மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு அடுத்த வருடத்தோடு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன் எல்லையை எட்டும் தறுவாயில் தமிழ்க் கல்வியோடு தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மேலும் வலுசேர்க்க அறிவுத்திறன் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை சிலாங்கூர் மாநில அரசுடன் கூட்டாக இணைந்து சிலாங்கூர் தமிழ்ச் சங்கமும், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியமும், தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கமும் நடத்துகின்றனர்.
தாய்மொழி பள்ளியில் கல்வி கற்பவர்களின் அறிவுத்திறன் ஒரே மொழிப்பள்ளியில் கல்வி கற்பவர்களை விட அதிகமாக இருக்கும் என்கிறது ஆய்வுகள். இதில் உள்ள உண்மையை வெளிக்கொணர இந்த அறிவுத்திறன் போட்டியை நடத்துவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப்போட்டியில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் கல்வி பயின்ற மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இது ஓர் ஆய்வு சார்புடையதாக இருப்பதால் இதில் பங்கெடுக்க 200 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.
தமிழ்ப்பள்ளியில் பயின்று தற்போது படிவம் ஒன்று முதல் படிவம் 5 வரையில் பயிலும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் எதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை. சமயோசித அறிவும், அதிகமான புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும், பொது அறிவில் ஆர்வம் உள்ள தருக்க சிந்தனை (logical thinking) கொண்டவர்களாகவும் இருப்பது நலம்.
இந்த போட்டி அடுத்த மாதம் 7-ஆம் தேதி சனிக்கிழமை (7-11-2015) காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையில் கிள்ளானில் உள்ள சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் நடைபெறும்.
இதற்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை 4.12.2015-இல் மிட்லண்ஸ் மாநாட்டு மையத்தில் மாலை மணி 6.30 க்கு நடைபெறும். சிறந்த 20 மாணவர்களுக்கு ‘மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி விழா பதக்கங்கள் வழங்கப்படும். பங்கெடுக்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கு பெற ஆர்வம் கொண்ட மாணவர்கள், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தங்களின் பெயர், அ.கா. எண், படித்த தமிழ்ப்பள்ளியின் பெயர், கைபேசி எண் ஆகியவற்றை அனுப்பவேண்டும். முதலில் பதியும் 200 மாணவர்களுக்குத்தான் வாய்ப்பளிக்கப்படும். பதிவுக்கான இறுதிநாள் 30.10.2015 ஆகும்.
இது சார்பாக மேல் விபரங்கள் வேண்டுவோர் கீழ்க்கண்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
திரு உதயசூரியன் – 0162108760, திரு சேகரன் – 0162510752, திரு முருகன் – 0193416685.
அருமையான முயச்சி
! வாழ்துக்கள்
மற்ற மாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் சாத்தியம் இருக்கிறதா என்பதை மாநில மேலாளர் வாரியங்கள் முயற்சி செய்யும் என நம்புவோம். சிலாங்கூர் மாநிலத்திற்கு நமது வாழ்த்துகள்!
நல் வாழ்த்துக்கள் பல கோடி . நம் மொழி எந்நாளும் செழித்து ஓங்கி வளர நல் வாழ்துக்கள் பல .
நல்ல திட்டங்களை மனமார பாராட்டுவோம் & வளர்ப்போம்
நல்ல முயற்சி. மாணவர்கலை பட்டை தீட்ட அறிய வாய்ப்பு. இலைமறை காயாக உள்ள நமது மாணவர்கள் பல துறைகள்ளுக்கு கால் எடுத்து வைக்க பல் வேறு பிரிவாக நடத்தி சாதனை மாணவர்களை உருவாக்க வாழ்த்துக்கள்.
இது போன்ற அறிவு வளர்ச்சிக்கு தேவையான இந்நிகழ்ச்சிக்கு அஸ்ட்ரோ நிறுவனம் அதரவு வழங்க வேண்டும். இது போன்ற நிகழ்சிகள் பட்டி தொட்டி வரை சென்றடைய வேண்டும். அஸ்ட்ரோ நிறுவனம் முன்வருமா?
இது போன்ற நிகழ்சிகள் பட்டி தொட்டி வரை சென்றடைய வேண்டும். அஸ்ட்ரோ நிறுவனம் முன்வருமா?
இத்தகைய முயற்சியை வரவேற்கின்றோம். பிற மாநிலங்களில் இத்தகைய அறிவுத் திறன் போட்டியை வட்டார முறையில் நடத்தி வெற்றிப் பெற்று வருபவர்களுக்கு மாநில ரீதியில் இறுதி போட்டியாக வைத்தால் இது தமிழ் படித்த மாணவர்களிடையே அறிவுத் திறனில் ஒரு நல்ல மனமலர்ச்சியை ஏற்படுத்தும். பிற மாநில தமிழ் மொழி கலை கலாச்சார இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது. தமிழுக்கு நாம் செய்யும் நற்தொண்டாகும். இதுவும் நம்மவரிடையே தமிழ் கல்விக்கு முக்கியத்துவத்தையும் ஆர்வத்தையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய நிகழ்வுகளில் அரசியலைக் கலக்காமால் இருந்ததால் நன்று.
இதுப்போன்ற அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள்எல்லா மாநிலங்களிலும் நடந்தால் அதிக மாணவர்கள் பயனடைவார்கள் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் !
200/300 ஆண்டு ஹிந்துக்கள் பள்ளி என்பதைவிட,மண்ணின் ஆதிமொழி என்று ஆய்வு துவக்கினால் பின் காலத்தில் கலக்கமில்லை,நாம் வாழும் வட்டத்தில் ஆலயம் பள்ளி நிச்சயம் நிர்ணயிக்கபட்டிருக்கும் ,வட்டத்தில் அடங்காமல் ஆய்வுக்கு பின் பட்டாபிஷேகம் செய்யின் வுயர்வு வாழ்க நாராயண நாமம்.
இது போன்ற நிகழ்சிகள் பட்டி தொட்டி வரை சென்றடைய வேண்டும். அஸ்ட்ரோ நிறுவனம் முன்வருமா?
தமிழ் மொழி,மண்ணின் ஆதிமொழி! இப்போதான் ஒரு விஷயத்தை
உருப்பிடிய சொல்லியிருக்கே! kayee ammu வாழ்த்துக்கள்…
இவ்வாறான நிகழ்ச்சிக்கு அஸ்ட்ரோ முழுமையான ஆதரவு வழங்க முன் வர வேண்டும் . அஸ்ட்ரோ கும்மாளம் போடா மட்டும் அல்ல. இனமும் மொழியும் வளர.! நமது குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகம் வழங்க ! அன்புடன் .
ஆஸ்ரோ ராஜாமணிக்கு சென்னை த5ஹில்லு மு7ள்ளுகளை வைத்து பணம் பண்ணத்தான் நேரம் . பன்னாடை . தண்டாயுதமும் வந்தார் தமிழூகு தமிழர்களூகு எத்தன சேவை செய்தார் . இன்று மலேசிய பதின்ம வயதினரை செந்தூல் ரயில் நிலையத்தில் தெருவில் ப்ளாட் பார்த்தில் மற்றவர்கல் சிரிக்க ஆடவ்வைத்து தேர்வு நடதுகிறார் . பார்த்து வீதனைப் பட்டவன் . காசு பண்ணலாம் அதுக்கு நாங்களா கிடைச்சோம.