வருமான விஷயத்தில் போதும் என்று சொல்லும் மனசு அத்தனை சுலபத்தில் யாருக்கும் வந்துவிடுவதில்லை. ஆனால் கானா பாலா சம்பாதிச்ச வரைக்கும் போதும் என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்.
‘பதினோரு பேரு ஆட்டம்…’ என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கானா பாலா. ‘அட்டகத்தி’ படத்தில் இவர் பாடிய ‘ஆடி போனா ஆவணி…’, ‘நடுகடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா…’ பாடல்கள் இவரை முன்னணி பாடகராக்கின. சில படங்களில் அவரே தோன்றி நடிக்கவும் நடனமாடவும் செய்கிறார்.
கானா பாலா இதுவரை 75 படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். நிறைய பேருக்கு சத்தமில்லாமல் உதவியும் வருகிறார் பாலா.
இப்போது கானா பாடல்கள் எழுதுவதை, பாடுவதை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். ஏன் இந்த முடிவு? கானா பாலா சொல்கிறார்:
“நிறைய பாடல்கள் பாடிவிட்டேன். நான் நன்றாக சம்பாதித்தும்விட்டேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின், முன்னேற்றத்திற்காக பாடல்கள் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து வருகிறேன். எனக்காகவே வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன்,” என்றார்.
நல்ல மனம் உள்ள நீங்கள் வாழ்க வளர்க . உங்களை போல் மற்ற பாடகர்கள் கொஞ்சம் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
நல்ல
மனது
உங்களுக்கு
இங்கு
இருக்கும்
மாங்க மடையன்
அரசியல்
வாதிகள்
நல்ல
சாமிக்கு
பாம்புக்கு
உறுதுனையக
வேடதாரிகள்
வேசம்
போடுறானுங்க
. துப்பு
கேட்ட
பயல்கள்
. தமிழ் சமுதாயம்
இவனை
நம்பி
போட்ட
பணம்
நடுதெருவில்
வந்து
விட்டா
து
ரொம்ப உங்க சொந்த உழைப்பில் சம்பாரித்தால் உங்களுக்கு கேட்ட பெயர் வந்துவிடும் ,கொஞ்சம் சம்பாரித்தால் தான் நல்ல பெயர் கிடைக்கும் ,,பாவம் லெட்சுமி மிட்டல் ,பாவம் BILL GATE !? ரொம்ப சம்பாரித்து விட்டார்கள் ,இன்று அவர்களுக்கு கேட்ட பெயர் !??