இந்த ஆண்டு ஜுன் மாத முடிவதற்குள் கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் தமிழில் ரிலிஸாகியுள்ளது. இதில் வழக்கம் போல் குறைவான படங்களே ஹிட் வரிசையில் உள்ளது.
இந்த வருடத்தில் காக்கா முட்டை காஞ்சனா-2 ஆகிய படங்கள் மட்டுமே மெகா ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளது. சூப்பர் ஹிட் வரிசையில் ஐ படம் மட்டும் வந்துள்ளது.
மேலும் அனேகன், காக்கி சட்டை, ஓ காதல் கண்மணி, கொம்பன், 36 வயதினிலே, டிமாண்டி காலனி, ரோமியோ ஜுலியட் ஆகியவை ஹிட் எனவும், என்னை அறிந்தால், இந்தியா பாகிஸ்தான், வை ராஜா வை, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லாத படங்கள் என கூறப்படுகின்றது.
இந்த வருடம் அதிக வசூல் செய்த படங்கள் Nett அடிப்படையில்
- 1. I (Tamil + Telugu + Hindi): 190 cr
- 2. Kanchana-2 (Tamil + Telugu): 98 cr
- 3. Yennai Arindhaal (Tamil + Telugu): 78 cr
- 4. Massu (Tamil + Telugu): 63 cr
- 5. Anegan (Tamil + Telugu): 49 cr
- 6. Kaaki Sattai (Tamil only): 47 cr
- 7. Uttama Villain (Tamil + Telugu): 38 cr
- 8. O Kadhal Kanmani (Tamil + Telugu): 33 cr
- 9. Komban (Tamil only): 31 cr
- 10. Romeo Juliet (Tamil Only): 22 cr
இவை அனைத்தையும் தமிழ் சினிமாவின் முன்னணி சினிமா விமர்சகர் ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வருடத்தில் ஐ, காஞ்சனா-2, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-http://www.cineulagam.com