மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ல் பிறந்தவர். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் – நாராயணி குட்டி.
நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய எம்எஸ்வி, மிக இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நடிக்கவும், பாட்டுப் பாடவுமே அவரது விருப்பமாக இருந்தது. 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்திய எம்எஸ்வி, 1950களில் எஸ்எம் சுப்பையா நாயுடு மற்றும் சிஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.
1952-ல் சி ஆர் சுப்பாராமன் காலமாகிவிட, அந்த நேரத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த மருமகள், சண்டி ராணி, தேவதால் மற்றும் ஜெனோவா போன்ற படங்களை முடித்துக் கொடுத்தவர் எம்எஸ்விதான். பின்னர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தயாரித்த பணம் படத்துக்கு இசையமைப்பாளர்களாக எம்எஸ்வியும் டிகே ராமமூர்த்தியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். எம்எஸ்வி – டிகே ராமமூர்த்தி இரட்டை இசையமைப்பாளர்கள் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான படம் பணம்-தான்.
அதன் பின்னர் இந்த இரட்டையர்கள் காலம்தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தது. 1952-லிருந்து 1965 வரை இந்த இருவரும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைப் படைத்தனர். இருவரும் இணைந்து 100-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.
டிகே ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகு, தனியாக 700-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தார் எம்எஸ் விஸ்வநாதன். கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள். தமிழ் தவிர, மலையாளத்தில் 74 படங்களுக்கும், தெலுங்கில் 31 படங்களுக்கும் இசையமைத்துள்ளார் எம்எஸ்வி.
கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.
இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர். காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம்எஸ் விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார்.
எம்எஸ்வி – ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள். அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.
ஓர் இசைமேதையை நாம் இழந்தோம். காலத்தால் மறக்க முடியாத பாடல்களைத் தமிழ் உலகுக்குத் தந்தவர் அவர். அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இசை கடவுள் லுக்கு ,என் வணக்கங்கள் .
இசை வானின் சூரியன் மறந்ததே
அவளுக்கென் அழகிய முகம் என்ற பாடல் கட்சியில் நீங்கள் தோன்றிய பொது அன்று நான் உங்களை கண்டு யார் விஸ்வநாதன் என்று ,தமிழ் இசைத்துறையிலும் சரி சினிமா துறையிலும் சரி நீங்கள் சுப்பர் சடார் .என் தாயின் மொழி தமிழுக்கு உரிரை கொடுத்து பல ஜாம்புவாங்களை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் நீங்கள் ,உங்களை நினைத்து நான் பெருமை படுகிறேன் ,உங்கள் உருவம் மறைந்தாலும் எங்கள் இதயத்தில் நீங்கள் இருந்து கொண்டுதான் இருப்பீர்கள் ,உங்கள் ஆத்மா சாந்தி அடைய எங்கள் குடும்பத்தோடு பிரார்த்திக்கிறேன் .https://www.youtube.com/watch?v=KiYCD6Nldqg
மனம் கவர்ந்த பழம் பாடல்களை இசை அமைத்து தந்த ஒரு விடி வெள்ளி மறைந்து விட்டது அன்னார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடல்களுக்கு இசையமைத்து வழங்கிய காவியப் பெருமகனார் இசைமேதைக்கு எனது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
ஆழ்ந்த அனுதபாங்கள் உங்கள் இசை என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்
காலத்தால் அழியாத பல காவிய பாடல்களுக்கு இசை அமைத்தவர். அவர் மறைந்தாலும் அன்னாரின் புகழ் காலம் உள்ளவரை வாழும்…!
தன இனிய இசையுடன் கண்ணதாசனின் பாடல்களையும் கலந்து உலகமெல்லாம் உள்ள தமிழர்களின் மனதில் பதித்து ,நம்மிடேயே நீங்க இடம் பெற்ற இசை மன்னரின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுவோம் .
இன்றைய இளைய தலைமுறை, எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்களை கேட்கவேண்டும்.
அழியா வரம் பெற்ற பல பாடல்களுக்கு இசை அமைத்த அன்னாரின் வாழ்க்கை சரித்திரம் நம்மோடு நீண்ட நாளைக்கு இடம் பெற்றிருக்கும். அன்னாரின் உயிர் சாந்தி பெற இறைவனிடம் பிராத்திக்கின்றோம்.