ரஜினிக்கு 70 கோடி சம்பளமா? அதிர வைக்கும் சிங்காரவேலன்

பழைய குருடி கதவைத் திறடி கதையாகி விட்டது லிங்கா விவகாரம். 12.5 கோடியோடு ஒதுங்கிவிடுவதாக கூறிய பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் கோஷ்டி, சிங்காரவேலன் தலைமையில் மீண்டும் கிளம்பிவிட்டது.

இன்னும் 15 கோடி கொடுக்கலேன்னா பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்’ என்று கிளம்பிவிட்டார்கள்.

அதிலும் சிங்காரவேலன் சொல்லும் ஒரு கணக்கு, தலையே சுற்றுகிறது. தாணு தயாரிக்கும் படத்தில் நடிக்க ரஜினிக்கு 70 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

35 கோடி வொயிட், 35 கோடி பிளாக் என்கிறார் அவர். ‘ரஜினி நடிச்ச படத்தை வாங்கி நஷ்டப்பட்டுருக்கோம். அவர்ட்ட பணமா இல்ல? தர வேண்டியதுதானே?’ என்கிறார் ஆத்திரமும் ஆவேசமுமாக!

அவர் சொல்கிற இந்த சம்பளக் கணக்கு பொய்யோ, நிஜமோ? ரஜினிக்கு எழுபது கோடி சம்பளம் என்றால், அதற்கப்புறம் தயாரிப்பு செலவு, மற்ற மற்ற நடிகர் நடிகைகள் செலவு என எல்லாவற்றையும் கூட்டிக்கழித்தால் மீண்டும் ரஜினியை பிரச்சனைதான் விரட்டும் போலிருக்கிறது. ஒரு நம்பர் லாட்டரி, சுரண்டல் லாட்டரி, மாதிரி சினிமாவும் ஆகிக் கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் இல்லையென்றால் கவலைதான் மிச்சம்.

-http://www.4tamilmedia.com