ரோ இளையராஜா பற்றி அவதூறுகள் அறியாமையின் வெளிப்பாடு . சென்ற வருடம் மலேசியாவில் நடைபெற்ற கிங் ஆப் கிங் நிகழ்ச்சியின் வருமானத்தில் ஒரு தொகை மலேசியா கல்வி துறைக்கு வழங்கப்பட்டது . அடுத்து அவரின் இசைக்கான காப்புரிமையில் கூட பல தமிழர்கள் பிழைத்தனர் . பெரும் முதலாளிகளாக உருவானார்கள் .அவர் சார்ந்த இசைக்கலை வழியாக பார்த்தாலும் தமிழக நாட்டுபுற பாடல்களை விட கர்நாடகா சங்கிதம் ஒன்றும் புனிதம் இல்லை ,சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதை “பாடறியேன்… படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிருபித்தார் . இது தமிழர் இசை வடிவத்திற்கு இளையராஜா செய்த மரியாதை .
shiva அமாம் ,உண்மைதான் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாலர்தான் அந்த நன்கொடையை கொடுத்தார்……………….இளைய ராஜா சொந்த பணத்தை தமிழர்களுக்கு கொட்புத்ரா ?
இளையராஜா இல்லை என்றல் அந்த நிகழ்ச்சி ஏது ? அந்த நிகழ்ச்சியின் வழி வசூல் செய்த பணம் அது ? அடுத்து பல நிகழ்சிகளுக்கு திரைப்படங்களுக்கு பணத்தை முன் வைத்து செயல்படுபவர் இல்லை என்பதே எதார்த்தம் .அவர் துறை சார்ந்து புதியதாக வருபவர்களுக்கு உதவி செய்பவராகவே இருக்கார் . அன்று முதல் இன்று வரை உதரணமாக நடிகர் நாசர் முதல் இயக்கத்தில் வெளிவந்த அவதாரம் பட அனுபவங்களை தோணி இசை அறிமுக விழாவில் நசரே பகிர்ந்துகொண்டார் யூ டீப் யில் தேடினால் கிடைக்கும் .
துவாரகன் – நான் எதற்கும் முடுச்சி போட வில்லை –ஒரு கருத்து கூறினேன்– என்னுடைய ஆதங்கத்தை போர்க்களத்தில் ஓர் பூ என்ற தலைப்பை பற்றி எழுதியிருக்கிறேன் அதை தயவு செய்து முடிந்தால் படித்து என் மன நிலை புரிந்து கொள்ளுங்கள்- தமிழுக்கு முக்கியத்துவம் அதுவே என் நிலைபாடு- தமிழர்களுக்கே என் ஆதரவு. ஒரு கால கட்டத்தில் இளைய ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் ஏன் பிளவு ஏற்பட்டது? எனக்கு எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை– நாம் எத்தனை மொழி வேண்டுமானாலும் படித்து தேர்ச்சி பெறலாம் ஆனால் தமிழுக்கும் முதன்மை- இதுவே என நிலைப்பாடு. ஆனால் இன்றைய நிலை என்ன? சீனர்களை பார்த்திருக்கிறீர்களா? இன்று உலகமே அவர்களின் மாண்டரின் மொழி கற்றுகொள்கிறது ஏன்?
தமிழில் அனாவசியமாக மற்ற மொழிகளை இணைக்காதீர்கள்– ஆங்கிலப்பாடல்களில் தமிழ் வார்த்தைகள் இருக்கின்றனவா? ஏன் இது நம்மவர்களுக்கு புரியவில்லை? உதாரணத்திற்கு பராசக்தியின் பாடல்களை கேளுங்கள். ஆங்கில பாடல்கள் பிடித்திருந்தால் aangila பாடல்களை கேளுங்கள். ஏன் தமிழ் பாடல்களை கொலை செய்கின்றனர்?