பேசுவதெல்லாம் தமிழ் . பெயர் இந்தியன் எப் எம் மின்னல் ? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பிதற்றுகிறோம். இந்த கட்டுரையை எழுதும் போது தமிழ் அறவாரியத்தின் தலைவர் பேட்டி மின்னலில் ஒலி ஏறிக்கொண்டு இருக்கிறது . மக்கள நடுவே…. தமிழா தமிழா தமிழா நீ சாதிக்க பிறந்தவன் தானடா என்ற பாடலுடன் தொடங்கியது !
எத்தனை தமிழ் ஆராட்சி மாநாடுகள், தமிழர் விழாக்கள , பொங்கு தமிழ் ஆரவாரங்கள் , தமிழர் பாதுகாப்பு மாநாடுகள், தமிழ் மண்ணாங்கட்டி மாண்புமிகுகள்.இத்தனையையும் ஒரு மின்னல் எப் எம் குமரன் குத்ரிவிட்டார் என்ற தகவல் நமது கண்களை பிதுங்க வைத்துள்ளது. யார் இந்த குமரன்? இவர் தமிழன் இல்லையா?
இன்று 15/9/2015 நம்மை தமிழன் என்றால் யார் என்று ஆய்வுப்பூர்வமாக உணர்த்திய தமிழினத் தலைவன் பெங்களூர் ஐயா பெரியவர் குணா அவர்களுக்கு பிறந்த நாள். அவருக்கு ஒரு தமிழனாக பிறந்த நாள் வாழ்த்துக்கூற வெந்து நிற்கிறேன். அந்த அளவுக்கு மலேசியாவில் தமிழ் துரோகிகள் கூட்டம்.
இலங்கை ரா கூட்டம் இங்கேயும் தமிழுக்கும் தமிழனுக்கும் உளவு பார்க்க வந்து விட்டது போல உணர்கிறேன். கடந்த சில காலமாக ஹாங்காங்கில் அடுத்த தமிழர் பாதுக்கப்பு மாநாடு சம்மதமாக நடந்த பேச்சில் சில தகவல்கள் கிடைத்து தமிழர்களுக்கு கடைசியில் சீனாதான் உதவும் என்ற வியப்பை பெற்றோம்.
தமிழ் மின்னல் எப் எம் இன்று இந்தியன் மின்னல் எப் எம் என்று மாற்றிய மின்னல் குழப்பி குமரனை யாரும் ஏதும் கேற்க முடியாத வக்கற்ற சமுதாய தவளைகளை வைத்து குமுறும் நிலையில் குரைக்க எந்த நாயும் காணோம்.
இடை நிலைப்பளிகளில் தமிழை இழக்கிறோம். மின்னல் எப் எமில் வானொலி தமிழ் அடையாளத்தை இழந்து புதிய இந்தியன் தமிழில் பேசுதாம். ஒரு மொழிக்கும் சொந்தமில்லாத வெறும் 500 ஆண்டுக்கால வரலாற்றைககொண்ட இந்தியன் என்ற நாட்டில் முந்திப்பிறந்த தமிழுக்கும் தமிழனுக்கும் மின்னல் குமரன் புதிய வரலாறு ஒன்றை ஏற்றி வைக்க நாமெல்லாம் ஊமைகளாக இருக்க முடியாது.
இப்படித்தான் பதவிக்கும் புகழுக்கும் பணத்துக்கும் சோரம் போன பல தமிழ் துரோகிகளை தமிழர்கள் சந்தித்து சலிப்பு அடைத்துவிட்டோம்.
தனி ஒரு குமரனுக்கு இப்படி ஒரு தைரியம் வர யார்க காரணம் என்ற ஆய்வில் ….அவர்தான் என்றாகிய விந்தையில் விரக்தி கொண்டுள்ளோம்.
தி எச் ராகவில் தமிழை தொலைத்து அங்கு ஒரு கோட்டான் கூட்டம் எஞ்சொயீ என்கிறது. அஸ்ட்ரோ பெர்னாமா காசு இல்லை என்று திட்ட மிட்ட தமிழ், தமிழர் அழிப்புகளை அரங்கேற்றி விட்டுள்ளது. 524 தமிழ்பள்ளிகளில் தமிழாம். இடை நிலைக்கு வந்ததும் ஆப்பாம்.
நிலவை காட்டி சோறு ஊட்டிய அவ்வை கதை இன்று அரசியல் வேசமிட்டு காக்கை கூட்டங்கள் எங்கள் ஜாதி என்ற பாரதியின் பாடல்கள் எல்லாம் ஏட்டின் காயங்களாக இரவோடு இரவா இந்தியன் மின்னல் எப் எம் என்றாகி விட்டது.
மலேசியாத தமிழர்கள் இந்தியனா ? அப்போது இந்தியாவில் இருந்து வந்த இதரவர்கள் பேசும் மொழிக்கு என்ன வானொலி ? இந்தியாவின் இந்தியன் வரலாறு என்ன? தமிழர்களின் மொழி வரலாறு என்ன ? உலகின் 120 மில்லியன் தமிழர்களின் மொழியில் இந்தியன அல்லது ஹிந்தி, சமஸ்கிருத மொழியிகளின் கலப்பு என்ன? தமிழன் தமிழ்பபடைப்புகள் ஏன் இந்தியனாக சித்தரிக்க வேண்டும் குமரா ?
அவன் இரவில் பெற்றான் சுதந்திரம் இன்னும் விடிய வில்லை என்கிறான் தமிழகத் தமிழன். மலேசியா தமிழனுக்கோ சுதந்திரம் என்பது மொழி, இனம் இந்த இரண்டும் இந்தியன் பெட்டைககோழிக்கு கூட்டிக்கொடுத்த முட்டையாய் அழுகும் நிலைக்கு நீதான் காரணமா?
தமிழ் மொழி அரங்கம் இருண்ட குகையாக கதி இல்லாமல் பலி வாங்கல் நடக்கிறது இதற்கு இப்போது இந்தியன் மின்னலுக்கு நீ ஒரு இடி அமினா ?
உலகில் எத்தைனையோ தமிழினத தலைவர்களின் வரலாறுகளை படித்தோம் . இவரைப்போன்ற தூயத் தமிழ்த தலைவரை எங்கும் காணோம். ஐயா பெரியவர் குணா அவர்களை இந்த நூற்றாண்டின் தமிழனினத தலைவராகவும். தமிழ் மொழி தலைவராக ஐயா மொழி ஞாயிறு தேவ நேயர் பாவணார் அவர்களை தமிழ் மொழிததலைவராகவும் என் தலைவன் மேதகு பிரபாகரனை தமிழீழத் தமிழ் வீரனாக் பார்க்கிறோம்!
இந்த மூவரையும் இந்த நமது தமிழா இனம் ஏனோ அறியாமல், தெரியாமல், புரியாமல் யாருக்கோ விழா எடுக்கும் பேதமையை காண்கிறோம். இந்நாட்டில் தமிழ் எங்கள் உயிர் என்று போராட்டம் நடத்திய தமிழ் வேல் அவர்களை மறந்து விட்டோம். இன்று கண்ணதாசனுக்கும், வாலிக்கும் விஸ்வ நாதனுக்கும் சினிமா நாதம் பாடுகிறீர்கள் .
தமிழ் மின்னல் எப் எம் இன்று இந்தியன் மின்னல் எப் எம் என்று மாற்றிய மின்னல் குழப்பி குமரனை யாரும் ஏதும் கேற்க முடியாத வக்கற்ற சமுதாய தவளைகளை வைத்து குமுறும் நிலையில் எதிர்த்து குரைக்க ஒரு……. காணோம்.
வருவோம் தயாரகுங்கள்.
-தமிழர் குரல் / தமிழர் சங்கம்
பொன் ரங்கன்
நன்றி! பொன் ரங்கரே! அப்பன் பெயரை வைத்தால் கூட நான் அவர் சொன்னதைக் கேட்டதில்லை என்று சொல்லும் அருமையான மகன் நீர்! உங்கள் கருத்தில் தான் குறை என்று சொல்லுகிறோமே ஒழிய மற்றபடி உங்களைப்பற்றியல்ல. அப்பன் சொன்னதையே நீங்கள் கேட்டதில்லை; நாங்கள் சொல்லுவதையே நீங்கள் கேட்கப் போகிறீர்கள். வருத்தமே!
இப்பகுதியில் முதன்மை /மூல படைப்பை கூறியவர்/எழுதியவர் திரு .பொன் ரங்கன் .பொது நலதிற்கும்,மக்களின் மேன்மைக்கும் குறிப்பாக தமிழரின் வாழ்வியலுக்கும் ,வளர்சிக்கும் ,நல்ல படைப்புகள் அளிக்கும்
உங்களுக்கு வாழ்துக்கள் .தமிழை தாய் மொழி ,என் மூச்சி,உயிர் என்று கூறும் நீங்கள்…. தமிழ் தாயை …….உங்கள் தாய் மொழி பாவம். கருதுக்கள் கூருவது தனிப்பட்ட உரிமை ,நன்மையை போற்றுவோம் ,தீமையை திருத்தி கொள்வோம் .பிறரின் பிறப்பை
பற்றி பேசுவது அல்ல தனி மனிதர் உருமை . வாழ்க தமிழ் .பாவம் தமிழன் …….
மலேசியா மக்கள் சார்பில்
தமிழர் சங்கம். தமிழர் குரல் ,தமிழர் மையம்
மலேசியா தமிழர் சங்கங்களின் பேரவை
மலேசியா இந்தியர் இயக்க பேரவை. ( பொன் ரங்கன் ) , இப்படியெல்லாம் தன்பட்டம் அடித்து விட்டு இன்னொருவர் தாயை அவமதிகிறாயே, உனக்கு யார் இந்த பொறுப்பை கொடுத்தார் ?
உலகத் தமிழர்கள் 12 கோடி ,தமிழனுக்கு சொந்த நாடு இல்லை . அதில் மலேசியாவில் 24 லட்சம் , அதில் ஒரு வானொலி தமிழ் பிரிவை ,இந்திய பிரிவு என தமிழன் அல்லாத யாரோ ஒருவர் மாற்றும் பொது வேடிக்கை பார்த்தும் இங்கே கூச்சல் இட்டும் என்ன பயன் ? இதிலிருந்து தமிழர்கள் நிலை என்ன வென்று தெரிய வில்லையா? தமிழனின் முட்டாள் தனத்தை சுட்டி காட்டியதர்கு என் தாயை இழிவு செய்ய இந்த பொன் ரங்கன் யார் ? .ஆசிரியர் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு ! நான் பொன் ரங்கன் அவர்கள் எழுதிய கட்டுரையை நான் தவறாக விமர்சிக்க வில்லை .இங்கே Malaysia தமிழ் வானொலி நிகழ்ச்சிக்கு வந்த கேடு நிலைக்கு கூட்டி சென்ற குமரனுக்கு ஏதாவது பாடம் கற்பிக்க வழியையும் ,மலேசியா தமிழ் இனத்தின் இயலாமையை பற்றியும் இங்கே விமர்சித்தேன் .அது தவறா ? ஆசிரியர் அவர்களே உங்கள் தணிக்கைக்கு அளவே இல்லையா ? .முன் கூறிய கருத்தை தணிக்கை செய்ததில் வேறு காரணம் ஏதும் இருக்கலாம் என நான் அறிவேன், ஆனால் இதை தயவு செய்து தணிக்கை செய்யாதிர்கள் ஐய்யா .என் கருத்துக்களுக்கு நானே பொறுப்பு .நன்றி
மின்னல் எப் எம் 1970 /80 களில் மாலை ஆறு மணிக்கு இனிமையான் பழம்பாடல்களை செவிக்குளிர கேட்டு ரசித்தோம் இபொழுதுதெல்லாம் பழம்பாடல் என்றபெயரில் கடமைக்காக 70 /80 ஆண்டுப் பாடல்களை ஒலிப்பரப்பரப்புகிரார்கள் 1940,/50 /60ஆம் ஆண்டு பாடல்களை ரசிக்கும் முதியவர்களும் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும் . முதியவர்களை திருப்திப்படுதுகிரார்களோ இல்லையோ காலையில் இந்திப்பாடல்களைப்போட்டு பையாக்களை (பங்களா) சந்தோஷப்படுத்தி விடுவார்கள் .
எங்கெங்கே தமிழன் சண்டை அடித்து கொள்கிறானோ அங்கெல்லாம் தமிழனுக்கு சரிவு ஏற்படுகிறது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும் ..வெகுளி இன்னாச்சொல் இல்லாமை நன்று என்பது வள்ளுவன் வாக்கு .
ஒரு சிறிய விளக்கம்.பொன் ரங்கரின் மேல் எனக்குக் கோபம் இல்லை. அவர் ஒரு மறைக்கப்பட்ட ஒரு பிரச்னையை வெளிக் கொணர்ந்தார். அதற்கு நன்றி. காரணம் நான் வானொலி ரசிகன் அல்ல. ஆனாலும் நான் எப்போதுமே தமிழன் தான்.என்னுடைய ஆதங்கம் எல்லாம் அவர் கையிலேயே பல இயக்கங்களை வைத்திருக்கிறார். கடைசியாக ஒரு தமிழர் அமைப்பையும் சமீபத்தில் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் எந்த அமைப்பும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. கை கொடுக்காது என்பது அவருக்கே தெரியும். ஆகக் கடைசியில் நம்மைப் போல ஒரு சராசரி வாசகனாக அறிக்கை விடுகிறார். இப்போது இந்தப் பிரச்னையை தமிழ்ப் பத்திரிக்கைகளும் கையில் எடுத்திருக்கின்றன. இனி கண்டன அறிக்கைகள் வெளியாகும். ஆனால் இதற்கெல்லாம் அந்த குமரன் மசிபவர் அல்ல. காரணம் அவரும் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்திருப்பார். இதனை எப்படிக் கையாள வேண்டும் என்பது தான் நம் முன்னே உள்ள பிரச்சனை. எப்படி?
ஆபிரகாம் அவர்களே எனக்கும் பொன் ரங்கன் மீது எந்த கோபமும் இல்லை .ஆனால் ஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் அவர் ஏன் மற்றொரு வாசகரின் தாயை இழிவு படுத்தி பேசும் பண்பற்ற அவரின் செய்கையைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . இருந்தாலும் எனக்காக நியாயத்தோடு கருத்துக் கூறிய தோழர் ஆபிரகாம் தேரா ,வெள்ளியூர் முருகன் ,மற்றும் தமிழர் நந்தா அவர்களுக்கும் நன்றி .ஒரு வேலை புண்ணாக்கு ரங்கனை போன்ற மனிதர்களுக்கு ஜால்ரா அடிக்கும் வாசகர்கள் யாராவது இங்கே இருந்தால் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .ஆசிரியர் அவர்களே வழக்கம் போல் இந்த கருத்துக்கு நானே பொறுப்பு .
நாம் தலைவர்கள் அனைவரும் பதவி வெறியன்கள்…நன்றி கேட்ட நாய்கள் ..
இலக்கில் குறி வையுங்கள் , பலத்தை வீண் சர்சையில்
வீணாக்கி விடாதிர்கள். ரங்கன் உங்கள் உணர்வுகளை மதிப்பு கொடுக்கிறீன் . ஆனால் பொருள் சப்ஜெக்ட் மாறி அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதால் நோக்கம் சிதறிவிடும்