சென்னை: தனது படத்தின் போஸ்டரை ஒட்ட வெளியே சென்றபோது, விபத்தில் பலியான ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் புலி. இப்படம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியானது.
புலி வெளியான அன்று விஜய்யின் ரசிகர்களான சவுந்திர ராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் ‘புலி’ படத்தின் வாழ்த்து போஸ்டர் ஒட்ட சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகினர். இச்சம்பத்தை அறிந்த விஜய் இன்று காலை ஆறுமணியளவில் சவுந்தர்ராஜன் மற்றும் உதயகுமார் இருவரின் வீடுகளுக்கும் நேரில் சென்று பெற்றோரிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.
உயிரிழந்த ரசிகனின் அம்மாவை கட்டியணைத்து அழுத விஜய் நடந்த சம்பவத்தை நினைத்து வருந்த வேண்டாம் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
மேலும், அவர்களது குடும்பத்தினரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கும்படியும், நான் உங்களுக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த செயல், அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் வந்த தகவலை அறிந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு பெருந்திரளாக கூடி விட்டனர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
கத்தி பட வெளியீட்டின் போதும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளுவது அவ்வளவு எளிதா?
சினிமா நடிகர்களுக்கு இப்படிபட்ட ரசிகர்கள் இருப்தால்தான் பெரிய நடிகர்களின் அந்தரங்கம் தெரியாமலே போகிறது . ஆண் பிள்ளைகள் முதலில் விட்டுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர இப்படி உபத்திரவமாக இருக்க குடாது . சுவர்கள் கலை இப்படி அசிங்கபடுதுவதை விட ………….
விஜய் பார் உன் ரசிகனின் வீட்டை நீ மாளிகையில் இருக்காய் அனால் அவனோ ஓல குடுசையில் இருக்கான்……….. இனியாவது திருந்துமா நம் இனம்
நம் இனம் திருந்துவது என்பது 1000 பெரியார் வந்தாலும் முடியாது. காரணம் தமிழ் நாடு தமிழர்களுக்கு இன மொழி பற்று அறவே கிடையாது. அங்கு நடக்கும் அநியாயங்களுக்கு அளவே கிடையாது. சோடா புட்டி தமிழன்கள்.
விஜய் அவர்களுக்கு நல்ல மனசு உள்ளத்தால் வந்து கண்கொண்டு செல்கிறார் .நல்ல மனசு அவருக்கு இருக்கிறது. எல்லா விசயத்தையும் குறை pesuvatthu சரி அல்ல. அவர் வந்து கண்டு செல்வது நல்ல ரசிகரை மதிக்கும் பன்பு தானே …அவரை உயர்தி பேசுவதால் நான் ஒன்றும் அவருக்கு ரசிகன் இல்லை .நான் எப்போதும் அஜித் ரசிகரே …வாழ்கையில் எவ்வளவோ கஷ்டப்படும் மக்களுக்கு சினிமா ஒரு வித அறுதல் தானே.ஒருத்தர் உயர்ந்த இடத்தில இருப்பதும் .தாழ்ந்து போவதும் அவருடைய சுய அறிவே காரணமாக இருக்கிறது. பயன் படுத்தாமல் போவது அவர் அவருடைய தப்பே தவிர பிறரின் செயலால் அல்ல. சரியான படிப்பறிவு இருந்திருந்தால் அவர் ஏன் போஸ்டர் ஓட்ட pooi அடிபட்டு சாகனும்..நல்ல படிப்பறிவு உள்ளவர்கள் அப்படி செய்வது இல்லையே.சினிமாவுக்கு போஸ்டர் ஓட்டுவது அவர்களின் பொறுப்பு .இவர்கள் ஏன் முக்கை நுழைத்து இப்படி பலிகடவாக ஆகணும்…ஈது ஏன் வாய் சும்மா இருக்காமல் முனங்குகிறேன் அவளவுதான் .