மூத்த எழுத்தாளர் கி ராஜநாராயணனை நேரில் சந்தித்து அவருக்கு மரியாதை செய்தார் நடிகர் கமல் ஹாஸன். நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு அறிந்ததே.
எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். எப்போதும் தன்னைச் சுற்றி எழுத்தாளர்களும் கவிஞர்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார் கமல் ஹாஸன்.
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வருடம் தனது 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுவையில் வசிக்கும் மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணனை நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அவரை கௌரவித்தார்.
இந்த சந்திப்பின் போது ‘தூங்காவனம்’ திரைப்படத்தின் வசனகர்த்தா சுகாவும் உடன் இருந்தார்.
ஓர் எழுத்தாளரை மதித்து அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்தற்காக தலை வணங்குகிறேன் தலைவா! நீர் நீடுழி வாழ்ந்து நிறைய எழுத்தாளர்கள் உங்களால் பயனடைய வேண்டும்!
அமாம் தன் படம் வெளி வர போகிறது என்று தெரிந்தும் ரு 1 லட்சம் கொடுக்கிறாராம் ,அதை வைத்துக்கொண்டு சரியாகக கூட முடியாது ,,இதே தமிழ் ஈழ மக்களுக்கு ரஜினி 1 கோடி வெள்ளி கொடுத்து உதவினாரே ,இத போடுறதுக்கு வலிக்கிடாடா உங்களுக்கு ??இதை கேளுங்கடா https://www.youtube.com/watch?v=qQvQqL7eWFM