இளையராஜா இசையில் தேசிய கீதம் ஆல்பம்…

illayaraja-11-600இளையராஜா இசையில் அமிதாப் பாடவிருக்கும் தேசிய கீதம் ஆல்பத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இசையமைப்பாளர் இளையராஜா உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வு எடுத்தார். மேலும் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். என்றாலும், நேற்று மாலை வீடு திரும்பினார்.

வீட்டுக்கு வந்த சில மணி நேரத்திலேயே பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அவரது ஒலிப்பதிவு கூடத்துக்கு சென்றார். அங்கு ‘குற்றமே தண்டனை’ என்ற படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கினார். பாடலே இல்லாமல் உருவாகும் இந்த படத்தில் பின்னணி இசையே பிரதானம். எனவே அவர் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தனர்.

இது தவிர ‘ஒரு மெல்லிய கோடு’, ‘கட்டம் போட்ட சட்டை’ போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அகில இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘தேசிய கீதம்’ ஆல்பத்துக்கு இசையமைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளையும் இளையராஜா தொடங்கி இருக்கிறார். அமிதாப்பச்சன் நடித்து குரல் கொடுக்கும் இந்த ஆல்பத்தை பால்கி இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டின் போதே இதனை இளையராஜாவும் பால்கியும் அறிவித்தது நினைவிருக்கலாம்.

filmibeat.com