கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டோன்: நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

kamal-hassanசென்னை: கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டோன். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும் என நடிகர் கமல் ஹாசன் தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல் ஹாசனின் 61வது பிறந்தநாள் விழா, சென்னை அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கமல் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகளை கமல்ஹாசன் வழங்கினார்.

விழாவில் நடிகர் கமல் பேசுகையில், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆரோக்கியம் கருதியே நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்.

பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். 30 ஆண்டுகளுக்கு பின்னர் பூச்சிகள் உணவு மிகப்பெரிய வியாபாரமாகவும் ஆகலாம். சாப்பிட உணவே இல்லாமல் இங்கு பலர் இருக்கிறார்கள். யாருக்கும் மெனு கார்டு கொடுக்க வேண்டாம் ஆவேசமாக பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், விருதுகளை அரசு எனக்கு கொடுக்கவில்லை. அறிஞர்கள் தேர்ந்தெடுத்து தந்த விருதை திரும்ப தந்து அவமதிக்கமாட்டேன். பேச்சுரிமை பாதிக்கப்படும் என்றால் குரல் கொடுப்பேன்.

இப்படி பேசுவதால், நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம்.

என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமல் ஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

tamil.filmibeat.com