நடிகர் விஷால் வீடு அண்ணா நகர் ‘டி’ பிளாக்கில் உள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் அதன் பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட திரண்டு வந்தனர்.
அண்ணாநகர் 4–வது பிரதான சாலையில் கோரிக்கை கோஷங்களை முழங்கிய படி திடீரென விஷால் கொடும்பாவியை எரித்தனர். பின்னர் அவர்கள் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 50 பேர் கைதானார்கள்.
போராட்டம் குறித்து தமிழக முன்னேற்றப்படையினர் கூறியதாவது:–
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றும் கோரிக்கையை விஷால் உதாசினப்படுத்தி விட்டார். இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும். மேலும் காவிரி பிரச்சினை உள்பட தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று அவர் கூறினார்.
இதற்காக விவசாயிகளிடமும், காவிரி பிரச்சினைக்காக உண்ணா விரதம் இருந்த திரையுலகத்தினரிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-http://cinema.maalaimalar.com
விஷாலுக்கு சரத்தை பிடிக்காது
அவளவுதான்
சங்கமாவது மயிராவது
தமிழ் நாட்டுக்கு தண்ணீரா ? கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட விஷால் ரெட்டிக்கு அதெல்லாம் கவலையில்லை .ஹ்ஹீ முட்டாப் ….டைகள் தமிழர்கள் .