
உச்சாணிக்கிளையில் உட்கார்ந்திருந்த எல்லாருக்குமே இப்போது உதறல் எடுத்துவிட்டது.
சினிமாவில் வெற்றிபெற ஆடம்பரமோ, அள்ளி வீசும் பணமோ முக்கியமல்ல, கதைதான் என்பதை சற்று காலம் கடந்து உணர்ந்திருக்கிறார்கள்.
அதன் விளைவுதான் ஒரு படம் இயக்கிய, இரண்டு படம் இயக்கிய இயக்குனர்களை தேடி பெரிய ஸ்டார்கள் கீழே இறங்கிவருவது. இந்த நல்ல விஷயத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிதான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ் என்ற இரண்டே படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு அவர் கால்ஷீட் கொடுத்திருப்பது இன்டஸ்ட்ரியை அதிர வைத்தது.
அவர் செய்த அதே நல்ல காரியத்தை சமீபத்தில் ஷங்கர் என்ற பிரமாண்ட இயக்குனர் படத்தில் நடித்த விக்ரம் செய்திருக்கிறார். ராஜதந்திரம் என்றொரு படம் சமீபத்தில் வந்தது. பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் அதன் கதையும், சொல்லப்பட்ட விதமும் விக்ரமை கவர உடனே அப்படத்தின் இயக்குனர் ஏ.ஜி.அமீத்தை அழைத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார். மாற்றங்கள் தொடரட்டும்.
-http://www.4tamilmedia.com


























மாற்றங்கள் தொடரட்டும் என்று நாமும் சொல்லிவைப்போம்!
தமிழ் திரைப்படங்கலின் கதைகள் அன்றுபோல் இன்று மனதில் நிற்பதில்லையே. இன்று பெரும்பாலான இயக்குனர்கள் கவர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பல படங்கள் குடும்பத்தினருடன் காணமுடியவில்லை. கண்டிப்பாக மாற்றம் தேவை.